Monday, March 7, 2011

மனிதனும் புகைப்படமும்





படமற்ற மழலை புன்சிரிப்பு
சுட்டித்தனம் குட்டி குறும்பு பால்யம்
அரும்பு தளிர்மீசை காளைபருவம்
இறந்து போன நினைவுகளை
உயிர்தெளுப்பும் பழைய புகைப்படங்கள்


ழுத்து காதுகளில் மின்னும்பொன்
வாழ்க்கை இடைவெளிகளில் துலைந்துபோன
தாய்வீட்டு சீதனம் பத்திரமாக
பழைய திருமண புகைப்படத்தில்


புன்னகை அழுகை  வெறுப்பு  
பழைய புகைப்படங்களில்
உறவுகள் சுமந்து நிற்கும்
விலை மதிப்பற்ற  உணர்வுகள்



ரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும்
கருவையும் சித்திரபடுத்தும்
புதிய மனித கலாச்சாரம்


வீன சித்திர கோர்வைகள்
வெளிச்சமிட்டு காட்டுகிறது
மனித ஆரோக்கியங்களை


புகைப்படம் ஆயுளை குறைக்கும்
முன்னோர் வாக்கு மெய்யாகிறது
பந்த உறவுகளை துண்டித்துச்செல்லும்
சில மனித உறவுகள்


நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள்


ருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்


14 comments:

  1. சிந்தனைத்துளிகளான உங்கள் வரிகள் இனிமை வாழ்த்துக்கள் உறவே

    ReplyDelete
  2. சிந்தனையில் எட்டிய வரிகள் சித்திரமாய் வரைந்த ஒரு ஓவியம் போல் உங்களின் கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Another SIXER from சேக்காளி...

    //வரம்பற்ற அலாதி ஆசைகள்
    கருவறையில் தளிரிடும் கருவையும்
    சித்திரபடுத்தும் புதிய மனித கலாச்சாரம் //

    //நாளைய அடையாளத்திற்காக
    கண்ணாடி சில்லுக்குள் அடைக்கலம் தேடுகிறார்கள்
    நேற்றுவரை வாழ்ந்தவர்கள் //

    அட..அட..அட...

    புகைப்படம் என்னும் விஞ்ஞானம், கடைசி வரிகளில் மெய்ஞானத்தை உணர்த்துகிறது.

    சேக்காளி Rocks...

    ReplyDelete
  4. அருமை தனி பயணம் புகைப்பட தருணம் ! அருமை ! மனிதம் மாறுகிறது மனம் மாறவில்லை புகைப்படம் ! பழைய புகைப்படம் பந்தபாசங்களுடன் மின்னும் உணர்வுகள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  5. நீண்ட நாட்களின் பின் கவிதையோடு வந்திருக்கிறீங்க . அருமை.

    ReplyDelete
  6. அழகான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. வரிகள் ஒவ்வொன்றும் அருமை...!

    நீங்கள் எழுதிய புகைப்படம் அழகு!!

    ReplyDelete
  8. //வரம்பற்ற அலாதி ஆசைகள்
    கருவறையில் தளிரிடும் கருவையும்
    சித்திரபடுத்தும் புதிய மனித கலாச்சாரம் //

    அருமையான புகைப்படம்..

    ReplyDelete
  9. இறந்து போன நினைவுகளை
    உயிர்தெளுப்பும் பழைய புகைப்படங்கள் ........

    ...கவிதை அழகாய் நினைவு மீட்டுகிறது

    ReplyDelete
  10. புகைப்படத்தில் காணும்போது மனிதனின் பிம்பங்கள் மட்டுமே தெரியவருகிறது மனிதனின் அகம் வெளிப்படுவதில்லை...

    அன்றைய காலக்கட்டத்தில் புகைப்படத்தின் அத்தியாவசியம் பற்றிய விவரங்களும் அழகிய கோர்வையாக வார்த்தைகள் எங்கிருந்து தான் இத்தனை அழகாய் கிடைக்கிறதோ சையது அலிக்கு இத்தனை அருமையாக வரி அமைத்து கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

    ReplyDelete
  11. இது வெறும் கவிதை இல்ல நண்பரே சத்தியமான உண்மை. இந்த புகைப்படம் தான் இன்றைக்கு உயிரோட இருக்கு

    ReplyDelete
  12. கருவறையில் உடுத்திய உருவத்தை
    மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
    இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
    புகைப்பட சித்திரங்களில்
    தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்

    ............உடலின் நிலையாமையை விளக்கும் இந்த வரிகள் பாராட்டுகளுக்கு உரியன. நீரில் எழுதும் எழுத்துக்களை போன்றன இந்த யாக்கை

    ReplyDelete
  13. கருவறையில் உடுத்திய உருவத்தை
    மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
    இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
    புகைப்பட சித்திரங்களில்
    தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்

    யாதாத்தமான கவிவரிகள் மிகவும் சிறப்புவாய்ந்த கருத்துக்களைதாங்கிவந்துள்ளது அன்புபாராட்டுக்கள் தோழா தொடர்ந்து தாருங்கள்தோழா

    ReplyDelete
  14. குரு ,,,
    அசத்தி புட்டிக....
    செம கலக்கல் ..
    வரிகள் ஒவ்வொன்றும் வரலாறாய் ..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...