சாதுக்களில்
உறங்கும் மிருகம்
விழித்து எழுகையில்
உணர்த்தியவனின் குருதிகள்
வீதியில் சிந்துகிறது
இழைக்கும் பிழைகளில்
அடையாளப்படுதுகிறான்
தன் உயிர் குடிக்கும்
ஆயுதத்தை
மண், பொன், பெண்
பசியின் இரையாக
மனித உடலில் இருந்து
உதிர்கிறது உயிர்கள்
இறைவனை மறந்த
மனிதர்களின் கோபங்களில்
ஒவ்வொரு மூலைகளிலும்
நாழிகைக்கு ஒரு உயிரென
உதிர்கிறது
மனிதர்களின் அவசரங்களால்
எழுத்தப்பட்ட ஜனன மரண
நாட்குறிப்பை திருத்துகிறான்
இறைவன்
மண், பொன், பெண்
ReplyDeleteஇந்த மூன்றையும் வன்முறைகளுக்கு காரணமாக சுருக்கி விடலாம் .. ..வாழ்த்துக்கள்
அனைவரையும் சிந்திக்கத்துாண்டும் சிறப்பான வரிகள் அருமைதோழா பாராட்டுக்கள்
ReplyDeleteகுரு சிறந்த கவி படைத உங்களுக்கு நன்றிகள்
ReplyDeleteநல்லா இருக்கு நண்பா
ReplyDeleteஅருமையான வரிகள்!!
ReplyDeleteஎப்பிடி சேக்காளி உங்களால இந்த சிந்தனைகளை கவிதையாக சமைக்க முடிகிறது....???
ReplyDelete//இறைவனை மறந்த மனிதர்களின் கோபங்களில்
ஒவ்வொரு மூலைகளிலும்
நாழிகைக்கு ஒரு உயிரென உதிர்கிறது//
வேதனை தெறிக்கும் யதார்த்த வரிகள்.
//மனிதர்களின் அவசரங்களால்
எழுத்தப்பட்ட ஜனன மரண நாட்குறிப்பை
திருத்துகிறான் இறைவன்//
தீ..!!!!
உண்மைக் கவிதை வரிகள் அனைத்தும் அற்புதம்
ReplyDeleteமிகவும் அருமையான அழகான கவிதை
ReplyDeleteஇறைவனை மறந்த
ReplyDeleteமனிதர்களின் கோபங்களில்
ஒவ்வொரு மூலைகளிலும்
நாழிகைக்கு ஒரு உயிரென
உதிர்கிறது
நிஜம் தான்,
இறைவனை மறந்தால் கூட பரவாயில்லை, மனிதன் என்பதையே மறந்துவிடுகிறான். இது தான் கொடுமை...