Thursday, March 3, 2011

பெண்மை சில பொய்கள்




ரோஜா இதழ்களின் நடுவே
மொட்டு மல்லிகை சரங்கள்
என்னவளின் வெண்பற்கள்



வெண்ணிலவின் நடுவே
இரு இதழ் ரோஜா
என்னவளின் இதழ்கள்



கால் முளைத்த ரோஜா
வீதியில் நடந்த அடையாளம்
என்னவளின் பாதச் சுவடுகள்



ருப்பு வெள்ளையில்
பூத்த இருமலர்கள்
என்னவளின் விழிகள்



சிதறிய முத்துக்களின்
மெல்லிசை ஒலிகள்
என்னவளின் சிரிப்பு



வெண்பனியில் நனைந்த
ஒற்றை ரோஜா
குளித்த என்னவளின் முகம்



ன்னவள் துயில் கொள்கிறாள்
சலனம் செய்யாமல்
மெல்ல வீசும் தென்றல்



பொய்யெனும் போதையில்
மதிமயங்கும் பெண்மைகள்
மறந்து போகிறார்கள்
உலக அழகில் சிறந்தது
பெண்மை என்பதை



பெண்மையின் அழகை
மிகைப்படுத்திச் சொல்கையில்
உணர்ந்து கொள்ளுங்கள்
அவர்கள் பொய்யர்கள் என்று

13 comments:

  1. குரு மிக ரசித்தேன் ,,,
    தொடர்ந்து கலக்குங்க ....

    ReplyDelete
  2. ரொம்ப ரசித்தேன் குரு ...
    உண்மைதான் நீங்கள் கூறிய விதம் அழகு

    ReplyDelete
  3. அற்ப்புதமான கவிதை
    காதலிப்பவர்கள் உஷார்.
    உங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக
    புகழ்ந்தால் அவர்கள் பொய்யர்கள் என்று
    புரிந்துகொள்ளுங்கள். மாறாக மயங்கி விடாதீர்கள்

    ReplyDelete
  4. பெண்ணை நன்றாக ரசித்திருக்கிறீர்கள்
    வாவ் என்று சொல்லத்தோன்றுகிறது

    ReplyDelete
  5. கடைசியில் கவுத்துப்புட்டியே நண்பா

    மொத்தத்தில் இந்த மீனு மாதிரி இருப்பாங்க என்று சொல்ல வந்தேன் கவுந்துட்டேப்பா

    ReplyDelete
  6. பெண்மை அழகின் வெளிப்பாடு அழகான கவிதையில் உரைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  7. அட அசத்தலான வர்ணனை... பாராட்டுகக்ள் செய்தலி..

    ReplyDelete
  8. பெண்ணின் அழகை வர்ணிக்க பூக்களையே அதிலும் குறிப்பிட்டு ரோஜா மல்லிகையை தேர்ந்தெடுத்த விதம் மிக அழகு.... பெண்மை எத்தனை அழகு என்பதை இதோ வரிகளில் உணர தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....

    ReplyDelete
  9. பிடித்த வரிகள் :
    "
    பெண்மையின் அழகை
    மிகைப்படுத்திச் சொல்கையில்
    உணர்ந்து கொள்ளுங்கள்
    அவர்கள் பொய்யர்கள் என்று.
    "
    ரசித்த வரிகள் :
    "கால் முளைத்த ரோஜா
    வீதியில் நடந்த அடையாளம்
    என்னவளின் பாதச் சுவடுகள் "

    அருமை நண்பரே ! இப்படித்தான் படுபாதகக் குழிகளில் விழுந்து மாண்டு போகின்றனர் பெண்கள் !

    ReplyDelete
  10. கவிதை நல்லா இருக்கு நண்பரே...

    //பெண்மையின் அழகை
    மிகைப்படுத்திச் சொல்கையில்
    உணர்ந்து கொள்ளுங்கள்
    அவர்கள் பொய்யர்கள் என்று/

    ReplyDelete
  11. நல்லத்தான் இருக்கு.... பொய் சொன்னாலும் ஓக்கை... எம்மை குறைசொல்லாட்டில் சரிதான்..

    ReplyDelete
  12. பெண்மையின் அழகை
    மிகைப்படுத்திச் சொல்கையில்
    உணர்ந்து கொள்ளுங்கள்
    அவர்கள் பொய்யர்கள் என்று.

    உண்மையை அப்படியே கூறிவிட்டீர்கள்

    ReplyDelete
  13. நல்ல ரசனை நல்ல அழுத்தமான கவிதை ..பெண்மை என்றுமே சிறப்பு .. அழகில் மட்டுமல்ல

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...