Wednesday, March 30, 2011

மனிதனும் நவீன கடவுள்களும்
ற்றகல்வி தேடிய பொருள்
அணியப்பட்ட அதிகார மகுடம்
விசித்திரங்கள் படைக்கும் நவீனங்கள்
மனிதன் தனக்காக உயிர்த்தெளுப்பிய
கண்கண்ட தெய்வங்கள்


நிறத்திலும் குணத்திலும்
பேதங்கள் கொண்ட இவைகள்
தம்மை உயிர்த்தெளுப்பிய மனிதனின்
உதிரத்தையும் உயிரையும் குடிக்கிறது


விஸ்வரூப அவதாரம் எடுத்து
தனித் திறன் ஆணவத்தால்
மனித மனங்களுக்கு இடையே
தம்கூர்மையால் விரிசல் இட்டு
குழப்பங்களை உயிரூட்டி எழுப்புகிறது


தன் போதைகளில் மதிமயங்கி
சிந்தை பேதித்த மனிதன்
மறை பொருள் இறைவனையும்
அலட்சியமாய் புறம் தள்ளி
இயற்கையும் உயிர்களும் சீர்குலைவதை
உணர மறந்து விடுகிறான்


தியாலும் பொருளாலும்
உயிர்த்தெளுப்பிய நவீன கடவுள்கள்
தம்செயல் இழந்து மடிகையில்
சட்டென்று தடுமாறும் மனிதன்
தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான்


ன் கண்கண்ட தெய்வங்கள்
இயலாமையால் மண்டி இடுகையில்
மறைபொருள் இறைவனிடம்
தன் ஆணவங்களை களைந்து
தலை தாழ்த்துகிறான் மனிதன்
15 comments:

 1. //மதியாலும் பொருளாலும்
  உயிர்த்தெளுப்பிய நவீன கடவுள்கள்
  தம்செயல் இழந்து மடிகையில்
  சட்டென்று தடுமாறும் மனிதன்
  தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான்
  //

  சபாஷ் அனைத்துமே உண்மை வரிகள் தான் நண்பரே

  ReplyDelete
 2. சற்று இந்த கவிதையை விளக்குங்கள் சகோதரரே பொருள் யென

  ReplyDelete
 3. அன்புள்ள தோழருக்கு என் இந்த கிறுக்கலுக்கு அர்த்தம் இதோ...

  இறைவன் மனிதனை படைத்து அவன் இந்த உலகில் வாழ்வதற்கான சூழலை
  பூமி என்ற இந்த பூகோளத்தில் இயற்கை வளங்களை கொண்டு நிரப்பினான்
  ஏற்கனவே இறைவனால் படைக்கபட்டு மறைந்து இருந்தவைகளை
  அறிவில் மேலோங்கிய மனிதன் அவன் சிந்தை கொண்டு கண்டறிந்தான்
  பின் அதனை வைத்து தன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்

  மொழியினை கொண்டு கல்வியையும் .கனி வழங்க்ளைகொண்டு போருட்ட்க்ளையும்
  தன் தரத்தை உயர்த்திய மனிதன் போட்டி பொறாமைகளால் மனிதனுக்குள்
  சண்டை இட்டுக் கொண்டான்

  பிற்காலங்களின் மனிதனின் சிந்தையால் கண்டறிப்பட்ட இன்றைய நவீனங்களில்
  தன்னை தானே அடிமையாகிக்கொண்டான்

  கல்வி பணம் அறிவு அதிகாரங்கள் இவைகளை தம் கடவுளாக்கி இறைவனை புறம்தள்ளி மனிதத்தை மதிக்காமல் மதி மயங்கி திரிகிறான் மனிதன்

  கல்வி ,பணம் அறிவு அதிகாரங்கள் கொண்டு தன் மரணத்தையும் இயற்கை அழிவையும்
  தடுத்து நிறுத்த முயன்று தோற்று திரும்புகிறான்

  தான் உயிர்த்து எழுப்பிய கண்கண்ட தெய்வங்கள் எல்லாம்
  மனிதனின் அவசரங்களில் செயல் இழந்து அவன் முன் தலை குனிகையில்

  மனிதன் அதைவிட ஒரு பெரும் சக்தியை தேடுகிறான் பின் சுயம் உணர்ந்து
  தன் ஆணவத்தை களைந்து இறைவனிடத்தில் யாசிக்கிறான்

  என்றும் தோழமையுடன்
  -செய்தாலி

  ReplyDelete
 4. ஒரு நல்ல சிந்தனையை கவிதை வடிவில் கொடுத்தமைக்கு நன்றி..
  அத்தனையும் உணரப்பட வேண்டிய உண்மைகள்.

  ReplyDelete
 5. தெழிவான விளக்கமும் சிறந்த கவிதைக்கும் நன்றி

  ReplyDelete
 6. அழகிய வரிகளில் மனிதனின் ஆணவத்துக்கு கொடுத்த சாட்டையடி இக்கவிதை.....
  தான் உருவாக்கிய ஒன்றை அகந்தையுடன் நெஞ்சகட்டும்போது உருவாக்கியதே
  மனிதனை அழிக்க முயல்கிறது எனும்போது இறைவனை நாடுகிறான் தன்னுயிர் காத்துக்கொள்ள....
  உருவாக்கும் சக்தி கிடைத்தால் தன்னையும் ஆண்டவனுக்கு இணையாக தற்பெருமை குழிக்குள் விழுகிறான்...

  அருமையான வரிகளில் அழகு முத்து போன்ற கருத்து சொன்னது அருமை செய்தாலி....

  படமும் வரிகளில் கொஞ்சம் எழுத்து திருத்தம் செய்தேன் அவ்வளவே.... மின்னுகிறது வரிகள் பொன்னாக செய்தாலி... அன்பு வாழ்த்துக்கள்பா..

  ReplyDelete
 7. அழகான கவிதையும் அதற்கான விளக்கமும் அருமை சகோதரரே...

  ReplyDelete
 8. தனித்திறன் கொண்ட சீரிய சிந்தனைக்கு ஒரு சல்யூட் சேக்காளி...

  எனக்கு இது நல்லபடியா நடந்தா, உனக்கு நான் அதை காணிக்கை தருவேன் என்ற ஒப்பந்தங்களில் மனிதனும், நவீன கடவுள்களும் வாழ்கிறார்கள்.

  //மதியாலும் பொருளாலும்
  உயிர்த்தெளுப்பிய நவீன கடவுள்கள்
  தம்செயல் இழந்து மடிகையில்
  சட்டென்று தடுமாறும் மனிதன்
  தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான் //

  மெய்யான தேடல்.

  ReplyDelete
 9. நண்பா ,,,
  உன்னதமான வரிகளை உணர்ந்து
  வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றிகள்

  ReplyDelete
 10. அருமையான வரிகள்...!!

  கவிதை ரொம்ப நல்லா இருக்கு...!!

  ReplyDelete
 11. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...

  ReplyDelete
 12. ஏற்புடையதல்ல தங்களின் கவிதை! தெய்வம்,கடவுள்,ஆண்டவன்,இறைவன்,பகவான்,சாமி இவை குறிப்பதெல்லாம் ஒன்றைத்தான்!

  நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு, அது நாத்திகர் இல்லை என்பதிலே பிடிவாதமாக இருப்பார்!

  ஆத்திகர் உண்டு என்பதில் பிடிவாதமாக இருப்பார்! ஆனால் இருவரும் நினைப்பது ஒரு விடயத்தைத் தான்!

  மனிதன் தெய்வத்தை உருவாக்கியிருந்தாலும், தெய்வம் மனிதனை உருவாக்கியிருந்தாலும் அதன் பொருள் மனதின் அமைதிக்குத் தான்!

  தெய்வத்தினின்று இறைவனையும்,கடவுளிடமிருந்து ஆண்டவனையும் மற்றும் பகவானிடமிருந்து சாமியையும் வேறுபடுத்தி பிரித்தது மனிதன் என்பதை யாவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!

  அதனால் தெய்வத்தினின்று இறைவன் உயர்ந்தவரென்றோ,இறைவனிடமிருந்து தெய்வம் தாழ்ந்ததென்றோ கொள்ளுதல் அறியாமை!

  குடும்பம் என்றால் உறவுகள் இல்லாமல் அமைவது இல்லை, இங்கே குடும்பம் என்பது மதமென கொள்ளுதல் வேண்டும், குடும்பத்தின் தலைவன் இறைவன்,தெய்வம் என கொண்டால் வீண் சிந்தனைகள் தான் உறவுகள்.

  உறவுகள் ஒன்று கூடி ஒற்றுமையாக இருந்தால் தான் தலைவன் சிறந்தவனாவான்!

  இதைப் பற்றி பேசினால் இன்றல்ல இன்னும் பல வருடங்களல்ல பேசிக்கொண்டே போகலாம், எனவே தங்களின் கவிதை வரிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல!

  ReplyDelete
 13. அன்புள்ள நண்பருக்கு நான் என் இந்த கிறுக்கலில் எந்த ஒரு தெய்வத்தையும் குறிப்பிடவில்லை
  நீங்கள் தவறாக விளங்கி கொண்டீர்கள்

  கிறுக்கலின் பொருள் இதோ ..

  இறைவன் மனிதனை படைத்து அவன் இந்த உலகில் வாழ்வதற்கான சூழலை
  பூமி என்ற இந்த பூகோளத்தில் இயற்கை வளங்களை கொண்டு நிரப்பினான்
  ஏற்கனவே இறைவனால் படைக்கபட்டு மறைந்து இருந்தவைகளை
  அறிவில் மேலோங்கிய மனிதன் அவன் சிந்தை கொண்டு கண்டறிந்தான்
  பின் அதனை வைத்து தன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்

  மொழியினை கொண்டு கல்வியையும் .கனி வழங்க்ளைகொண்டு போருட்ட்க்ளையும்
  தன் தரத்தை உயர்த்திய மனிதன் போட்டி பொறாமைகளால் மனிதனுக்குள்
  சண்டை இட்டுக் கொண்டான்

  பிற்காலங்களின் மனிதனின் சிந்தையால் கண்டறிப்பட்ட இன்றைய நவீனங்களில்
  தன்னை தானே அடிமையாகிக்கொண்டான்

  கல்வி பணம் அறிவு அதிகாரங்கள் இவைகளை தம் கடவுளாக்கி இறைவனை புறம்தள்ளி மனிதத்தை மதிக்காமல் மதி மயங்கி திரிகிறான் மனிதன்

  கல்வி ,பணம் அறிவு அதிகாரங்கள் கொண்டு தன் மரணத்தையும் இயற்கை அழிவையும்
  தடுத்து நிறுத்த முயன்று தோற்று திரும்புகிறான்

  தான் உயிர்த்து எழுப்பிய கண்கண்ட தெய்வங்கள் எல்லாம்
  மனிதனின் அவசரங்களில் செயல் இழந்து அவன் முன் தலை குனிகையில்

  மனிதன் அதைவிட ஒரு பெரும் சக்தியை தேடுகிறான் பின் சுயம் உணர்ந்து
  தன் ஆணவத்தை களைந்து இறைவனிடத்தில் யாசிக்கிறான்
  குறிப்பு :மனிதன்தான் தன் அறிவைக் கொண்டு ,மொழி ,கல்வி ,பொன் ,பொருள் ,மதிப்பு ,அதிகாரம் ,இன்றைய அறிவியல் விஷயங்கள் என்று
  கண்டறிந்து அதனை தன் கண்கண்ட தெய்வங்களாக ஏற்றி அதில் மதிமங்கி மனிதத்தையும்
  இயற்கையும் சீர் குலைக்கிறான்
  ஒரு கணம் அதன்அவனின் அந்த கண்கண்ட தெய்வங்கள் செயல் இழந்து இயலாமயாகையில்
  மெய்யான இறைவனிடம் ஓடி வந்து உதவி யாசிக்கிறான்

  நவீன கடவுள்கள் என்று நான் குறிப்பிட்டது (மொழி ,பணம் ,அதிகாரம் ,இன்றைய அறிவியல் கண்டுபிடித்தங்கள் )
  இதில் நான் ஆத்திகம் நாத்திகம் எதையும் குறிப்பிடவில்லை

  என் இந்த கருத்தில் தவறு இருந்தால் மன்னித்துவிடுங்கள்

  கடவுள் ஒருவன் அவனுக்கு மதம் கிடையாது மத்தைதை உருவாக்கியவன் மனிதன்
  என்பதில் ஆக்கபூர்வமான நம்பிக்கை உள்ளவன்

  என்றும் தோழமையுடன்
  செய்தாலி

  ReplyDelete
 14. தங்களது விளக்கம் கண்டு மகிழ்வுற்றேன்! இருப்பினும் அதில் கண்டுபிடிப்புகளை தெய்வமென்றும் கடைசியில் இறைவனிடம் மன்னிப்பு கேட்பது போலும் அந்த வரிகள் அமைந்து இருந்ததால் தான் நாம் விமர்சித்தோமே ஒழிய, மற்றபடி தங்களது மனம் நோகுவதற்காக நாம் தங்களை விமர்சிக்கவில்லை! நாம் தங்களது மனதை புன்படுத்திருந்தால் எமது தாழ்மையான வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்! இதுபோல் விமர்சிக்கக்கூடிய கவிதைகளை தாங்கள் எழுத வேண்டும், அதனால் நமது நட்பு பலப்படும்! நன்றி நண்பரே!

  ReplyDelete
 15. முதலில் படித்ததும் சரியாய் புரியவில்லை.
  விளக்கம் கண்டு தெளிவுட்ட்றேன்.
  நல்லா இருக்கு.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...