Sunday, February 6, 2011

அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
முதியவர் , அனுபவ  கதைகள் ,பள்ளிக்கூடம்  


ஒரு அழுக்கு    தோல்பையும்
கையில் ஊன்றுகோல் கம்புடனும்
மெதுவாக நடந்துவந்தார் முதியவர்


அருகில் வந்தவரிடம்
கண்ணீர் மல்க
கதைகளை சொன்னேன்


என்னைப் பற்றி விசாரித்தவர்
இறுதியில் கேட்டார்
தம்பி சாப்பிட்டியா


என் வாடிய முகம்
காட்டிக் கொடுத்தது
என் பசியை


வா என்று அழைத்துக்கொண்டு
ஒரு உணவக விடுதில்
எனக்கு பசியாற்றினார்


அவர் தங்கும் இடத்திற்கான
நடை பயணத்தில்
ஆறுதல் பலம் தந்தார்


இங்க பாரு தம்பி
இவங்க எல்லாம் ஊரைவிட்டு
ஓடி வந்தவங்க


வீத்யோரம் உறங்கி
இருந்தவர்களை சுட்டுகாட்டில்
சொனார் அந்த முதியவர்


வேலை சாப்பாடு இல்லாம
படுக்க இடமும் இல்லாம
வாழுற மனுசங்கதான் இவங்க


அங்கு இருக்கிற சில
மனிதர்களை காட்டி
நிறைய கதைகள் சொன்னா


என் என்னையே எடுத்துக்கோ
அவரை பற்றி சொல்ல
ஆரம்பித்தார் தணிந்த குரலில்


ஒரு ஊரின் பெயரைச்சொல்லி
விவசாயம் தான் தொழில்
எனக்கு இத்தினை பிள்ளைகள்


பெத்த பிள்ளைகளுக்கு
கால் முளைத்தவுடன்
தன்னை உதறியாதாக சொன்னார்


அறுபது வயசு ஆச்சு
சாவு வரைக்கும் வாழனும்
பிள்ளைங்க கைவிட்டுட்டாங்கன்னு
சாக முடியுமா


முகம் தெரியாத இந்த ஊரில்
எதோ பிச்சை எடுத்து
பொளைக்கிறேன் என்றார்


எந்த துக்கமும் இன்றி
அவர் கதையை சொல்லுகையில்
முதுமையிலும் அவரின் தன்னபிக்கையை
உணர்ந்து கொண்டேன்


பேசி நடந்த சிறிய தூரத்தில்
பிளாஸ்டிக் சருகையால்
மூடப்பட்டிருந்த சிறு குடிலில்
போய் சேர்ந்தும்


இங்குதான் தங்கி
என் காலத்தை ஒட்டுகிறேன்
அங்கு அமர்ந்துகொண்டே சொன்னார்


உனக்கு அப்பா அம்மா
நல்ல வசதியும் இருக்கு
உன் இந்த முடிவால
வாழ்க்கைய துலைச்சிராத


படிச்சவங்கதான்
நல்ல வேலையில் இருக்காங்க
அந்த படிப்பை நீஉதரலாமா


அவர் படிக்காதவர் இருந்தும்
படிப்பின் மகத்துவத்தை சொல்லி
மீண்டும் ஊருக்கு போஎன்றார்


நீ சின்ன வயசு படிப்பு முக்கியம்
இப்படியெலாம் இனி செய்க்கூடாது
இரவு முழுக்க அறிவுரைகள்


இங்கு தங்கு காலையில்
ஊருக்கு அனுப்புகிறேன் என்றார்
தலையை அசைத்தபடி தூங்கச்சென்றேன்


பயமுறுத்திய இரவு விடிந்தது
ஒரு குவளை தேநீருடன்
என்னை எழுப்பினார்


காலை சிற்றுணவு கொடுத்தார்
ஊருக்கு போகும் பஸ்சுக்கு
பயண சீட்டும் எடுத்தார்


தம்பியை  இந்த ஊரில்
இறக்கி விடுங்க என்று
நடத்துனரிடம் கேட்டுகொண்டார்


சொன்னதெல்லாம்  கவனித்த்துல வைச்சுக்கோ
ஊருக்கு போய்  நல்லபடியா
படி என்று சொன்னார்


என் நன்றியை கூட
எதிபார்க்காமல் என்னிடமிருந்து
 விடைபெற்றுச்  சென்றார்


இப்படியும் சில மனிதர்களா
ஊர்வரை அவரைப்பற்றியே
நினைத்துக் கொண்டு வந்தேன்


பேரூந்து ஊரை நெருங்கியது
வீட்டைப் பற்றி பயம் இருந்தும்
ஆனந்தக்  கொண்டாட்டத்தில்  மனசு


பஸ்ஸைவிட்டு இறங்கினேன்
உங்க பையன் வந்துட்டான்
பெரும் குரலெழுப்பிய ஊர்வாசி


அண்ணன் அக்கா
என் பால்ய நண்பர்கள்
இப்படி என்னை சூழ்ந்தார்கள்


என்னைப் பார்த்ததும்
கட்டிபிடித்து அம்மா  அழ
நானும் அழுதேன்


என்னைப் பார்க்கவந்த
ஊர் மக்களும்
திரும்பிச் சென்றார்கள்


அண்ணனும் அக்காவும்
துருவித் துருவி கேட்டார்கள்
மௌனமாக நான்


இனிமேல் நல்லா படிக்கிறேன்
உன் பேச்சை  கேட்கிறேன்
ஊரைவிட்டு போக மாட்டேன்
என்று அம்மாவிடம் கதறியழுதேன்


சரி பரவா இல்லடா
அன்று அம்மா
என்னை அடிக்கவும் இல்லை

மறுநாள் மீண்டும்
பள்ளிக்கு புறப்பட்டு
பள்ளிக்கே சென்றன்


நேத்து எங்கடா போன
நலம் விசாரித்தார்கள்
வகுப்பு சகாக்கள்


நண்பர்களில் அன்பில்
பூரித்துப் போனேன்
எனக்குள் புத்துயிர் வந்தது


வகுப்புக்கு வந்த ஆசிரியர்
பாடம் நடத்த ஆர்வத்துடன்
கவனிக்க துடங்கினேன் நான்

முடிந்தது.


- செய்தாலி


4 comments:

 1. சிறு வயதிலே உங்களுக்கு கிடைத்த அனுபவம் அருமை..

  ReplyDelete
 2. சுபம்

  அருமை நண்பரே..!!!

  ReplyDelete
 3. மாஷா அல்லாஹ் கண்களில் கண்ணீர் நிறம்பி விட்டது கவியே மிகவும் அருமையாக அப்பட்டமாக வடித்துள்ளீர்கள் நிஜம் இது

  எனக்கும் ஒற்றுமை உள்ளது உறவே மிகவும் அருமை ஆயிரம் நன்றிகளும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
 4. மனம் குழம்பிய மைந்தன் மயக்கம் தெளிந்த கதை.. வாழ்க்கையில் அனைவருக்குமே இது போன்ற திருப்பங்கள் ஒரு நிலையில் வந்தே தீரும்.. அதை எளிமையாக எடுத்துரைத்த செய்தலிக்கு பாராட்டுக்கள்..!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...