Wednesday, February 2, 2011

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)




ஒருமுறை மாதம் தள்ளிப்போனத்தை
அவனிடனம் சொன்னேன்
திருமணத்திற்குமுன் இது வேண்டாம்
கலைத்துவிடு என்றான்

முகவரியற்ற தூரத்து
ஊரில் உள்ள மருத்துவமனையில்
கலைக்கப்பட்டது என் முதல்கரு

ஒரு தனிமையில்
அவனின்   இனங்கலுக்கு வேலியிட்டு
திருமணம் பற்றி பேசினேன்

சிறிது மௌனம் காதவன்
அம்மா அப்பாவிடம் கேட்டுவிட்டு
நாளை சொல்கிறேன் என்றான்

ஓரிரு நாட்கள் கடந்தன
என் கைபேசியும் துடிக்கவில்லை
என் அழைப்பையும் துண்டித்தான்

பதிலுக்காக காத்திருந்து
நாட்கள் கடந்தன
அவனைப்பற்றி விபரம் இல்லை

என் சந்திப்பை தட்டிக்களிப்பத்தின்
காரணங்கள் உணர்ந்தது
என் விழிகள் நிரம்பியது

தொடரும்...


5 comments:

  1. கண்ணாமூச்சி
    இருமனங்களின் சங்கமம் அல்லவா காதல்
    இருவரின் ஒப்புதலோடு இணைந்ததல்லவா இக்காதல்
    இற்றுபோகாதிருக்க எத்தனை வேண்டியும்
    இப்படி கேட்பாரற்று கிடந்து துடிக்கிறதே காதல்


    நல்லவேளை எல்லா ஆண்களும்
    இக்கவிதையில் வரையப்பட்ட வரிகளைப்போல்
    கயவர்கள் இல்லை
    உயிராய் நேசிக்கும் நல்லவரும் உண்டு இவ்வையத்தில்
    பிரியாது மனதோடு காதலில் வாழும் துறவிகளும் உண்டு
    உடல்சுகம் அல்ல காதல் என்று நிரூபிக்கும் நல்லவரும் உண்டு
    மனதால் இணைந்து வாழும் காலம் வரை வாழ்வோம்
    என்று உறுதிபூண்டு வாழ்போரும் உண்டு....

    ஒரு சில காதல் கம்பீரத்துடன் நிலைத்து நிற்பதும் உண்டு
    ஒரு சில காதல் பலகீன மனதால் சிதைந்துவிடுவதும் உண்டு
    ஒரு சில காதல் புரிதலின்மையால் விலகிவிடுவதும் உண்டு
    ஆனால் உண்மைக்காதல் என்றும் வாழ்வதும் உண்டு....
    அன்பு வாழ்த்துக்கள் சையது அலி.....

    ReplyDelete
  2. கற்பனைதான் என்றாலும் மிகவும் இனிமையாகவும் வலிகள் நிறம்பியதாகவும் உள்ளது தொடருங்கள் கவியே

    ReplyDelete
  3. பாகம் நான்கு ரசித்து ருசித்து சினிமாப்படம் பார்ப்பது போன்றுள்ளது ஆவலாய் அடுத்த கட்டத்திற்கு

    ReplyDelete
  4. நான் ஒரு ரசிகன் எனக்கு கவிதை படிப்பது ரொம்ப பிடிக்கும் அதிகமான கவிதைகள் படித்திருக்கிறேன் என்னை ஆவளாய் அடுத்த பாகம் அழைத்து சென்றது உங்கள் கவி அருமை வரிகள் கற்பனை என்றாலும் உயிர் உள்ள வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் தோழரே........

    ReplyDelete
  5. இன்றையா காமுகங்களின் நடப்பை வரிகளில் சொல்லி இருக்கின்றீரோ நான் உங்களோட காதல் என்றே தவறாக நினைத்து விட்டேன் ,,,,

    மன்னிக்கவும் குரு ....

    நல்ல வரிகள் ... நல்ல எழுது நடை .... வாழ்த்துக்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...