Tuesday, March 1, 2011

அற்பங்களின் பேதங்கள்





கொழுந்துவிட்டு எரியும் சிதையில்
வந்து விழும் உடல்களின்
தரம் பார்ப்பதில்லை நெருப்பு



சுவாச நாளங்களில் ஊடிருவி
மூச்சு உயிர் கொடுக்கும்
காற்றுக்கும் இல்லை பேதம்



தாகத்தால் தன்னை அருந்தும்
உயிர்களின் இனம் நிறம்
பார்ப்பதில்லை நீர்



ன் அனலின் வெட்டங்களால்
கருமை இருளை துரத்தும்
கதிரவனும் பாரபட்சம் பார்பத்தில்லை



ன்னில் வித்திடும் விதைகளில்
தளிர்வது கள்ளிச்செடி என்றறிந்து
வேருக்கு வழி மறுப்பதில்லை மண்



சுழலும் அண்டங்களை சுமக்கும்
எல்லையற்ற பிரம்பஞ்சம் கொண்டா
ஆகாயத்திற்கும் இல்லையே பேதம்



தான் படைத்த படைப்பினங்கள்
தன்னை புறம் தள்ளியும்
பிரபஞ்சத்தின் ஏழாம்சுவர்களுக்கு
அப்பால் இருந்து படைப்பினங்களுக்கு
உணவளிக்கும் இறைவனுக்கும் இல்லையே இப்பேதம்



ட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
உனக்கு மட்டும் ஏனோ . . .
இந்த பேதங்கள் ?


12 comments:

  1. அருமையாக உள்ளது அலி.

    "நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
    நீரினும் மெல்லிய வெறுமொரு
    இந்திரியத் துளியில் பிறந்த
    அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே .."


    வாழ்த்துக்கள்

    அன்புடன்,
    யாதுமானவள்

    ReplyDelete
  2. அருமை கடைசி வரிகள் நச் ! அருமை நண்பரே ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. வரிகள் ஒவ்வொன்றும் அருமை...!

    //நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
    நீரினும் மெல்லிய வெறுமொரு
    இந்திரியத் துளியில் பிறந்த
    அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
    உனக்கு மட்டும் ஏனோ . . .
    இந்த பேதங்கள் ?//

    ரொம்ப நல்லா இருக்கு....!!!

    ReplyDelete
  4. //நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
    நீரினும் மெல்லிய வெறுமொரு
    இந்திரியத் துளியில் பிறந்த
    அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
    உனக்கு மட்டும் ஏனோ . . .
    இந்த பேதங்கள் ?//

    நச் வரிகள்.. பதில் சொல்ல முடியாமல் தான் இருக்கிறது

    ReplyDelete
  5. அருமை... வார்த்தைப் பிரயோகமும், கருத்துப் பிரவாகமும்...

    //தன்னில் வித்திடும் விதைகளில்
    தளிர்வது கள்ளிச்செடி என்றறிந்து
    வேருக்கு வழி மறுப்பதில்லை மண் //

    ரசித்தேன்

    ReplyDelete
  6. சிந்திக்கத்தூண்டும் அற்புத வரிகள் செய்யத் அருமை உண்மையான வரிகள் இவைகள் நன்றி

    ReplyDelete
  7. அற்ப்புத வரிகள்

    ReplyDelete
  8. அருமையான உண்மைவரிகள், உண்மையை உண்மை என எடுத்துரைக்கு கவி வரிகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பாரதியின் கூக்குரல் எதிரொலிக்கிறது ஒவ்வொரு வரிகளிலும்....
    மனதின் ஆதங்கம் தொனிக்கிறது வார்த்தைகளில்
    கோபத்தின் எழுத்துக்கள் தெறிக்கிறது சுடர் சுடராய்.....

    இனம் காணாத இயற்கையின் வழியில்
    மனிதன் என்று நடப்பான் என்று நமக்கும் ஆதங்கம் பிறக்கிறது....

    அன்பு வாழ்த்துக்கள் சையத் அலி...

    ReplyDelete
  10. நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
    நீரினும் மெல்லிய வெறுமொரு
    இந்திரியத் துளியில் பிறந்த
    அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
    உனக்கு மட்டும் ஏனோ . . .
    இந்த பேதங்கள் ?


    அருமையான கேள்வி ரொம்ப சிந்திக்க வைக்கிறீங்க ... மனிதன் மட்டும் தான் மனிதனை அடித்து சாப்பிடுகிறான்..அடுத்தவனை தள்ளிவிடு முன்னேற ஆசை படுகிறான்..பேராசை அகம்பாவம் தான் என்ற அகந்தை இப்படி பலவேறு விஷங்களை தடவிய மனிதா திருந்த முயற்சி செய்

    ReplyDelete
  11. வரிகள் அத்தனையும் அருமை சிந்திக்க உங்களின் கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பேதம் பேதைகளின் மேதாவித்தனம் தான்.
    சிந்தனைக் கவிதை.. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...