Saturday, March 19, 2011

காகமும் மனிதனும்

மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்து
வீதியோரம் செத்து கிடக்குது
இரைதேடிச் சென்ற காகம்

வீதியின் இருபுறம் வீற்றிருந்த
மரக்கிளைகளை கருமைகொண்டு
போர்த்தி காக்கா கூட்டங்கள்

காகங்கள் சிலவை
பெரும் கரைச்சல் சத்தமிட்டு
பறந்து வந்து விரட்டியது
அவ்வழியே வருபவர்களை

ன் இனத்தின் உயிரிழப்பை
கரைச்சல் அழுகை இட்டு
தம் துக்கங்களை ஊருக்குசொல்லும்
காகத்தின் ஒற்றுமை

*********************************************
சீறி வந்த வாகனத்தில்
அடிபட்டு உயிருக்கு ஊசலாடும்
சாலையை கடந்த மனிதன்

கீறிய உடலில் இருந்து
உதிரம் சொட்டியபடி
உதவி யாசிக்கிறான் அவன்

டிவந்து கூடி நின்றவர்கள்
வேடிக்கை பார்த்து விட்டு
விதைத்து சென்றனர் அனுதாபங்களை

னம் கனிதந்த மனிதர்கள்
உதவ முற்படிகையில்
சட்டங்களின் பயமுறுத்தலும்
நாழிகையின் வீண் விரயமும்
விலங்கிடுகிறது அவர்களை

னித கூட்டம் நிரம்பிவழியும்
பெருநகரச் சாலையில்
உதவ நாதியற்று மடிந்தது
சற்றுமுன்வரை துடித்த உயிர்

12 comments:

 1. "மனம் கனிதந்த மனிதர்கள்
  உதவ முற்படிகையில்
  சட்டங்களின் பயமுறுத்தலும்
  நாழிகையின் வீண் விரயமும்
  விலங்கிடுகிறது அவர்களை "

  Great lines...!

  ReplyDelete
 2. ஆறறிவு படைத்த மனிதன் எத்தனை சுயநலத்துடன் தான் தன் குடும்பம் தன் மனைவி மக்கள் என்று இருக்கிறான்?

  கண்முண் நடக்கும் நிகழ்வுகளில் தன்னை ஒரு பார்வையாளனாக மட்டும் காண்பித்துக்கொண்டு

  ஆனால் ஓரறிவு தான் காகத்துக்கு.....
  தன் இனத்தில் ஒரு பறவை துன்ப பட்டாலும் உடன் எல்லா பறவைகளும் கரைந்து ஓடி வந்து அடைகாப்பது போல் நிற்கும் காகங்களுக்கு என் சல்யூட்..

  அருமையான வரிகளாக மனிதனை காகத்துடன் ஒப்பிட்டு அதற்கு இருக்கும் கருணை ஈவு இரக்கம் கூட மனிதனுக்கு இல்லை என்பதை மிக அழகான வரிகளால் எளிய நடையில் உணர்த்திய செய்தாலிக்கு என் அன்பு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. சிந்திக்கவைக்கும் கவிதை
  அருமை

  ReplyDelete
 4. மிகவும் வேதனை கொண்ட கவிதை காகம் கூட ஓர் உயிர்தானே

  ReplyDelete
 5. இரண்டு வெவ்வேறு காட்சிகள்... அதிசய ஒற்றுமையும் அதிரவைக்கும் வேற்றுமையும்... இதனை அழகாகப் படம் பிடித்து மனிதன் இழந்துவிட்ட மனித நேயத்தை வலியுறுத்த வைக்கும் அழகிய கவிதை...

  பாராட்டுகக்ள் செய்தாலி..!

  ReplyDelete
 6. யோசிக்க வைக்கும் பதிவுக்கு நன்றி கவிஞரே

  ReplyDelete
 7. அருமையான கருத்து. ஆனால் இதன் மறுபக்க சிந்தனையையும் பதிய விரும்புகிறேன்.

  காகங்கள் காலம் காலமாக இயற்கைக்கு மாறுபடாமலும், வஞ்சனையில்லாமலும் தன்னுடைய அறத்தில் அப்படியே இருக்கிறது. மனிதனோ, சுயநலத்துக்காக அறத்தை மீறிய செயல்களில் குடும்பத்துக்குள், சமூகத்துக்குள், சட்டத்துக்குள், ஆட்சியில் எல்லாவிடத்திலும் அறத்துக்கு அழிவை ஏற்படுத்திவிட்டான்.

  ஆக தன் இனத்தில் ஒன்று இறந்ததை கண்டு கலங்கும் காக கூட்டத்தை போலில்லாமல் தன் இனமே இலங்கையில் அழிந்த போதும்,கண்ணுக்கு முன்னால் தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் எரிக்கப்பட்டு கொன்ற சம்பவத்தில் அனைவரும் விடுதலையான போதும் மெளனமாக இருக்கிறோம். சராசரி மனிதனுக்கு அறத்தின் மேலும், சட்டத்தின் மேலும் நம்பிக்கை வளர்ந்தால் தான் இந்நிலை மாறும்.

  ReplyDelete
 8. முக்கியமான விடயமும் கூட அழகாக சொல்லப்பட்டிருக்கிறது
  உண்மையில் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த வீதிவிபத்து அதிகம் நிகழ்வதைக்காணலாம் அதுவும் அசுரவேகத்தில் சதைப்பிண்டங்கள் சாலையில் தெறிப்பது போன்ற விபத்துகளும் நடப்பது உண்டு ஆனால் சட்டம்தான் கையை கட்டிவைக்கிறது எமது உணர்வுகள் துடித்தாலும் எம்மை அருகே நெருங்க விடுவதில்லை

  உணரச்செய்யும் உண்மை வரிகள் வாழ்த்துகள்

  ReplyDelete
 9. சிந்திக்க வைத்த கவிதைக்கு நன்றி.

  ReplyDelete
 10. உண்மை வரிகள் நண்பரே... சட்டத்தின் செயல்பாடுகளால் பலர் விலகி செல்லுகிறார்கள்...

  உங்களின் சமூக பார்வைக்கு வாழ்த்துகிறேன்.. வலிகளை சுமந்த வரிகள் நண்பரே பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. சிந்திக்க வைக்கும் கவிதை அருமை.

  ReplyDelete
 12. வீதி வழியில்
  விதி செய்த விபத்தில்
  விலையில்ல உயிர்களின்
  நிலைதனை கவிதனில் கூறி
  சிந்திக்க வைத்தவிதம்
  சிறப்பாக இருக்கிறது

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...