Saturday, February 26, 2011

நாற்காலி குறிப்பு



நாற்காலித் திருவிழா
பல்லாக்கில் வேட்பாளர்கள்
சுமைதூக்கும் வாக்காளர்கள்



                                                     ட்சியின் இறுதிநாளில்
காலியானது கஜானபெட்டி
பயிரை மேய்ந்தது வேலி



ளவுக்கு உகந்த பதவிகள்
கூட்டுக் களவாணிகள்
தொகுதி பங்கிடுதல்



கூட்டம் சேர்த்தவர்களின்
நாற்காலி ஆசை
புதிய கட்சிக் கொடிகள்



நெடுஞ்சாலை சீரமைப்பு
அசுதங்களற்ற தெருவீதிகள்
தலைவரின் வருகை


தர் சட்டைகளின் இயக்கத்தில்
சாயம்பூசிய திரைகூத்தாடிகளின்
மேடை அபிநயங்கள்


புன்னகை திருவோடேந்தி
வீடுதோறும் பிச்சைகேட்கும்
தொகுதி வேட்பாளர்கள்


தேர்தல் செலவுகள்
வெள்ளையாய் உயிர்த்து எழுகிறது
பதுக்கிய கருப்பு பணங்கள்


வீதியின் நடுகே
உயிர்தெழுந்த மேடைகளில்
ஆக்ரோசமாக அரங்கேறுகிறது
கானல் வாக்குறுதிகள்



யாரை போதிப்பதற்கு
அவதூறு பேச்சுகளால்
மேடைகளில் கொந்தளிக்கிறார்கள்
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும்



ன்கொடை இனாம்களுக்கு
குடிஉரிமையை அடியரைவக்கும்
சுயநல வாக்காளர்கள்



காக்கி காவல் இருந்தும்
மண்ணில் உதிர்ந்து விழுகிறது
உதிரத்துளியும் உயிரும்


வரை காணவில்லை
தேடும் வாக்காளர்கள்
வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்




மாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி

13 comments:

  1. நாற்காலிகளும் அதற்கான அடி பாடுகளும் நன்றாகவே இருக்கிறது. பாராடுக்கள் உங்கள் திறமைக்கு .

    ReplyDelete
  2. விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய கவிதை படைத்தமைக்கு மிக்க நன்றி கவிஞ்சரே!

    ReplyDelete
  3. விழிப்புணர்வு கவிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமையான கவிதைக்கு நன்றி கவிங்கரே

    ReplyDelete
  5. //நெடுஞ்சாலை சீரமைப்பு
    அசுதங்களற்ற தெருவீதிகள்
    தலைவரின் வருகை//

    //ஏமாறுபவன் இருக்கும்வரை
    ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
    முன்னோர் பழமொழி//

    அனைத்துமே உண்மை வரிகள் நண்பரே.. இன்று நிலமை மிக மோசமாகிவிட்டது... நாம் தான் இளைய சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்..

    ReplyDelete
  6. உண்மைதான்... அருமையான வரிகள்

    ReplyDelete
  7. அருமையான வரிகள் நண்பா
    தாங்களுக்கு நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  8. ஏமாறுபவன் இருக்கும்வரை
    ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
    முன்னோர் பழமொழி

    சிறப்பான கருத்தாளம் மிக்க அழகிய வரிகள் மிகவும் அருமை

    ReplyDelete
  9. //தேர்தல் செலவுகள்
    வெள்ளையாய் உயிர்த்து எழுகிறது
    பதுக்கிய கருப்பு பணங்கள் //

    நிஜமோ நிஜம்ம்...
    சமூகத்தைச் சாடிவிழும் அருமையான சாட்டையடி.
    பாராட்டுகள் சேக்காளி...

    திரியிருந்தும், எண்ணையிருந்தும்
    இன்னும் இருட்டுக்குள்ளே நம்ம திருநாடு.
    தீக்குச்சியை இவன் உரசிவைப்பான் -
    என்று எழுதட்டுமே உன்னை வரலாறு!

    என்ற வைரமுத்துவின் உத்வேகமிக்க வரிகளை நினைவூட்டுகிறது கவிதை.

    ReplyDelete
  10. கவிதைக்கு பொய் அழகு ஆனால் இங்கு
    உண்மையே அழகாய் இருக்கிறது..

    ReplyDelete
  11. உண்மை நிலை உணர்த்தும் அழகான கவிதை... வாழ்த்துகள் நண்பரே..

    ReplyDelete
  12. பயிரை மேய்ந்தது வேலி.
    அருமை வரிகள் .

    ReplyDelete
  13. நாற்காலித் திருவிழா
    பல்லாக்கில் வேட்பாளர்கள்
    சுமைதூக்கும் வாக்காளர்கள்

    ஆரம்பமே கலக்கல்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...