Wednesday, March 30, 2011

மனிதனும் நவீன கடவுள்களும்
ற்றகல்வி தேடிய பொருள்
அணியப்பட்ட அதிகார மகுடம்
விசித்திரங்கள் படைக்கும் நவீனங்கள்
மனிதன் தனக்காக உயிர்த்தெளுப்பிய
கண்கண்ட தெய்வங்கள்


நிறத்திலும் குணத்திலும்
பேதங்கள் கொண்ட இவைகள்
தம்மை உயிர்த்தெளுப்பிய மனிதனின்
உதிரத்தையும் உயிரையும் குடிக்கிறது


விஸ்வரூப அவதாரம் எடுத்து
தனித் திறன் ஆணவத்தால்
மனித மனங்களுக்கு இடையே
தம்கூர்மையால் விரிசல் இட்டு
குழப்பங்களை உயிரூட்டி எழுப்புகிறது


தன் போதைகளில் மதிமயங்கி
சிந்தை பேதித்த மனிதன்
மறை பொருள் இறைவனையும்
அலட்சியமாய் புறம் தள்ளி
இயற்கையும் உயிர்களும் சீர்குலைவதை
உணர மறந்து விடுகிறான்


தியாலும் பொருளாலும்
உயிர்த்தெளுப்பிய நவீன கடவுள்கள்
தம்செயல் இழந்து மடிகையில்
சட்டென்று தடுமாறும் மனிதன்
தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான்


ன் கண்கண்ட தெய்வங்கள்
இயலாமையால் மண்டி இடுகையில்
மறைபொருள் இறைவனிடம்
தன் ஆணவங்களை களைந்து
தலை தாழ்த்துகிறான் மனிதன்
Monday, March 28, 2011

இல்லறம் ஒரு நல்லறம்

நீங்கள் ஒருவர்க்கொருவர்
உங்களை ஆடையாக போர்த்துங்கள்
வேதஏட்டில் இறைவன் குறிப்பு


றவுகளின் மத்தியில்
ஆடை கொண்டு போர்த்துங்கள்
மனதை சலனப் படுத்தும்
உங்கள் வெட்கத்தலங்களை


ங்கள் இச்சையின் வேட்கையால்
சொல், சித்திரம், ஒளிக்கோர்வை
என்று வெளிச்சத்தில் எழுப்புகையில்
அசிங்கப்பட்டு சீர் குலைகிறது
மறைத்திருக்கும் புனித அந்தரங்கம்


மூடப்பட்ட நான்கு சுவருக்குள்
உங்கள் உறவை பரிமாறுகையில்
வெட்டங்களை அனைத்து
இருளுக்குள் ஒளிந்து கொள்ளுங்கள்


ரிமை உள்ளவர் இடத்தில்
கண்ணியத்துடன் உறவை தேடுங்கள்
வரம்பு மீறி வேலிதாண்டுகையில்
இல்லறத்தில் சிதைகிறது நல்லறம்


ங்களின் குறை நிறைகளை
மனப் புரிதலில் உயிர்த்தெழும்
அன்பை கொண்டு நிரப்புங்கள்
உங்கள் இல்லற வாழ்கையை
இன்பம் கொண்டு போர்த்துவான்
இறைவன் அவன்

Tuesday, March 22, 2011

அரசியல் நாடகம்பொருளால் வாங்கப்பட்ட
மேடைக் கூத்தாடிகள்
இரவல் புன்னகையுமாய் வீதியில்


க்கள் ஓட்டை வாங்கி
நாட்டை ஆளவரும்
சுயத் திறனில் நம்பிக்கையற்ற
தொகுதி வேட்பாளர்கள்


கூடி வந்து நின்று
வேடிக்கை பார்த்து விட்டு
பொருளின் தூக்கத்திற்கு ஏற்ப
வாக்களிக்கும்   மக்கள்


நாற்காலி பதவிகளுக்காக
ஐந்து வருடங்களுக்கு
ஒருமுறை அரங்கேறும்
அரசியல் நாடகம்


லைவன் மக்களை சந்திக்காமலே
வெற்றி மாலை சூடி
ஆண்ட தேசம் இது


டுத்திய உடுதுணிகள் மட்டுமே
தம் சொத்தாக வைத்திருந்த
பெருந்தலைவன் வாழ்ந்த   மண்


சற்று சிந்தித்து வாக்களியுங்கள்
வளரும் நம் சந்ததிகளின்
நாளைய நல் விடியலுக்காக


Monday, March 21, 2011

அவள்

ன் இரவுகளில்
உறக்கத்தை  களவாடும் 
திருடி அவள்


ன் மஞ்சத்தை 
நித்தமும்  அலங்கரிக்கும் 
வாடாமலர்  அவள்


புன்னகையின் கூர்மையால்
என் மௌனங்களை கீறும்
ஆயுதம் அவள்


கோபத்தின் வேட்கையை
சாந்தத்தால் மூடும்
பனித்துளி அவள்


ன் கனவிகளில்
வண்ணங்களை  தீட்டும்
வானவில் அவள்


ன் துயரத்தின் 
இருளை துரத்தும் 
ஒளிச்சுடர்  அவள்


கொஞ்சல் சினுங்களால்
வதைத்து சித்திரவாதை செய்யும்
அழகிய இராசட்சி அவள்


இடைவெளி தருணங்களிலும்
நினைவுகளால் ஊடுருவி
என் உடலில்  வாழும்
இரண்டாம் உயிர் அவள்

Sunday, March 20, 2011

பெண்ணழகு

றண்ட நிலவுடன்
பசுமைகொஞ்சும் பெண்மையை
ஒப்பிட்டு சொல்லுகையில்
என்னுடன் யுத்தம் செய்கிறது
பெண்ணழகு


லராத உன்னிதழ் கண்டு
பொறாமை கொள்ளுதடி பெண்ணே
மலர்ந்து வாடி உதிரும்
மலர் இதழ்கள்


கொட்டும் மழையில் நனைந்தும்
கரைந்து உதிரவில்லையடி
உன்னழகும் நறுமணமும்


ருவ காலங்களில்
உன்னுடல் அழகு உதிர்ந்தாலும்
உதிரவில்லையடி பெண்ணே
உன் மனஅழகு

Saturday, March 19, 2011

காகமும் மனிதனும்

மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்து
வீதியோரம் செத்து கிடக்குது
இரைதேடிச் சென்ற காகம்

வீதியின் இருபுறம் வீற்றிருந்த
மரக்கிளைகளை கருமைகொண்டு
போர்த்தி காக்கா கூட்டங்கள்

காகங்கள் சிலவை
பெரும் கரைச்சல் சத்தமிட்டு
பறந்து வந்து விரட்டியது
அவ்வழியே வருபவர்களை

ன் இனத்தின் உயிரிழப்பை
கரைச்சல் அழுகை இட்டு
தம் துக்கங்களை ஊருக்குசொல்லும்
காகத்தின் ஒற்றுமை

*********************************************
சீறி வந்த வாகனத்தில்
அடிபட்டு உயிருக்கு ஊசலாடும்
சாலையை கடந்த மனிதன்

கீறிய உடலில் இருந்து
உதிரம் சொட்டியபடி
உதவி யாசிக்கிறான் அவன்

டிவந்து கூடி நின்றவர்கள்
வேடிக்கை பார்த்து விட்டு
விதைத்து சென்றனர் அனுதாபங்களை

னம் கனிதந்த மனிதர்கள்
உதவ முற்படிகையில்
சட்டங்களின் பயமுறுத்தலும்
நாழிகையின் வீண் விரயமும்
விலங்கிடுகிறது அவர்களை

னித கூட்டம் நிரம்பிவழியும்
பெருநகரச் சாலையில்
உதவ நாதியற்று மடிந்தது
சற்றுமுன்வரை துடித்த உயிர்

Thursday, March 17, 2011

ஒரு வீதி நிகழ்வுகள்

ரு அழுகை குரலுடன்
உலகிற்கு அறிமுகமாகிறது
சற்றுமுன் பிறந்த குழந்தை


றவுகள் கூடிய சபையில்
சம்மதம் மூளி கரம்பிடித்து
உறவுக்குள் நுழையும் மணமக்கள்


வாழ்கையை முறித்துக்கொண்டு
மயானத்திற்கு பயணமாகும்
வாழ்ந்து மடிந்த மனிதன்


புன்னகை வாழ்த்து கண்ணீர்
சுமந்து வந்த உறவுகளை
மூன்று திசையாக பிரித்தது
அந்த ஊர் வீதி

மரம்

புன்னகையுடன் தளிர் இலைகள்
தலைதாழ்த்தியபடி பழுத்த இலைகள்
தாய் காலடியில் உறங்கும்
இறந்து உதிர்ந்த சருகுகள்
இன்பம் துன்பம் இரண்டையும்
சுமந்து நிற்கிறது தாய்மரம்


Monday, March 14, 2011

அழிவு சில உண்மைகள்
யற்கையின் சீற்றங்களில்
பொருளும் உயிரும் சிதைவதைகண்டு
பயந்து மிரளும் மனிதர்கள்
இயற்கையை பழிக்கிறான்


ஞ்ச பூதங்களால் நிரப்பட்டது
உயிர்கள் வாழும் இவ்வுலகம்
தனித்திறன் கொண்டுள்ள இவர்கள்
எனக்கு அடிமைப்பட்டவர்கள்


தர்மங்களால் தலைவிரித்து ஆடிய
உம் முன்னோர்களை
இயற்கையின் துணைகொண்டு
நாம் அழித்த கதைகள்
வேதங்களில் அத்தாட்சி குறிப்புகளாய்


ளியவனை நேசி
அவன் பொருளை பறிக்காதே
பெண்மையை சீர் குலைக்காதே
ஆயுதம்கொண்டு குருதி ஒழுக்காதே
உனக்கான எத்தனை எச்சரிப்புக்கள்


வேதக் குறிப்புகளையும்
மாமனிதர்களின் போதாமைகளையும்
அலட்சியமாய் புறம்தள்ளி விட்டு
அழிவைகண்டு நடுங்கும் மனிதனே
இதுவும் ஒரு எச்சரிக்கையே


யற்கை பேரழிவுகளில் உதிரும்
உயிர் பொருள் உடமை என்று
குறிப்பு எழுதும் மனிதனே
அழிவின் ஆழமான காரணங்களை
ஏன் ஆராய மறுக்கிறாய்

என் புண்ணியம் நீயடி
ன் இதழ் உதிர்த்த
கடுத்த அனல் சொற்கள்
உன் மௌனப் பனியில்
விழுந்து உறைந்துபோகிறது


ண்மையின் ஆணவத் தீ
பெண்மையின் சாந்தத்தில்
நீத்துப் போய்விட்டதே என்று
என் நோக்கி நகைக்கிறது
உறைந்த அனல் சொற்கள்


மௌனம் காக்கும் பெண்ணே
நீ அறியா உண்மைசொல்கிறேன்
இரவல் புன்னகையுமாய் திரிந்தாலும்
என் அகம் அழுகிறது
சிந்தை பேதித்து நிற்கிறேன்
அன்றாடப் என் பணிகளும்
செயலிழந்து கிடக்கிறது
உன்னை சுட்ட குற்றஉணர்வில்


ந்த கொடும் பாவியின்
புண்ணியம் நீயடி பெண்ணே
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
ஒருமுறை என்மேல் வீசிடு


ல்லையேல் ஏற்றுகொள்
உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த நடைபினத்தின் உயிரை

Tuesday, March 8, 2011

நடுநிசி மிருகங்கள்


ச்சை பசியில் கருவண்டுகள்
விரியாத மொட்டு மலர்களில்
களவாடப்படுகிறது கற்பெனும் தேன்


மார்கழி பனி இரவில்
பெட்டநாய்களை துரத்தும் நாய்கள்
பெண்மையின் கற்பை சூறையாடும்
நடுநிசி மனித மிருகங்கள்


மிருகங்களை புணரும் மனிதர்கள்
ஓரினப் பாலினங்களின் உறவுகள்
இயற்கையை புறம்தள்ளிய மனிதர்களின்
புதிய உறவுக் கோட்பாடு


டந்தது என்ன
குற்றம் ஒரு பின்னணி
ஊடகங்களில் நிரம்பிவழிகிறது
கற்பை சூறையாடி உயிர்குடிக்கும்
மனிதமிருங்களை பற்றிய கதைகள்


ன் விஷத்தை கக்குவதற்காக
இனத்தை கொல்லுவதில்லை நல்லபாம்பு
தன் உணர்ச்சிகளை கக்கிவிட்டு
உயிர்களை கொல்லும் மனிதமிருகங்கள்


ட்டங்கள் கொண்டு  சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய


Monday, March 7, 2011

மனிதனும் புகைப்படமும்

படமற்ற மழலை புன்சிரிப்பு
சுட்டித்தனம் குட்டி குறும்பு பால்யம்
அரும்பு தளிர்மீசை காளைபருவம்
இறந்து போன நினைவுகளை
உயிர்தெளுப்பும் பழைய புகைப்படங்கள்


ழுத்து காதுகளில் மின்னும்பொன்
வாழ்க்கை இடைவெளிகளில் துலைந்துபோன
தாய்வீட்டு சீதனம் பத்திரமாக
பழைய திருமண புகைப்படத்தில்


புன்னகை அழுகை  வெறுப்பு  
பழைய புகைப்படங்களில்
உறவுகள் சுமந்து நிற்கும்
விலை மதிப்பற்ற  உணர்வுகள்ரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும்
கருவையும் சித்திரபடுத்தும்
புதிய மனித கலாச்சாரம்


வீன சித்திர கோர்வைகள்
வெளிச்சமிட்டு காட்டுகிறது
மனித ஆரோக்கியங்களை


புகைப்படம் ஆயுளை குறைக்கும்
முன்னோர் வாக்கு மெய்யாகிறது
பந்த உறவுகளை துண்டித்துச்செல்லும்
சில மனித உறவுகள்


நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள்


ருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்


Saturday, March 5, 2011

மனிதம் சில உண்மைகள்
பெற்ற வலியை தாயும்
வளர்த்த கஷ்டம் தந்தையும்
ஈன்றதன் விலை பிள்ளைகள்
படைப்பின் காரணங்களுடன் இறைவன்


சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்


யிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்


ணைந்த இரு மனங்களின்
எண்ணங்கள் உண்ணுதலில்
உறவின் இடைவெளியை நிரப்புகிறது
தாம்பத்தியத்தின் இனிப்பும் கசப்பும்


ட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்


ணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்

Thursday, March 3, 2011

பெண்மை சில பொய்கள்
ரோஜா இதழ்களின் நடுவே
மொட்டு மல்லிகை சரங்கள்
என்னவளின் வெண்பற்கள்வெண்ணிலவின் நடுவே
இரு இதழ் ரோஜா
என்னவளின் இதழ்கள்கால் முளைத்த ரோஜா
வீதியில் நடந்த அடையாளம்
என்னவளின் பாதச் சுவடுகள்ருப்பு வெள்ளையில்
பூத்த இருமலர்கள்
என்னவளின் விழிகள்சிதறிய முத்துக்களின்
மெல்லிசை ஒலிகள்
என்னவளின் சிரிப்புவெண்பனியில் நனைந்த
ஒற்றை ரோஜா
குளித்த என்னவளின் முகம்ன்னவள் துயில் கொள்கிறாள்
சலனம் செய்யாமல்
மெல்ல வீசும் தென்றல்பொய்யெனும் போதையில்
மதிமயங்கும் பெண்மைகள்
மறந்து போகிறார்கள்
உலக அழகில் சிறந்தது
பெண்மை என்பதைபெண்மையின் அழகை
மிகைப்படுத்திச் சொல்கையில்
உணர்ந்து கொள்ளுங்கள்
அவர்கள் பொய்யர்கள் என்று

Tuesday, March 1, 2011

அற்பங்களின் பேதங்கள்

கொழுந்துவிட்டு எரியும் சிதையில்
வந்து விழும் உடல்களின்
தரம் பார்ப்பதில்லை நெருப்புசுவாச நாளங்களில் ஊடிருவி
மூச்சு உயிர் கொடுக்கும்
காற்றுக்கும் இல்லை பேதம்தாகத்தால் தன்னை அருந்தும்
உயிர்களின் இனம் நிறம்
பார்ப்பதில்லை நீர்ன் அனலின் வெட்டங்களால்
கருமை இருளை துரத்தும்
கதிரவனும் பாரபட்சம் பார்பத்தில்லைன்னில் வித்திடும் விதைகளில்
தளிர்வது கள்ளிச்செடி என்றறிந்து
வேருக்கு வழி மறுப்பதில்லை மண்சுழலும் அண்டங்களை சுமக்கும்
எல்லையற்ற பிரம்பஞ்சம் கொண்டா
ஆகாயத்திற்கும் இல்லையே பேதம்தான் படைத்த படைப்பினங்கள்
தன்னை புறம் தள்ளியும்
பிரபஞ்சத்தின் ஏழாம்சுவர்களுக்கு
அப்பால் இருந்து படைப்பினங்களுக்கு
உணவளிக்கும் இறைவனுக்கும் இல்லையே இப்பேதம்ட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
உனக்கு மட்டும் ஏனோ . . .
இந்த பேதங்கள் ?


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...