Saturday, February 5, 2011

அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)தோல்வி ,வலி ,அவமானம்            
   மூன்று அத்தியாயம் கொண்ட இக் கிறுக்கலை தொடர்ந்து   படியுங்கள் (இது கற்பனை கதையல்ல)


இன்று தேர்ச்சி அறிவிப்பு
பள்ளி முற்றத்தில் ஆவலாக
கூடி இருந்தார்கள் மாணர்வர்கள்


பள்ளி அறிவுப்பு பலகையின்
தேர்ச்சிப் பட்டியலில்
என்பெயரை காணவில்லை


இந்தவருஷம் தோத்திட்டியா
மறுபடியும் அதே வகுப்புதானா
கேலிசெய்தனர் சகமாணவர்கள்


அப்பா அம்மாவிடம்
எப்படிச் சொல்வேன்
தேர்வில் தோற்றத்தை


அடிவயிற்றில் புளியயை
கரைக்குது என்பார்கள்
அதே நிலையில் நான்


தேறிய சகமாணவர்கள்
இனிப்புக்கள் உபசரித்து
ஆனந்த கொண்டாட்டங்களில்


சுடுநீரில் தவறிவிழுந்த
பூனையைப் போல்
கூனிக்குறுகி நிற்கிறேன் நான்


மாலைகழிந்து இரவுவந்தும்
வீட்டுக்கு பயணிக்க
மறுத்தது என் கால்கள்


நான் வீடுபோகும்முன்
அம்மாவின் காதுகளில் எட்டியது
என்னைப்பற்றிய செய்தி


நெஞ்சுமுழுக்க பயமும்
நடுங்கிய உடலுமாய்
வீட்டு முற்றத்தில் நான்


எங்கடா போனா அக்கா
ஏன் இவ்வளவுநேரம் அண்ணன்
எந்த கேள்வியுமின்றி விழுந்தது
அம்மாவின் முதல் அடி


கைவலிக்கும் வரை அடித்தும்
அடியின் வலி தெரியவில்லை
ஏற்கனவே மறத்துபோயிருந்தது உடம்பு


தெருவே கூடி நின்று
அடியை ரசித்து நிற்கையில்
உள்ளுக்குள் ரணமாக வலித்தது


ஒஅப்பனுக்கு என்னபதில் சொல்லுவேன்
இப்படி தோத்திட்டு வந்துநிக்கிறானே
புலம்பியபடி அம்மாவின் அழுகை


இரவில் உணவு சமைத்திருந்தும்
உண்ணக் கசந்து உண்ணாவிரதம்
கிடந்தது ரத்த உறவுகள்


வந்த உறவுக்காரங்களோ
ஆறுதல்கள் சொல்லி
திரும்பிச் சென்றார்கள்


வலிகளை சுமந்துகொண்டு
எப்படி உறங்கின்னேன் தெரியவில்ல
வழக்கம் போல விடிந்தத
மறுநாள் காலை


இரண்டு நாளாகியும்
பேசாத அம்மாவின் முகம்
தனிமையில் உள்ளுக்குள் அழுதேன்


வகுப்பறைகளை முடுகிட்டும்
படிப்பை கவனிக்காலமும்
ஊரைச் சுற்றியதன் பலன்


நித்தமும் காலை மலைகளில்
புத்தகங்கள் சுமக்கும்
கழுதையாக இருந்திருக்கிறேன்


இன்னும் சில தினங்களில்
திறக்கும் பள்ளிக்கூடம்
அதேவகுப்பு புதிய சகாக்கள்


ஆசிரியரும் சகாக்களும்
என்னோக்கி நகைக்கும் காட்சி
சிந்தனைகளில் வந்துபோனது


ஏச்சுக்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளியிட
பள்ளி உறவை முறிப்பெதேன்று
சுயமுடிவு எடுத்தேன்


அவமானங்களை மறக்க
ஊரையும் வீட்டையும் துறக்க
முடிவு கொண்டேன்தொடரும். . . . .
7 comments:

 1. கடந்தகாலத்தை அசைபோடும் வரிகள் அத்தனையும் உள்ளத்தில் பதிந்து கிடக்கின்ற வைரவரிகள் தொடந்து பகிருங்கள் தோழரே அன்புபாராட்டுக்கள்

  ReplyDelete
 2. அருமை அடுத்த பதிவிற்காக எதிர்பார்து காதிருக்கிறேன்

  ReplyDelete
 3. அ .செய்யது அலி
  ஊருக்கு நல்லது சொல்வேன் ஸார்,

  என்ன சொல வாரிக?

  ReplyDelete
 4. இன்னுமொரு உலக இயல்பான சம்பவங்கள்... அதன் அடர்த்தியை அதிகமாக்கி சோகம் தெறிக்க கோர்த்து வந்த வரிகள்... அருமை நண்பரே...

  தொடருங்கள்...!

  ReplyDelete
 5. ரசனை மிகுந்த வரிகளை மிண்டும் ஒரு முறை படிக்கத் துண்டி விட்டது தொடர்ந்து இரண்டாவது முறை வருகிறேன் கவியே
  தொடருங்கள்.

  ReplyDelete
 6. //ஆசிரியரும் சகாக்களும்
  என்னோக்கி நகைக்கும் காட்சி
  சிந்தனைகளில் வந்துபோனது //

  சின்ன பசங்க படிப்பு வரலைனு வீட்டை விட்டு போறதுக்கு இதுதான் காரணமென நினைக்கிறேன்...!

  ReplyDelete
 7. அவமானங்களை மறக்க
  ஊரையும் வீட்டையும் துறக்க
  முடிவு கொண்டேன்  தொடரும். . . . .

  நல்ல சிறப்பான ஆக்கம் பின்பு என் தொடரும் ...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...