Tuesday, March 8, 2011

நடுநிசி மிருகங்கள்






ச்சை பசியில் கருவண்டுகள்
விரியாத மொட்டு மலர்களில்
களவாடப்படுகிறது கற்பெனும் தேன்


மார்கழி பனி இரவில்
பெட்டநாய்களை துரத்தும் நாய்கள்
பெண்மையின் கற்பை சூறையாடும்
நடுநிசி மனித மிருகங்கள்


மிருகங்களை புணரும் மனிதர்கள்
ஓரினப் பாலினங்களின் உறவுகள்
இயற்கையை புறம்தள்ளிய மனிதர்களின்
புதிய உறவுக் கோட்பாடு


டந்தது என்ன
குற்றம் ஒரு பின்னணி
ஊடகங்களில் நிரம்பிவழிகிறது
கற்பை சூறையாடி உயிர்குடிக்கும்
மனிதமிருங்களை பற்றிய கதைகள்


ன் விஷத்தை கக்குவதற்காக
இனத்தை கொல்லுவதில்லை நல்லபாம்பு
தன் உணர்ச்சிகளை கக்கிவிட்டு
உயிர்களை கொல்லும் மனிதமிருகங்கள்


ட்டங்கள் கொண்டு  சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய


7 comments:

  1. சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
    துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
    அவன் மர்மத்தை அறுத்து
    நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
    இனி ஒருவனும் துணியமாட்டான்

    முற்றிலும் உண்மையான தீர்வு ,,,,,,

    தீபிழம்பு கவிதைக்கு நன்றி

    ReplyDelete
  2. சாட்டையடி கவிதை நெருப்பு மசியில் தோய்த்த வரிகள்...
    மனிதமிருகங்களை விரட்டி விரட்டி அவன் வீழும் வரை அடித்து எரித்து பசி அடங்காத அந்த ஆக்ரோஷ வரிகள் கைத்தட்ட வைக்கிறது செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள் நெருப்பு வரிகளால் மனிதமிருகங்களை எரித்ததற்கு....

    ReplyDelete
  3. சாட்டை அடிக்கவிதை அருமை

    தன் விஷத்தை கக்குவதற்காக
    இனத்தை கொல்லுவதில்லை நல்லபாம்பு
    தன் உணர்ச்சிகளை கக்கிவிட்டு
    உயிர்களை கொல்லும் மனிதமிருகங்கள்

    இந்த வரிகள் உண்மையான வரிகள் வாழ்த்துக்கள்
    உங்கள் உள்ளம் எனக்கு எனக்கு புரிகிறது
    நன்றிகள் உங்கள் குமுறலுக்கு

    ReplyDelete
  4. வரிகளும் அதன் வலிகளும் ரொம்ப நெகிழ வைத்துவிட்டது
    நிச்சயம் இப்படி செய்தால் தான் இந்த பிண்டங்கள் பயப்படும்

    ReplyDelete
  5. இது கவிதையல்ல, ஒரு நெருப்பு பிழம்பு!
    இது வரிகளல்ல, வார்ப்பட இரும்பு!
    இது படிப்பதற்க்கு மட்டுமல்ல, ஒரு படிப்பினையும் கூட!
    இது விரல்களில் பிரவாகமெடுத்த இதயத்தின் கொதித்த ரத்தம்.

    ReplyDelete
  6. சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
    துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
    அவன் மர்மத்தை அறுத்து
    நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
    இனி ஒருவனும் துணியமாட்டான்



    எல்லோரும் "ஒண்ணும்" இல்லாம தான் இருக்க வேண்டி வரும்

    ReplyDelete
  7. பொறுப்புடன் - நல்ல
    ஒறுப்பைச் சொன்னீர்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...