Thursday, February 24, 2011

ஆத்மாவின் அழுகை சத்தம்கலை முழுவதும் விழுங்கிய
நகரத்திலிருந்து கிராமத்திற்கான
நெடுந்தூரப் பயணம்சிற்றூர்களை புறம்தள்ளி
பெருநகர நிற்தங்களை தேடி
மின்னாலாய் விரைந்தது பேரூந்து


ணிமுடிந்து கதிரவன் செல்ல
மீத வெளிச்சங்களை தின்றது
அந்தி மாலை பொழுது


ன் குளுமை கொண்டு
என் உடலை மூடியது
சன்னலின் வந்த காற்று


தையோ யோசித்துகொண்டிருந்து
அயர்ந்து தூங்கிவிட்டேன்
என்னை அறியாமல்


ம்பி யே.. தம்பி
நீ இறங்கவேண்டிய இடம் வந்திடுச்சு
தோள்தட்டி எழுப்பினார் நடத்துனர்


ண்ணை கசக்கியபடி
அலுப்புக்களை முறித்துக்கொண்டு
நிற்தத்தில் இறகினேன்


ரும் மனிதர்களும் உறகியதால்
நிசப்தங்களை மூடிகொண்டிருந்தது
இரண்டாம்ஜாமம்


மின் விளக்குகள் அணைக்கப்பட்டு
கருமையால் மூடி இருந்தது
ஊருக்குச் செல்லும் ஒத்தயடிப்பாதைரம் செடி கொடிகளிலிருந்து
கரைச்சல் சத்தமிடும் பூச்சிகள்
அதை உடைத்துக்கொண்டு வரும்
தெருநாயிக்களின் குலைச்சல்கள்


சிறு தூரத்தில் வீடு
இருளைகீறிய கைபேசி வெளிச்சத்தில்
மெல்ல நடந்தது கால்கள்


டைபயணத்தின் இடைவெளியில்
என் காதை நிரப்பியது
ஒரு அழுகை சத்தம்ற்றென்று நடுங்கியது உடல்
ரோமங்கள் சிலிர்தெளுந்து
மூடுபனியிலும் வியர்வை கொட்டியதுன்னை துரத்திக் கொண்டு
மீண்டும் ஒலித்தது அழுகைசத்தம்
வேகமாக சுழல்ந்தது கால்கள்


தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
இருளை முறைத்து கொண்டிருந்தது
நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு


டிய கால்களும்
படபடவென துடித்த இதயமும்
சாந்தமானது மின்வெளிச்சத்தில்


குலைத்தபடி எதையோ துரத்திக்கொண்டு
இருளைநோக்கி ஓடியது
என்முன்னால் வந்த தெருநாய்


சூனியமாக காணப்பட்டது
இரவில் மனிதர்களை துலைத்த
ஊர் தெருக்கள்


ம்மா ...அம்மா...
உரக்கக் குரலெழுப்பி
வீட்டின் முன்வாசிலை தட்டினேன்மின்விளக்குகளை எரித்துக்கொண்டு
கதவுகளை திறந்தபடி
உறக்க முகத்துடன் அம்மால்லா இருக்கியாடா ....
ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு
இப்படி அர்த்த ராத்திரியிலையாவர்றதுகால கழுவிட்டு உள்ளவா
சாப்பிட்டியா இல்லையா
சாப்பிட்டேன் பதில் சொல்லியபடி
வீட்டுக்குள் நுழைந்தேன்விடியல் வரையிலும்
உறங்கவிடவில்லை
காதில் ஒலித்த அழுகைசத்தம்றுநாள் காலையில்
உறவுகளுடனான பேச்சுக்கிடையில்
அழுகை சத்தம் பற்றிசொன்னேன்


ப்படியா என்று அதிர்ச்சியுடன்
கேட்ட உறவினர்கள்
ஒரு கதை சொன்னார்கள்


ரு பய வண்டியிலஅடிபட்டு
போனமாசம் இறந்துட்டான்
அந்த பயலாத்தான் இருக்கும்


பேய் பிசாசு என்று
வேற பேச்சில் மும்மரமாக
இருந்தார்கள் அவர்கள்


வாழ்ந்து முடிக்கும்முன்
உடலை இழந்து தவிக்கும்
ஒரு ஆத்மாவின் அழுகைதான்
என் காதில் ஒலித்தது
என்ற உண்மையை உணர்ந்தேன்சாந்தி இன்றி திரியும்
சில ஆத்மாக்கள் எதையோ
நம்மிடம் சொல்ல முயல்கிறார்கள்
பயம் என்ற கோழையோ
அதற்கு வேலி இடுகிறது

                                             

                                                குடியிருந்த உடல் மரணித்து
இறைவனின் அழைப்பு வரும்வரை
அடைக்கலம் இன்றி உலவுகிறது
ஆத்மாக்கள்


டலும் ஆத்மாவும்
ஒரே மரணத்தில் மரணிக்கும்
நல்மனிதர்களாக வாழமுற்படுவோம்


 
 

13 comments:

 1. ரொம்ப பெரிய கவிதை.. அருமையா ஆத்துமாவின் அழுகை சத்தம் கேட்க செய்திருக்கீங்க பாராட்டுக்கள்

  ReplyDelete
 2. கவிதையில் நடையில் ஓர் ஆன்மாவிற்கும் உயிர் உண்டு அழகா சொல்லி இருக்கிங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. //வாழ்ந்து முடிக்கும்முன்
  உடலை இழந்து தவிக்கும்
  ஒரு ஆத்மாவின் அழுகைதான்
  என் காதில் ஒலித்தது
  என்ற உண்மையை உணர்ந்தேன்//

  ஆம்... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. பெரிய கவிதை !

  பெரிய கருத்து !!

  இதோ சிறிய மனிதனின் வாழ்த்தும் ஓட்டும்!

  ReplyDelete
 5. அருமையான கவிதை இறைவன் நாட்டம் எப்படியோ அப்படித்தான் எல்லாம் நடக்கும்

  ReplyDelete
 6. தனிமை, இருள், ஓளி என அத்தனைக்கும் வர்ணனை அழகு..
  வார்த்தைகள் கொண்டே ஒரு காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. //தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
  இருளை முறைத்து கொண்டிருந்தது
  நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு//


  அழகான வார்த்தை.

  ReplyDelete
 8. நல்லா இருக்கு... அருமையான சிந்தனை...!!

  ReplyDelete
 9. கவிதை செதுக்கிய விதம் அருமை ..
  கடைசியில் எனக்கு ஏதோ உடன்பாடில்லை குரு ..

  //ஒரு வாழ்ந்து முடிக்கும்முன்
  உடலை இழந்து தவிக்கும்
  ஒரு ஆத்மாவின் அழுகைதான்
  என் காதில் ஒலித்தது
  என்ற உண்மையை உணர்ந்தேன்
  //

  என்னவோ என் மனது இதற்க்கு உடன் பட மறுக்கிறது ...

  தவறுக்கு மன்னிக்கனும் குரு ..

  ReplyDelete
 10. அர்த்தஜாமப் பயணத்தின் அடுத்தநாள் எண்ணங்கள் அனேகமாய் அத்தனைபேருக்கும் இப்படித்தான் இருக்கும். எதையோ தேடி எண்ணங்கள் ஓட... கடைசியில் எதையோ அடைந்து தீர்வை அடைந்ததாய் சாந்தி கொள்ளும் மனது.

  யதார்த்தக் கோப்பையில் எண்ணங்களின் தேநீரை குடித்ததில் இந்த மதிய உறக்கம் கலைந்துபோனது...

  இருளைக்கீறிய கைபேசியையும், இருளை முறைத்த மின்விளக்கையும் மிகவும் ரசித்தேன்.
  (அரசனைப்போலவே, ஆத்மா குறித்து எனக்கும் எதிர்கருத்துகள் இருந்தாலும்...)

  பாராட்டுகள் சேக்காளி...

  ReplyDelete
 11. இப்படியெல்லாம் பயமுறுத்தக்கூடாது..

  ReplyDelete
 12. ந‌ல்லருக்கு......... தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
 13. நான் இரவு தூங்கனுமா வேண்டாமா?

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...