Wednesday, February 2, 2011

இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)எதிர்பாராத ஒரு சந்திப்பில்
உன்னுடனாக காதலை
என் பெற்றோர் விரும்பவில்லை
என்னை மறந்துவிடு என்றான்

உன் பெற்றோரைக் கேட்டா
என்னை துரத்தி துரத்தி
காதல் செய்தாய்
ஒரு வேட்கையுடன் வெளிவந்தது
அவ்வார்த்தைகள்


பதிவுத்  திருமணம் செய்துகொள்வோம்
என்றன் அவனிடம்
முடியாது என்றான் அவன்

என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
இவ்வுலகம் சற்றென்று
நிற்றதைபோல் உணர்ந்தேன்

என் முகம் பார்க்கவும்
வெட்கப்பட்டு தலைதாழ்த்தி
நிற்றான் என் முன்னிலையில்

அவனின் காதல்
என் பதினாறை சுமக்கும்
உடல் மீதுதான் என்னும்
உண்மையை உணர்ந்தேன்

வலியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம்

திரும்பி நடந்தவனிடம்
கடைசியாக ஒரு வார்த்தை
என்றேன் அவனிடம்

குளித்தால் என் உடலின்
ஆளுக்கு களங்கம் போய்விடும்
மூன்று நாள் உதிரப்போக்கில்
கருவறை களங்கம் போய்விடும்

என் மரணம்வரை நீளும்
காதல் என்ற பெயரில்
நீ கற்பழித்த
மனசின் களங்கம்


முடிந்தது.

இந்த காதலர்களின் காதல் பயணம் முடிந்தாலும்
தனித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது . . . . .

இது ஒரு கற்பனை வரிகள் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் நிகழும் நிஜமும்கூட

-செய்தாலி
11 comments:

 1. உடலை நேசிப்பவனின் காதல்
  இடையில் வெட்டுபட்டதே நலம்
  இறுதிவரை உடன்வராத இவன் காதல்
  இதற்காக மனம் வருந்தி அழவேண்டாம்

  எங்கோ இருந்துக்கொண்டு மனதைமட்டும்
  இன்னமும் நேசிக்கும் அன்பு உள்ளம்
  கண்டிப்பாக கிடைக்கும் தோழியே
  அதுவரை மனதை கற்பழித்த களங்கத்தை
  மறக்க முயற்சி செய்.....

  காதலித்து இடையில் விட்டுப்போனவன்
  என்றும் இணையாது இருக்கவே வேண்டவைக்கிறது
  காதலில் தொடங்கி தாலிகட்டுபவரே
  வாழ்க்கையில் வெற்றி பெற்றவராகிறார்

  மனதை வென்று உள்ளம் புகுந்தவரே
  கணவன் என்னும் அந்தஸ்தும் பெற்றவராகிறார்

  காதல் வென்று திருமணத்தில் முடியட்டும்
  திருமணம் இனிதான இல்லறமாய் தொடரட்டும்.
  முதுமை வரை ஒன்றாய் வாழட்டும்
  இறுதிமூச்சு இருவருக்கும் ஒன்றாய் நிற்கட்டும்......

  அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....
  வரிகளில் வலி அன்பு காதல் எல்லாமே தூக்கலாகவே இருக்கிறதுப்பா...

  ReplyDelete
 2. காதல் என்னும் பெயரில் காம இச்சையை தீர்த்துக்கொள்ளும் ஆண்.. அவனை நம்பி உடலும், மனமும் காயப்பட்டு நிற்கும் ஒரு பெண்..

  வாழ்வில் நாம் கண்டும் கேட்டும் படித்தும் மறந்து போகிற வெகு மலிவான நிகழ்வுகள்..

  அதை இவ்வளவு ஆழமாக நம் உள்ளப்பாறைகளில் செதுக்க செய்தாலி என்னும் சிற்பியால் மட்டுமே சாத்தியம்..

  பாராட்டுகள் கவிஞனே..!

  ReplyDelete
 3. உங்களனுபமில்லையே அதுவரை சந்தோசம்
  அதிகம் இப்படியான காதலை காணமுடிகிறது
  வாழ்த்துகள் தொடருங்கள்

  ReplyDelete
 4. நிச்சியமாக படித்தேன் மனதால் துடித்தேன் மிகவும் அருமையாக வடித்துள்ளீர்கள் கவியே அன்பு வாழ்த்துக்கள் மிகவும் அருமை

  ReplyDelete
 5. ஐந்தாவது இடத்திற்கு வரும்போது இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே வந்தேன் மிகவும் அருமை சிறப்பான கர்பனை வாழ்த்துக்கள் கவியே

  நீங்கள் சொல்வது போல் எங்கோ ஒரு மூலையில் இவ்வாறுள்ளது

  ReplyDelete
 6. உங்களின் அத்தியாயம் தொடரட்டும் சிறப்பாய் வடித்த கவி அருமை தோழரே...
  இனிய பயணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு சோகமாக உள்ளது

  ReplyDelete
 8. ///வழியால் குமுறும் இதயத்துடன்
  விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
  அவனிடம் சொன்னேன்
  சரி பிரிந்து கொள்ளவோம் ///

  இதென்ன இது கடையில பொருள் வாங்குவதுபோல இருக்கே காதல்...

  வரிகள் நன்றாக இருக்கு.

  ReplyDelete
 9. குரு குரு தான் ,,,,
  உண்மையான வரிகள் ./...

  எங்கோ இல்லை எங்கும் நடப்பது தான் ,,,,
  அதிகம் இந்த நிகழ்வு தான் ,,,

  ReplyDelete
 10. அனைத்து அத்தியாயங்களும் படித்தேன்.!!! அருமையாக இருந்தது!!!

  ஆனால்
  //என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
  இவ்வுலகம் சற்றென்று
  நிற்றதைபோல் உணர்ந்தேன் //

  இப்படி உணரும் பெண்,

  //வலியால் குமுறும் இதயத்துடன்
  விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
  அவனிடம் சொன்னேன்
  சரி பிரிந்து கொள்ளவோம் //

  அவ்வளவு எளிதில் இப்படி சொல்லமாட்டாள் என்பதே உண்மை...!

  நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னைக்கவும்!!!

  ReplyDelete
 11. நிஜத்தை உறுக்கியெடுத்த வரிகள் அத்தனையும்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...