Saturday, February 12, 2011

வேதக் கோட்பாடு



ஒரு மதத்திற்கு குலத்திற்கு
சாதிகளுக்கென தனித்தனியாக
இறைவன் வேதங்களில் சொல்லாத
சம்ரதாயக் கோட்பாடுகளை
சுயமாய் உயிர்த்தெளுப்புகிறான்
ஆறாம் அறிவுகொண்ட மனிதன்


தான் கொண்ட அறிவினால்
இறைவனால் எழுதப்பட்ட
வேதக் கோட்பாடுகளை
தனக்கு இணங்க திருத்தி
கிறுக்கியவைகளில் குழம்பி
வேதங்கள் மேல் பழிசொல்கிறான்


ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


எழுப்பிய கோட்பாடுகளால்
குருதிகள் ஒழுக்கி
உயிர்ப் பலி கொடுத்து
மரணக் காரணங்கள் சொல்கிறான்
மதி இழந்த மனிதன்


மரணத்தை முதமிட்டவனுக்கு
இறைவன் உணர்ந்திருப்பான்
வேதக் கடப்பாடுகளை
மாண்டவன் திரும்பாததால்
மெய் அறியாத மனிதர்களோ
இன்றும் தர்க்கித்துகொண்டே . . .

6 comments:

  1. உங்கள் கவிதை வரிகளை நண்றாக உணர்கிறோம்
    இன்றய நிலை பற்றியும் அதிகமாக வரைந்துள்ளீர்கள்
    நாங்களும் கண்களால் காண்கிறோம் சில வற்றை
    உண்மை வரிகளை உதிர்த்த கவிவே நன்றி
    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மதங்களும் , மதங்களின் கோட்ப்பாடுகளும் மனிதனை நல்வழிப்படுத்தவே தோன்றியிருக்க வேண்டும்... ஆனால் இன்று
    //எழுப்பிய கோட்பாடுகளால்
    குருதிகள் ஒழுக்கி
    உயிர்ப் பலி கொடுத்து
    மரணக் காரணங்கள் சொல்கிறான்
    மதி இழந்த மனிதன்//

    வரிகள் உண்மையை உரக்க சொல்லுகின்றன...! அருமை தோழரே...!!!

    ReplyDelete
  3. நன்றி செய்து அலி உங்களின் கவிதை
    நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்
    அன்றாடம் நடந்து கொண்டு வரும் நிகழ்ச்சியை எடுத்து காட்டுகின்றது மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கடவுளுக்கு
    பெயர் சூட்டும்
    முரண்பாட்டில்
    மனிதர்கள்
    பிரிந்துபோகாதிருக்கட்டும்.

    ReplyDelete
  5. கடவுளுக்கு
    பெயர் சூட்டும்
    முரண்பாட்டில்
    மனிதர்கள்
    பிரிந்துபோகாதிருக்கட்டும்.

    ReplyDelete
  6. மிகவும் அருமையான அற்புதமான கவிதை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...