Monday, March 14, 2011

என் புண்ணியம் நீயடி




ன் இதழ் உதிர்த்த
கடுத்த அனல் சொற்கள்
உன் மௌனப் பனியில்
விழுந்து உறைந்துபோகிறது


ண்மையின் ஆணவத் தீ
பெண்மையின் சாந்தத்தில்
நீத்துப் போய்விட்டதே என்று
என் நோக்கி நகைக்கிறது
உறைந்த அனல் சொற்கள்


மௌனம் காக்கும் பெண்ணே
நீ அறியா உண்மைசொல்கிறேன்
இரவல் புன்னகையுமாய் திரிந்தாலும்
என் அகம் அழுகிறது
சிந்தை பேதித்து நிற்கிறேன்
அன்றாடப் என் பணிகளும்
செயலிழந்து கிடக்கிறது
உன்னை சுட்ட குற்றஉணர்வில்


ந்த கொடும் பாவியின்
புண்ணியம் நீயடி பெண்ணே
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
ஒருமுறை என்மேல் வீசிடு


ல்லையேல் ஏற்றுகொள்
உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த நடைபினத்தின் உயிரை

6 comments:

  1. வாவ் காதல் உச்சத்தில் உள்ளீர்களோ?

    ReplyDelete
  2. மௌனம் காக்கும் பெண்ணே
    நீ அறியா உண்மைசொல்கிறேன்
    இரவல் புன்னகையுமாய் திரிந்தாலும்
    என் அகம் அழுகிறது
    சிந்தை பேதித்து நிற்கிறேன்
    அன்றாடப் என் பணிகளும்
    செயலிழந்து கிடக்கிறது
    உன்னை சுட்ட குற்றஉணர்வில்
    மனதை சுட்ட உண்மை வரிகளை உள்ளடக்கிய உமது கவிதை அழகு

    ReplyDelete
  3. பெண்ணின் மனதை ஆழமாய் உணர்ந்து அன்பை அழகாய் வெளிக்கொணர்ந்த வரிகள் இந்த கவிதை...

    அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி.

    ReplyDelete
  4. //இந்த கொடும் பாவியின்
    புண்ணியம் நீயடி பெண்ணே
    விலைமதிப்பற்ற உன் புன்னகையை
    ஒருமுறை என்மேல் வீசிடு//

    அனைத்து வரிகளும் அருமை ரசித்தேன்.. உணர்வு பூர்வமாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. அருமை. அனைத்து வரிகளும் சிறப்பானவை

    ReplyDelete
  6. அருமை அருமை !
    "இல்லையேல் ஏற்றுகொள்
    உன் காலடியில் சமர்ப்பிக்கும்
    இந்த நடைபினத்தின் உயிரை"

    இந்த வரிகளில் வலிகள் சுமந்த அக்கறைக்காதல் அம்பலமாகிறது ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...