Saturday, March 5, 2011

மனிதம் சில உண்மைகள்
பெற்ற வலியை தாயும்
வளர்த்த கஷ்டம் தந்தையும்
ஈன்றதன் விலை பிள்ளைகள்
படைப்பின் காரணங்களுடன் இறைவன்


சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்


யிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்


ணைந்த இரு மனங்களின்
எண்ணங்கள் உண்ணுதலில்
உறவின் இடைவெளியை நிரப்புகிறது
தாம்பத்தியத்தின் இனிப்பும் கசப்பும்


ட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்


ணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்

9 comments:

 1. உண்மைதான் செய்யாது.இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் உலகத்தில் எந்த சச்சரவும் வராதே

  ReplyDelete
 2. பெற்றோரின் பெற்ற வளர்த்த வலியை அறியாத பிள்ளைகள்.....
  தன் ஆசைகள் கூட நியாயமானது என்றாலும் ஒடுக்கப்படும்போது தெரியும் வேதனை.....
  இடைவெளி இல்லாதிருக்கும் வரை இல்லறம் இனிப்பதும் புரிதல் மறைந்தப்பின் இடைவெளி விரிந்தப்பின் இருவருக்குமிடையே தாம்பத்தியம் கசப்பதும்.....
  அன்பும் நட்பும் காதலும் புரிதல் உள்ளவரை நேசம் தொடர்வதும் நேசம் மறைந்ததும் புரிதலின்மை தொடங்குவதும் அதனால் ஒதுக்கப்படும்போது உலகமே ஒதுக்கியதைப்போன்ற உயிர் போகும் வலியும்.....

  உயிரை காக்கும் உடலும் இரவலே...
  பிறவி எடுக்க இறைவன் தந்த வாடகை வீடு இவ்வுடம்பே....
  அதில் இத்தனை காழ்ப்புணர்ச்சி சண்டை வெறுப்பு கோபம் ஏன் இத்தனை...
  இருக்கும் காலம் வரை இனியதை பகிர்ந்து அன்பை வென்று மனதில் நிலைத்து இருப்போமே....

  வரிகளும் வார்த்தை கோர்வைகளும் பொருத்தமாக இட்ட படமும் சிந்திக்க வைக்கும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

  தொடரட்டும் இதுபோன்ற மேன்மையான படைப்புகள் இன்னும்

  ReplyDelete
 3. சேக்காளி... நீங்க அடிக்குற பந்து எல்லாமே எப்படி சிக்ஸெருக்குப் போகுது...!!!

  //சுய ஆசைகள்
  உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
  தரம் தாழ்த்த படுகிறார்கள் மேன்மைக்குரிய உறவுகள் //

  இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன்..
  புரியாமல் அல்ல... ரொம்பப் புடித்ததனால்....

  கடைசி வரிகளில் உணர்கிறேன் கவிதையின் உயிரை..

  ReplyDelete
 4. நண்பா உன் வரிகளால் நீ எங்கோ போய்வி்ட்டாய் நண்பா ரொம்ப அற்புமாக உள்ளது உங்கள் வரிகள் அனைத்தும் தொடர்ந்தும் தாருங்கள் நண்பா பருக காத்திருக்கிறேன்

  ReplyDelete
 5. //சுய ஆசைகள்
  உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
  தரம் தாழ்த்த படுகிறார்கள்
  மேன்மைக்குரிய உறவுகள் //

  //உயிர் கொடுத்த உறவானாலும்
  வரைமுறை பருவங்களில்
  விலக்கு வேலி பிணைக்கிறது
  சுய அந்தரங்கள்///

  சிக்‌ஷர் தான் அவருக்கு அடிக்க தெரியும்

  ReplyDelete
 6. ///சுய ஆசைகள்
  உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
  தரம் தாழ்த்த படுகிறார்கள்
  மேன்மைக்குரிய உறவுகள்///


  ////நட்பு காதல் இல்லறம்
  புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
  மனவீட்டில் குடி இருக்கும்
  வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்

  அணுக்கள் இழையும் இந்திரியநீர்
  உயிர் தளிர்க்கும் கருவறை
  ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
  உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
  சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
  எல்லாமே ஒரு இரவல்தான்///

  மிக ஆழமான கருத்துள்ள கவிதை செய்தாலி வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் எழுத்துப்பயணத்தை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வாவ்... வாவ்... சூப்பர்...!!!

  //அணுக்கள் இழையும் இந்திரியநீர்
  உயிர் தளிர்க்கும் கருவறை
  ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
  உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
  சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
  எல்லாமே ஒரு இரவல்தான்////


  அருமையான வரிகள்...

  ReplyDelete
 8. காயம் இது பொய்.. வெறும் காற்றடைத்த பை என்று கூறிப்போனார்கள் சித்தர்கள்... இன்றைய எளிய தமிழில் அந்த நிலையாமையை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் செய்யதலி..

  சிற்சில எழுத்துப் பிழைகள் - கவனம் செலுத்துங்கள்..!

  பாராட்டுக்கள் கனிஞரே..!

  ReplyDelete
 9. அருமை அனைத்து வரிகளும் சிந்திக்க தூண்டும் உண்மைகள் உள்ளன ஆழமாக படித்தால் படிபினை உண்டு

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...