Tuesday, March 22, 2011

அரசியல் நாடகம்



பொருளால் வாங்கப்பட்ட
மேடைக் கூத்தாடிகள்
இரவல் புன்னகையுமாய் வீதியில்


க்கள் ஓட்டை வாங்கி
நாட்டை ஆளவரும்
சுயத் திறனில் நம்பிக்கையற்ற
தொகுதி வேட்பாளர்கள்


கூடி வந்து நின்று
வேடிக்கை பார்த்து விட்டு
பொருளின் தூக்கத்திற்கு ஏற்ப
வாக்களிக்கும்   மக்கள்


நாற்காலி பதவிகளுக்காக
ஐந்து வருடங்களுக்கு
ஒருமுறை அரங்கேறும்
அரசியல் நாடகம்


லைவன் மக்களை சந்திக்காமலே
வெற்றி மாலை சூடி
ஆண்ட தேசம் இது


டுத்திய உடுதுணிகள் மட்டுமே
தம் சொத்தாக வைத்திருந்த
பெருந்தலைவன் வாழ்ந்த   மண்


சற்று சிந்தித்து வாக்களியுங்கள்
வளரும் நம் சந்ததிகளின்
நாளைய நல் விடியலுக்காக


4 comments:

  1. உடுத்திய உடுதுணிகள் மட்டுமே
    தம் சொத்தாக வைத்திருந்த
    பெருந்தலைவன் வாழ்ந்த மண்
    சற்று சிந்தித்து வாக்களியுங்கள்
    வளரும் நம் சந்ததிகளின்
    நாளைய நல் விடியலுக்காக

    எல்லோருக்கும் மிக்ஸி கிரைண்டர் இலவசம் கிடைக்கும் போது எதை யோசிக்க

    ReplyDelete
  2. கரையான் புற்றில் பாம்பு குடி புகுந்தது போல் தான் இந்த் அரசியல்வாதிகள், கோபப்பட்டு வருவது ஒன்றுமில்லை நண்பரே! ஊருடன் ஒத்து வாழ் இல்லையேல் வேறுடன் கெடும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

    ReplyDelete
  3. அட்டகாச வரிகள் சையது அலி.... முகமூடியை கிழித்து இது தான் இவர்கள் என்று சாட்டையால் அடித்து நிரூபிக்கும் வரிகள், இனியாவது மக்கள் விழிப்பார்களா என்ற ஆதங்க வரிகள் இது...... அன்பு வாழ்த்துக்கள் செயது அலி

    ReplyDelete
  4. அருமையான வரிகள் நண்பரே.. சாட்டை அடி விழிப்புணர்வு கொடுக்கும் சமூக வரிகள்

    தமிழ்த்தோட்டம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...