Sunday, February 6, 2011

அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
பயணம்,  இருள், பயம்


பள்ளியும் திறந்தது
புதிய வகுப்பறை மகிழ்ச்சியில்
சக மாணவர்கள்


அவரவர் நண்பர்களுடன்
பேசிக்கொண்டு இருதார்கள்
தனிமையில் மௌனமாக நான்


என்னுடன் பேசத்தயங்கும் சகாக்கள்
யாராவது பேசமாட்டார்களா
ஏங்கியது என் மனம்


கூட்டத்தில் இருந்தும்
தனிமையை உணர்ந்த
ரணமான நாட்கள்


இரண்டுவாரங்கள் உருண்டோடியது
புத்தகம் வாங்க போகிறேன்
அக்காவிடம் பொய்சொல்லி
பணம் வாங்கினேன்


வார விடுமுறை கழிந்து
வழக்கம்போல பள்ளி புறப்பெட்டு
பள்ளிக்குச் செல்லவில்லை


கையில் முப்பது ரூபாயும்
போட்டிருந்த பள்ளியுடையுடன்
பஸ் ஏறினேன்


 எல்லாரும் ஒரு ஊரைச்சொல்லி 
பயணசீட்டு வாங்கினார்கள் 
அதையே நானும் கேட்டேன்  
கையில் மீதம் பத்துருபாய்


இரண்டு மணி நேரத்திற்குப்பின்
ஒரு நகரை சென்றடைந்தது  
மலைகளுக்கு இடையேபயணித்த பேரூந்து


கடைசி நிறுத்தத்தில்
எல்லாரும் இறங்கிச் சென்றார்கள்
கடைசி பயணியாய் நானும்


ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த
அவ்வூர் கேரளா மாநிலத்திலுள்ள
ஒரு நகரம் என்பதை உணர்ந்தேன்


புதிய இடம் மனிதர்கள்
மொழியும் விளங்கவில்லை
சற்று திகைத்து நின்றேன்


எங்கே செல்கிறோம் என்று
திசை தெரியாமல் நடந்தது
மனமுடன் கால்களும்


சூரியன் மறைந்ததால்
வானமும் கருத்து
சுற்றிலும் இருள் சூழ்ந்தது


நடந்து களைத்ததால்
தாகமும் பசியும்
ஒன்றுகொன்று போட்டியிட்டது


தனித்து நின்றிருந்த
சாலையோரக் கல்லின்மேல்
சற்று அமர்ந்து கொண்டேன்


மீதமிருந்த பத்து ரூபாயையும்
பசி விழுங்கிக் கொள்ள
வெற்றுக் கையுமாய் நான்


அங்கும் இங்குமாய் கூடமாக
உலவிக் கொண்டிருந்த
மனிதர்களும் மறைந்து போனார்கள்


 சாலை விளக்குகள் உயிர்த்தெழுந்தது
நெடுஞ்சாலையில் வாகனத்தின்
நெரிசலும்   குறைந்து


மனிதர்களின் குரல் ஒலிகள்
சிறுகச் சிறுக துலைந்துபோக
சுற்றும் அமைதி நிலவியது


மீண்டும் பசியில் வயிறு
இருளோ என்னை பயமுறுத்தியது
விழியில் நிரம்பிவழிந்தது கண்ணீர்


ஏன் எதற்கு என்றுகேட்காமல்
என் அழுகையை வேடிக்கைபார்த்தபடி
சிலர் கடந்து சென்றார்கள்


இருளின் நாழிகையின் ஏற்றம்
மீண்டும் ஒருவித பயம்தர
உள்ளுக்குள் இறைவனிடம் மன்றாடினேன்


அறிமுகம் இல்லாத் நகரம்
அடையாளம் தெரியாத மனிதர்கள்
தெரியாத மொழி


என்செய்வதறியாது நிலைகுலைந்து
தனிமரமாய் நிற்கையில்
என்னோக்கி ஒரு குரல்


 யாரப்பா ஏன் அழுகிறாய்
என்  அழுகையை நிறுத்தியது
 அந்த முதியவரின்  அவ்வார்த்தைகள்


தொடரும் . . . . 
2 comments:

  1. பள்ளிப்பருவ நினைவுகள் அருமை ... தொடர்ந்து ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  2. வீட்டை விட்டு போற சின்ன பசங்களோட நிலமை இதுதான்/...! அருமையா எழுதிருக்கீங்க..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...