Monday, March 14, 2011

அழிவு சில உண்மைகள்




யற்கையின் சீற்றங்களில்
பொருளும் உயிரும் சிதைவதைகண்டு
பயந்து மிரளும் மனிதர்கள்
இயற்கையை பழிக்கிறான்


ஞ்ச பூதங்களால் நிரப்பட்டது
உயிர்கள் வாழும் இவ்வுலகம்
தனித்திறன் கொண்டுள்ள இவர்கள்
எனக்கு அடிமைப்பட்டவர்கள்


தர்மங்களால் தலைவிரித்து ஆடிய
உம் முன்னோர்களை
இயற்கையின் துணைகொண்டு
நாம் அழித்த கதைகள்
வேதங்களில் அத்தாட்சி குறிப்புகளாய்


ளியவனை நேசி
அவன் பொருளை பறிக்காதே
பெண்மையை சீர் குலைக்காதே
ஆயுதம்கொண்டு குருதி ஒழுக்காதே
உனக்கான எத்தனை எச்சரிப்புக்கள்


வேதக் குறிப்புகளையும்
மாமனிதர்களின் போதாமைகளையும்
அலட்சியமாய் புறம்தள்ளி விட்டு
அழிவைகண்டு நடுங்கும் மனிதனே
இதுவும் ஒரு எச்சரிக்கையே


யற்கை பேரழிவுகளில் உதிரும்
உயிர் பொருள் உடமை என்று
குறிப்பு எழுதும் மனிதனே
அழிவின் ஆழமான காரணங்களை
ஏன் ஆராய மறுக்கிறாய்

4 comments:

  1. மிக அருமை.. இயற்கையை மீறி விஞ்ஞாம் வளர்ந்தாலும் இயற்கையை வெல்ல விஞ்ஞானத்தால் முடியுமா?

    ReplyDelete
  2. உண்மைதான்! இயற்க்கையை வர்ணிக்கும் அதே வாய் அதை பழிக்கவும் செய்கிறது ! மனித மனம் அல்லவா ? புரிந்துகொள்ள இயற்கைக்கே சற்று சிரமமாகத்தான் உள்ளது !

    ReplyDelete
  3. சிந்தனை வரிகள் மனிதநேயம் வளர்க்க சொல்லும் அருமையான கவிதை....

    அன்பு பாராடுக்கள் செய்தாலி.

    ReplyDelete
  4. மனிதம் அழிக்கிறான் மனிதன், மனிதனையே அழிக்கிறது இயற்கை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...