Monday, February 14, 2011

ஒரு காதல் குறிப்பு



ரும்பு மீசை வளரும்முன்
குறும்பு பார்வை பதித்தாள்
பருவம் எய்திடாத
என் பள்ளித்தோழி


ன் கவனங்களை ஈர்த்தவளோ
வெள்ளை நிறம் உடுத்திய
மலர் இதழில் சிரிக்கும்
மச்சு வீட்டு மங்கை


ளிராத மலர்களின்
அறியாத மனசின்
சொல்லாத் தெரியாத ஆசைகள்


னம் கவர்ந்தவளுக்கு
முதல் முறையாக கடிதம்
தூதுவாக தோழி
வகுப்பறை சபையில்
ஆசிரியரின் பிரம்படி


பெயரில்லாத அவ்வன்பை
கேட்டு வாங்குதல் தவறென
வலியால் நான் துடிக்கையில்
என்னவளின் சிரிப்பு உணர்த்தியது


ளன கேலிச் சிரிப்பாய்
பள்ளி முழுவதும் உயிர்த்தெழ
எனக்காக அழுதது
என்தோழியின் விழிகள் மட்டும்


பிஞ்ச மனசில
பட்ட காயம் ஆறியும்
மாயாத தழும்பாய்
இன்னும் நெஞ்சுக்குள்ள


ருவம் வந்த பின்
மனசுகளை தேடியதில்லை
தேடி வந்த மனசுகள
காயப்பட செய்த்ததில்லை
காயப்பட்ட எம்மனசு


ளிரிலே சிதைந்துபோன
என் நெஞ்சு விதையில்
அன்பு நீர் ஊற்றி
காதலை தளிர விட்டாள்
மாலை இட்ட மங்கை

12 comments:

  1. வாவ் அருமை செய்யத் மிகவும் அருமை
    உண்மையா கர்பனையா
    அழகாக உள்ளது வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கவிதைக்கு நன்றி

    ReplyDelete
  3. அருமை வரிகள் நண்பரே

    ReplyDelete
  4. காதல் வரிகள் அனைத்தும் கவர்ந்த வரிகள் அருமை காதல். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கனவில் கண்ட பெண்ணை நேசிப்பதை விட உன்னை கருவில் சுமந்த தாயை நேசி

    ReplyDelete
  6. காதலர் தின கவிதை காதலைக்கடந்தும் சிந்தித்திருக்கிறது.

    ReplyDelete
  7. //தளிரிலே சிதைந்துபோன
    என் நெஞ்சு விதையில்
    அன்பு நீர் ஊற்றி
    காதலை தளிர விட்டாள்
    மாலை இட்ட மங்கை//

    அது..!!!

    ReplyDelete
  8. சூப்பர்... கலக்குறீங்க...!!

    ReplyDelete
  9. என்னையும் கொஞ்சம் திரும்பி பார்க்க வைத்தன இந்த வரிகள் பாராட்டுக்கள்தோழா

    ReplyDelete
  10. குரு தூள் வரிகள் ...
    சூப்பரா இருக்கு

    ReplyDelete
  11. //பருவம் வந்த பின்
    மனசுகளை தேடியதில்லை
    தேடி வந்த மனசுகள
    காயப்பட செய்த்ததில்லை
    காயப்பட்ட எம்மனசு


    தளிரிலே சிதைந்துபோன
    என் நெஞ்சு விதையில்
    அன்பு நீர் ஊற்றி
    காதலை தளிர விட்டாள்
    மாலை இட்ட மங்கை//

    கலக்கீட்டீங்க அருமை அருமை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...