Sunday, February 13, 2011

குற்றம் சாடல்




மாற்றானின் ஈனச் செய்கைகள்
உன் உள்ளத்தை உறுத்தி
தவறென்று போதிக்கிறது
மதியின் சிந்தைக்கு

நீ பிழையில் நிற்கிறாய்
அவன் நோக்கி சாடுகியில்
உன் வாக்குகளை புறம்தள்ளி
உன்னையும் உன் குலத்தையும்
தூற்றுவான் அவன்


திருத்த இயலா பிழைவாதிகளிடம்
உன் நற்சொற்கள் கசக்குவதால்
அப்பிழைகளை நீ இழைக்காது
அவனுக்கு நேர் மாறுகாட்டி
அவனை வெட்கப்பட செய்திடு


ற்ப மதுர ருசியில்
மதி மயங்கும் மனிதர்கள்
நன்மை கனியின் சுவையை
நஞ்சுக் கசப்பு என்பார்
இது இயற்கையின் நியதி


ன்தாய் வயிற்று மைந்தனும்
உன் நற்சொல்லை புறம்தள்ளும்
கலி நவ  யுகத்தில்
மாற்றான் செவி மடுப்பானோ. . . ?

10 comments:

  1. அருமையான கவிதை
    தாங்களின் கவிதை இன்று நடக்கும் நிகழ்ச்சியினைக்கொண்டது
    வாழ்த்துக்கள் நண்பரே இன்னும் பொழியட்டும் உம் கவி
    மீண்டும் வாழ்த்துக்கள்...............

    ReplyDelete
  2. //திருத்த இயலா பிழைவாதிகளிடம்
    உன் நற்சொற்கள் கசக்குவதால்
    அப்பிழைகளை நீ இழைக்காது
    அவனுக்கு நேர் மாறுகாட்டி
    அவனை வெட்கப்பட செய்திடு//

    உண்மைத்தான் நண்பரே.. பொறுமையா தாழ்மையா இருக்கனும் என்பதை சொல்லீட்டீங்க அதை கடைபிடிப்போம்.

    ReplyDelete
  3. நண்பரே ...

    ஒருவனின் தவறை நாம் சுட்டி காட்டுகையில்
    அவன் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் இழிவாக பேசுவான்

    அப்படிப்பட்ட மனிதர்களிடம் அவன் தவறை சுட்டிகாட்டுவதற்குப் பதிலாக
    நாம் அந்த தீய செயலை நற்செயலாக மாற்றி உயர்ந்து நிற்றால்
    அவன் வெட்கப்பட்டு தலை குனிவான்

    கருத்துக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. என்ன சொல்வது என்று தெரியவில்லை. பார்த்து பார்த்து வார்த்தைகளை செதுக்கி இருக்கிறீர்கள்..... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்களின் அற்புபுதமான சிந்தனைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. அருமை அருமை கவியே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமை...

    ஒரு நாடு அடுத்த நாட்டை குத்தம் சொல்வதில் இருந்து நாம அடுத்தவங்களை குத்தம் சொல்வது வரைக்கும் இதெல்லாம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  8. கவியே உங்களின் வரிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அசத்தல் வரிகள் நண்பரே

    ReplyDelete
  10. அற்ப மதுர ருசியில்
    மதி மயங்கும் மனிதர்கள்
    நன்மை கனியின் சுவையை
    நஞ்சுக் கசப்பு என்பார்
    இது இயற்கையின் நியதி //

    அற்புதம்.. அருமையா கவி வடிக்கிறீர்கள் ஆழ்ந்த சிந்தனையோடு .. வாழ்த்துகள்..

    என் பஸ் ல் தொடர்வதை பார்த்தே வந்தேன்.. ( jmm s )

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...