Monday, March 21, 2011

அவள்





ன் இரவுகளில்
உறக்கத்தை  களவாடும் 
திருடி அவள்


ன் மஞ்சத்தை 
நித்தமும்  அலங்கரிக்கும் 
வாடாமலர்  அவள்


புன்னகையின் கூர்மையால்
என் மௌனங்களை கீறும்
ஆயுதம் அவள்


கோபத்தின் வேட்கையை
சாந்தத்தால் மூடும்
பனித்துளி அவள்


ன் கனவிகளில்
வண்ணங்களை  தீட்டும்
வானவில் அவள்


ன் துயரத்தின் 
இருளை துரத்தும் 
ஒளிச்சுடர்  அவள்


கொஞ்சல் சினுங்களால்
வதைத்து சித்திரவாதை செய்யும்
அழகிய இராசட்சி அவள்


இடைவெளி தருணங்களிலும்
நினைவுகளால் ஊடுருவி
என் உடலில்  வாழும்
இரண்டாம் உயிர் அவள்

14 comments:

  1. எல்லாம் அவளே..

    அது தான் காதல்..

    ReplyDelete
  2. கவிதை மற்றும் வடிவமைப்பு அருமை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. திருடி... .வாடாமலர்.... .ராட்சசி ..ஆயுதம்.... பனித்துளி ...வானவில் ஒளிச்சுடர் ..இரண்டாம் உயிர் ... இத்தனையுமாய் அவள்

    கொடுத்து வைத்தவர் நீர் .

    ReplyDelete
  4. யாரை நினைத்து எழுதீனீர்கள் அருமையாக உள்ளது அண்ணா!

    ReplyDelete
  5. இரண்டாம் உயிர் அவள் இந்த வார்த்தைக்கே கோடி கை தட்டல்கள் உங்களுக்கு செமயா எழுதிட்டீங்க போங்க

    ReplyDelete
  6. புன்னகையின் கூர்மையால்
    என் மௌனங்களை கீறும்
    ஆயுதம் அவள்
    ........................நவீனங்களால் வார்த்தை மழை பெய்த செய்தாலி அவர்களுக்கு எப்படி புகழாரம் சூட்டுவது? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. உன்னவளின் உள்ளத்தூய்மை
    உன்னத கவி இயற்ற வைத்தது
    உன்கவியால் உயர்வுற்ற உத்தமியை
    நாங்களும் அறிய முடிந்தது.....

    அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் செய்யது அலி.

    ReplyDelete
  8. /கொஞ்சல் சினுங்களால்
    வதைத்து சித்திரவாதை செய்யும்
    அழகிய இராசட்சி அவள்

    இடைவெளி தருணங்களிலும்
    நினைவுகளால் ஊடுருவி
    என் உடலில் வாழும்
    இரண்டாம் உயிர் அவள்///

    அத்தனை வரிகளும் உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  9. பிடித்த வரிகள் :
    "இடைவெளி தருணங்களிலும்
    நினைவுகளால் ஊடுருவி
    என் உடலில் வாழும்
    இரண்டாம் உயிர் அவள்"

    ரசித்த வரிகள் :
    "கோபத்தின் வேட்கையை
    சாந்தத்தால் மூடும்
    பனித்துளி அவள் "

    அருமை ! அவள் ! ஒரு அற்புதமே !

    ReplyDelete
  10. சூப்பரோ சூப்பர்... அருஅமை அருமை... ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....

    ReplyDelete
  11. மொத்தத்தில் உங்கள் இரத்தத்தில்
    அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது
    என்பதை அத்தனை வரிகளும
    அவள் அழகுடனே
    அருமையையும் சொல்லிச் செல்கிறது

    ReplyDelete
  12. அருமை அருமை அனைத்து வரிகளும் வாவ் வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  13. உங்கள் அவங்களைப் பற்றி மிகவும் அருமையாக வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் கவிஞரே!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...