Tuesday, February 22, 2011

நேற்று வரை வாழ்ந்தவன்


சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமைமூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகைம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்யோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலிடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்


னிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்லோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்வ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்


ல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்


ண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரிவிடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்


யிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவிழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்


ங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்


ல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்


ல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்


ப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டிசொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்


ப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்


ரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
 ஜனனமும்  மரணமும்21 comments:

 1. நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்

  இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!

  ReplyDelete
 2. கண்களில் நீர் வர படிக்கிறேன்.. உயிரோட்டமாய் உயிரி போன பின் ..
  உறவுகளின் பிரிவுகள்

  ReplyDelete
 3. இதுதான் வாழ்க்கை என்று எல்லாரும் புரிந்து கொண்டால் எங்கயும் எந்த பிரச்சினையும் வராதே
  அருமை செய்யது அலி அருமை

  ReplyDelete
 4. கவிதை கதை நல்லாயிருக்குங்க பாராட்டுக்கள்.

  வாதில் என்றால் என்ன?

  ReplyDelete
 5. //சிறுகச் சிறுகலாக
  இறந்து கொண்டிருந்தது இரவின் கருமை //

  //கதவுகளை உடைத்துக்கொண்டு ஒரு பேரொலி//

  செய்தாலி டச்...

  //வார மாத வருஷ சடங்குகளில்
  மீண்டும் உயிர்த்தேளுகிறான்
  நேற்று வரை வாழ்ந்தவன்//

  கவிதை இந்த வரிகளில் வாழ்கிறது.
  பாராட்டுகள் சேக்காளி

  ReplyDelete
 6. அருமையான பயமுறுத்தும் வரிகள்

  ReplyDelete
 7. //ஓட்ட வட நாராயணன் கூறியது...
  WONDERFUL......

  I LIKE IT VERY MUCH AND BOOK MARKED.//  உங்கள் வருகைக்கு நன்றி தோழரே

  ReplyDelete
 8. சி.கருணாகரசு கூறியது...
  கவிதை கதை நல்லாயிருக்குங்க பாராட்டுக்கள்.

  வாதில் என்றால் என்ன?

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே
  வாதில் என்றால் வாசக்கதவு

  ReplyDelete
 9. ரொம்ப அருமையான வரிகள் நண்பரே.. பாராட்டுக்கள்

  ReplyDelete
 10. ரொம்ப அருமையான வரிகள் நண்பரே.. பாராட்டுக்கள்
  அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . .

  ReplyDelete
 11. //நாழிகை சுழல்வதைப்போல்
  எதோ ஒரு பொழுதுகளில்
  நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
  ஜனனமும் மரணமும்//

  கவிதை ரொம்ப நல்லா இருக்கு தோழரே...!!!

  ReplyDelete
 12. உயிர் ஓட்டம் உள்ள வரிகள் தோழரே அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அருமையான கவி வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
  தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை

  ReplyDelete
 14. அருமையாக வடித்துள்ளீர்கள்
  அருமை கவிதை.

  ReplyDelete
 15. அருமையான கவிதை சகோ. என் மனதை பிசைந்தது

  ReplyDelete
 16. அருமையா சொல்லி இருக்கீங்க ...குரு
  உங்க வரிகளில் எப்போதும் ஒரு உயிர்ப்பு இருக்குது ,..
  வாழ்த்துக்களும் , வணக்கங்களுய்ம்

  ReplyDelete
 17. சிறுகச் சிறுகலாக
  இறந்து கொண்டிருந்தது
  இரவின் கருமை

  மூடிய பனிமூட்டங்களை
  விரட்டி அடித்தபடி
  கதிரவனின் வருகை

  மற்றும் இறுதி வரிகள் பிரமாதம் ! அற்புதமான கவிதையைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி !

  ReplyDelete
 18. உங்களின் சிந்தனைத்துளிகள் அத்தனைக்கும் நான் அடிமையாகிவி்ட்டேன் தோழா.அவ்வளவு சிறப்பான கவிதைகளை ரொம்ப அருமையாக தந்து எங்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட மன்னா தொடர்ந்தும் தாருங்கள் சிறந்த படைப்புகளை.பாராட்டுக்கள் நண்பா

  ReplyDelete
 19. நல்லக் கவிதை!கவிதை, கதை போல் அமைந்துவிடது, இனி எழுதும்போது கவிதைவரிகளாக கவிதை அமையட்டும்!

  ReplyDelete
 20. நல்லா இருக்குங்க
  ஜனனமும் மரணமும்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...