Saturday, April 30, 2011

களவும் கண்டெடுப்பும்


ந்த இடம் போகவேண்டும்
பயணத்திற்காக ஏறிய பஸ்ஸில்
களவு போனது பணப்பை

பார்க்க நல்லவனா இருக்க
களவு நாடகம் நடத்துற
ஆள்கூட்டத்தில் நகைத்தார் நடத்துனர்

விசிலின் பெரும் ஓசையில்
வேகம் தனித்த பேரூந்து
இறக்கி சென்றது இடைவெளியில்

ணத்தை களவு செய்தவர்
மான்னியனாய் பஸ்ஸில்
களவு கொடுத்தவன் நடுவீதியில்

புகைப்படம் ,குறிப்பு ,பணம்
அடையாளங்கள் சுமந்த முகவரிகள்
பணப்பையில் தஞ்சம் இருந்தவர்கள்

ரக்கமின்றி சுட்டு எரித்தான்
மரத்தின் கீழ் நிற்பவனையும்
நடு உச்சி கதிரவன்

திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம்

சோர்ந்து தளர்ந்த பாதங்கள்
வீதிக்கல் விரலிடம் சண்டையிட
வெளியே எட்டிப்பார்த்து உதிரத்துளி

சொட்டும் உதிரத் துளிகள்
வலியோ உயிர் போகிறது
துடைக்க காகிதம்தேடும் கண்கள்

தீக்காயத்தில் தேள் கொட்டல்
என்ன கொடுமை இறைவா
அகத்தில் எழுந்த வினா

காகிதம் தேடிய ஓட்டம்
தன்னிசையாக கண்ணில் பட்டது
புதரில் ஒளிந்திருந்த பணம்

ண்ணத்தில் இரண்டான காகிதம்
ஆயிரத்தின் மதிப்பை சொன்னது
அவசரமாய் கவர்ந்தது கரம்

யாரோ ஒருவரிடம் இருந்து
தவறி விழுந்த பணம்
ஆளற்ற வீதியில் எனக்காக

Tuesday, April 26, 2011

ஒரு பயணம் முடிந்தது


ன் இதமான வேட்கையால்
மூடு பனிகளை விரட்டியபடி
மெல்ல உயர்ந்தெழும் கதிரவன்

கரத்திற்கு வெளியே
விலக்கப்பட்ட நிலையில்
இயந்திர பறவைகளின் கூடாரம்

ங்கிருந்தோ வந்த ஒருபறவை
மரங்கள்சூழ்ந்த மலை அடிவாரத்தில்
வழிமாறி தரை இறக்கம்

க்கம்பார்த்து காத்திருந்த அக்னி
துளியும் இரக்கமின்றி மேய்ந்தது
அந்த மனிதர்களின் உடலை

ருவில் தளிரும்  சிசுவையும் 
நாளை இறக்கும் கிழவனையும்
சுட்டெரித்து கக்கியது அக்னி

ங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை

நாழிகை போராட்டம் முடிவில்
உயிர்களை தொலைத்து
மிச்சமாய் எரிந்துகருத்த உடல்கள்

தவிக்கரமாய் வந்த
உயிருள்ள மனித கூட்டங்கள்
எடுத்துச் சென்றன சவங்களை

தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்

பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்

ங்கையை கரம் பிடித்து 
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்

காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்

பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக


றவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
 எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்

கிராமத்து நினைவுகள்திரவனுக்கு முன் எந்திரிச்சு
முற்றம் தெளிச்சு கோலமிடும்
கன்னிப் பெண்களும் பொம்பளைங்களும்
கலப்பையை தோளில் ஏந்தி
காளைகளை கையில் பிடித்து
காடுகரைக்கு புறப்படும் ஆம்பளைங்க

யிரம் பேர்வச்சு கருதறுத்து
மலையா குவியும் நெல்லை
உறவுக்கு மிஞ்சி போக
ஊருக்கு படி அளந்தது

ழவுக்கு காளை மாடுகளும்
ஊருக்கு பால் அளக்க
பசுக்களும் எருமைகளும்
உறவுக்கு பால் கொடுக்க
வெள்ளாடுகளும்

ருவது கை சமைச்சு
பச்ச வாழயில விரிச்சு
நீண்ட வரிசையில உட்காந்து
உறவுகளுடன் ஒருவேளைச் சாப்பாடு


த்துநாள் கோவில் திருவிழா
ஊர் உறங்காத இரவுகள்
வில்லுப்பாட்டு கதைகளும்
புராண மேடை நாடகங்கள்
கூத்தாடிகளின் ஆட்டமும்
விடியல் வரை ஓடும்
திரைகட்டிய சினிமா படங்கள்

திரவன் சாயும்   சாயங்காலம்  
வீட்டுக்கு திரும்பும் ஆம்பளைங்க
குளிக்க சுடுதண்ணி போட்டு
காத்திருக்கும் பொம்பளைங்க
தெருவில் கூடி விளையாடும்
சின்னப் பயல்களும்
ஊர்கதை பேசும் பெருசுகளும்

மேக்காட்டு மலை அடிவாரத்தில
தெளிந்தோடும் ஆற்றுத் தண்ணியில
உடுதுணிகளை துவைக்கும் பெண்ணுங்களும்
முங்கி குளிக்கும் ஆம்பளைங்களும்
மீன் பிடிக்கும் சிறுவர்களும்

கைவிரல் கணக்கில் அடங்காத ரத்தஉறவுகள்
ஒரு அடுப்பெரிச்சு சோறுபொங்கி
ஒண்ணா இருந்து சாப்பிட்டு
உறவுகள் உறங்கும் ஒருவீடு

காலத்தின் சுழலில
நாகரீக மிருகம் விழுங்கிரிச்சு
என் கிராமத்தின் அந்த
அழகிய பொற்காலங்களை

ன்றும் சில தனிமைகளில்
அந்த பொற்காலங்களை எண்ணுகையில்
விழியில் கசிகிறது நீர்த்துளிகள்

Sunday, April 24, 2011

அந்த நகரத்து பூங்கா
ன்று விடுமுறை நாள்
ஏழு மணிக்கே திறக்கப்பட்டது
நகரத்தின் இடையிலுள்ள பூங்கா

யரமான பச்சை மரங்கள்
கைகோர்த்து நிற்கும் வேலி
நடுவில் புன்னகைக்கும் மலர்களை
தாங்கி நிற்கும் மலர்ச்செடிகள்

ங்குதான் வர சொன்னார்
யாரையோ எதிர்பார்த்து வந்தவர்
தன் காத்திருப்பை பதிவுசெய்தார்

சீறிவந்த மோட்டார் சைக்களில்
இறங்கிய சில இளங்காளைகள்
ஓரிடத்தை ஆக்கிரமித்து அமர்ந்தார்கள்

போகும் நடை பயணத்தில்
சிறு களைப்பார நிழலின்
தஞ்சம் தேடி ஒருசிலர்

சில நாழிகைகளின் மரணத்தில்
எங்கிருந்தோ வந்த மனிதர்களைக்கொண்டு
நிரம்பி வழிந்தது பூங்கா

காதலர்கள், தம்பதிகள் ,குழந்தைகள்
நண்பர்கள், முதியோர்கள் என்று
அடையாளப்படுத்தியது அவர்களின் இருப்பை

சிலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள் ஓடி விளையாடியும்
பலர் பேசியும் சிரித்துக்கொண்டும்
ஒரு சிலரோ மௌனமாக

ந்தவர்கள் தின்று போடும்
மிச்ச உணவையும் காத்து
கிளைகளில் பறவைகளும்
சில பூனையும் நாய்களும்

த்தனை நிறங்களில் மனிதர்கள்
கண்ணீர் ,புன்னகை, மௌனம்
மனதிலிருந்து இறக்கி வைக்கிறார்கள்
அந்த தனிமை தருணத்தில்

காதல்,திருமணம்,எதிர்காலம்
என்ற முக்கிய விடையங்களுக்கு
ஆக்கபூர்வ தீர்மானங்கள் தீட்டுகிறார்கள்
அங்கு வந்தவர்களில் சிலர்

ந்திப்புக்களும் காத்திருப்பும்
பரிமாறும் பேச்சுக்களும்
தத்தம் அடையாளம் கண்டபின்
சிலர் எழுந்து சென்றனர்

திரவன் சாயும் மாலை
கூடு தேடும் பறவைகளைப்போல்
நான்கு திசைகளில் பிரிந்தனர்
பூங்காவில் கூடிய மனிதர்கள்

நேரமாச்சு நேரமாச்சு கிளம்புங்க
மீதம் இருந்தவர்களை விரட்டியபடி
பூங்காவின் காவல்காரன்

ரவு போர்வையாக மூட
அகம் முழுவதும் நிசப்பதம்
நாளை அவர்கள் வருவார்கள்
என்ற ஆழமான நம்பிக்கையில்
உறங்குகிறது பூங்கா

வெட்டி விவாதம்பெண் திரைக் கூத்தாடியின்
குறைக்கப்பட்ட உடுப்பின் அளவையும்
அங்கத்தின் அழகை சொல்லியும்
கொச்சை உரைப் பகிர்தல்

ல துறைகளில் ஒளிரும்
பகட்டாக வாழும் மனிதர்களின்
அந்தரங்கம் தேடி அலசி
வீணடிக்கும் நாழிகைகள்

பிற நாட்டு நிகழ்வுகள்
சிங்காரியாய் வாயில் நாட்டியமாட
ஆதரவற்று நெட்டோட்டம் ஓடுகிறான்
உன் தாய் பிள்ளை

ன் வீட்டுப் பிரச்சனைகள்
அந்தரத்தில் ஆடிக்கொண்டும்
வீதிப் பிரச்சனை முச்சந்தியிலும்
ஊர் பிரச்சனை கேட்பாரற்றும்

குடும்பத்தின் நிறை குறைகளை
உறவுகளுடன் உரையாடதவர்கள்
வாய் கிழிய பேசுகிறார்கள்
ஊர் பிரச்னையை

ரசியல் சினிமா சமூகம்
கார சார விவாதங்கள்
சுயங்களை கொன்று புதைத்து
வெட்டி கௌரவம் தேடுபவர்கள்

பேச்சு விவாதம் என்னும்
கூர்மையுள்ள ஆயுதத்தை
வீனற்றவைகளில் கையாளுகையில்
அதன் கூர்மை மழுங்குகிறது

வீடு வீதி ஊர்
சீர்கேட்டின் ஆணிவேர் தேடி
உங்கள் ஆயுதம் கொண்டு
வீறுடன் வேரோடு களையெடு

ன் புறத்தில் இருக்கும்
அழுக்கை தேடி அகன்று
உன் சுற்றமும் சுத்தமாகும்
உன் பேச்சு விவாதத்தின்
அர்த்தம் ஒளிரும்

Saturday, April 23, 2011

அப்பா நட்ட மரம்
நிழலைக் கொண்டு போர்த்தி
வீட்டு முற்றத்தில் ஒய்யாரமாய்
காலங்கள் கடந்து நிற்கிறது
அப்பா நட்ட மரம்

ளர்ந்த பிள்ளைகளின்
சொத்து பாகப் பிரிவு
மண்ணும் பொன்னும் பங்கிட்டபின்
மீதச் சொத்தாக மரம்

ல்லைக் கோட்டில் நிக்குது
நாளைக்கு வீடு வைக்கையில
இடைஞ்சல் வெட்டி போடுங்க
இடைநிலை காரர்களில் ஒருவர்

ங்க அப்பாவின் ஆத்மா
இந்த மரத்தில உறங்குது
அத வெட்டாதிங்க வெட்டாதிங்க
கண்ணீர்மல்க பெருத்த குரலுடன்
ஓடி வந்தாள் அம்மா

டன் சுமை தாங்காமல்
மரத்தில தூக்குபோட்ட அப்பாவை
சற்றென நினைவு படுத்தியது
அம்மாவின் அந்த அழுகைசத்தம்

தொட்டில் கட்டி தாலாட்டியதும்
ஊஞ்சல் கட்டி விளையாடிததையும்
கதை கதையாக புலம்பினாள்
பெற்ற பிள்ளைகளிடம்

நான் செத்தபிறகு வெட்டுங்க
மரத்தையல்ல கிளைகளைமட்டும்
என் சிதையை எரிக்க
மன்றாடினாள் அந்த தாய்

ந்த மரத்தில் உறங்குகிறது
அப்பாவின் ஆத்மா என்ற
அம்மாவின் ஆழமான நம்பிக்கை
கனிந்தது பிள்ளை நெஞ்சம்

ப்பாவின் ஆத்மாவையும்
அம்மாவின் கடந்த நினைவுகளையும்
சுமந்து நிற்கும் உயிருள்ளமரத்தை
கரங்களால் தொட்டு தடவ
கண்ணீர்கசிந்தது பிள்ளை விழிகளில்

யிரற்ற பொன்னும் பொருளையும்
பங்கிட்டு மனிதர்கள் பிரிக்கையில்
உயிருள்ள உறவை ஒருபோதும்
பிரிக்க இயலாது உணர்த்துகிறது
உயர்ந்து நிற்கும் மரம்


Thursday, April 21, 2011

இரண்டாம் குழந்தைப் பருவம்திர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை

கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்

புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்

வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ

புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

டந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்

ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்

Wednesday, April 20, 2011

அந்த புண்ணியவதி

நிசப்தங்களை கொண்டு
சிறையிட்டு இருந்தது
வீதியில் அந்த வீடு

வீட்டின் மேற்கூரையில்
கரைந்து கொண்டு இருந்தது
குஞ்சுக்கு இறைதேடிவந்த காகம்

ன்றுக்கு இரண்டு முறை
பூட்டிய வாசலின்கீழ் படுத்துவிட்டு
மெளனமாக சென்றது
வீதியில் உலவும் நாய்

வாசல் திறக்கும் எதிர்பார்ப்பில்
அமைதியாக காத்திருந்தான்
ஊரின் வாடிக்கைப் பிச்சைக்காரன்

ந்த அம்மாவுக்கு
உடல் நிலை மோசமாய்
நேற்று இரவு மருத்துவமனையில்
கொண்டு போயிட்டாங்களாம்

வீதியில் நடந்துபோன யாரோ
பேசிக்கொண்டு போனார்
பூட்டிய வீட்டின் காரணத்தை

காக்காவுக்கு படச்சிட்டுதான்
தினமும் சாப்பிடுவாங்க
அதுதான் காக்க கரையிது

வாசலையே சுத்துக்கிட்டு வரும்
இந்த நாயிக்கும் மதியம்
சோறு அவங்கதான் வைப்பாங்க

ன்னைக்கு வா சோறுதாரேன்
அந்த மகராசி சொன்னாங்களாம்
அந்த அம்மாவுக்கு என்னாச்சின்னு தெரியாம
காத்துகிட்டு கெடக்கான்
அந்த பிச்சைக்காரன்

ந்த புண்ணியவதி இல்லாம
வீடே வெறிச்சோடி கிடக்குது
பக்கத்து வீட்டில் கூடிநின்றவர்கள்
ஒருவர்கொருவர் பேசிக்கொண்டனர்

நிதமும் உணவுப் படியளக்கும்
அந்த புண்ணியவதியின் நிலையறியாது
மேற்கூரையில் காகமும்
வீதியில் நாயும் ,பிச்சைக்காரனும்

Monday, April 18, 2011

உறவுத் தூதுவன்


தொலைத் தொடர்பு கருவறையில்
தளிரிடாத  நவனுட்பக்  குழந்தைகள்
மனித உறவும் தகவல்களும்
திசையறியா இடைவெளிகளில்

செய்திகளையும் உணர்வுகளை
வெள்ளை காகிதத்தில் வரிகளாய்
சிறை வைக்கப்பட்ட காலம்

நெடும் தொலைவில் உறவுகள்
உறவுகளின் விசேஷம் கடிதத்தில்
படிப்பறிவு அற்றவர்களுக்கு
கண்கண்ட தெய்வம் தபால்காரன்

நிகழ்ந்த சேதிக்கு வயதாகி
உறவுகளின் வாசலை தட்ட
சேதி கேட்க உறவுகளற்று
அனாதையாய் பூட்டிய வீடு

று கடிதம் வரும்வரை
உறவுகளின் நாவுகளில் அசைபோடும்
பழைய கடித்தத்தின் சேதிகள்

ணர்வையும் நிகழ்வையும் எழுதுகையில்
மறுபுறம் அதை வாசிக்கையில்
மனசு அலியும் வினாடிகள்
கரங்களில் துடிக்கும் கடிதம்

னிதர்களின் அவசரத்தேடல்
விஞ்ஞான கருவைரையை
கிழித்துக்கொண்டு நவ நுட்பங்கள்

பாதாளத்தில் எறியப்பட்டு
மீள இயலாமல் காயங்களுடன்
பரிதவிக்கும் கடிதம்

Sunday, April 17, 2011

அந்த பெண் அழுகிறாள்து ஒரு மாலைப்பொழுது
எதோ அவசரம் என்னுள்ளிருக்க
வேகமாக நடந்தது கொண்டிருந்தேன்
அந்த சாலை வீதியில்


ங்கும் இங்குமாக நடமாடும்
மனிதர்களை கொண்டு நிரம்பிவழிந்தது
அந்த பெருநகரச் சாலை


ன் கால்களின் வேகத்தை
சற்றென இழுத்து கட்டியது
காதை வந்து நிரப்பிய
ஒரு அழுகை சத்தம்


சாலையின் ஓரத்தில் நின்று
கண்ணீர் மல்க அழுதபடி
முப்பதை கடந்த பெண்மணி


ந்த பெண்மணியின் அழுகையை
காணாத அதிசய காட்சியாக
வேடிக்கை பார்த்தபடி மும்மரமாக
நடந்து கொண்டிருந்தார்கள் சிலர்


வரசம் என்னையும் அழைக்க
அழுகையின் காரணம் கேட்காமல்
தயங்கியபடி நானும்


வ்வொரு அடிவைத்து நடக்க
தூரம் மறைத்துக் கொண்டது
அந்த பெண்மணியின் உருவத்தை


தற்கோ அவள் அழுகிறாள்
உதவியற்றும் தனியே
காரணம் கேட்டு இருக்கலாம்
விடாது வீடுவரை துரத்தியது
என் அகத்தில் எழுந்த
அந்த வினாக்கள்


ரத்த பந்தங்களிலும்
உற்ற உறவுகளிலும் மட்டும்
சிந்துகின்ற புன்னகை அழுகையின்
காரணங்களை மனிதர்கள் கேட்கையில்
முகவரியும் உறவுமற்ற மனிதர்களின்
புன்னகையும் கண்ணீரும் புரம்தள்ளப்படுகிறது

Thursday, April 14, 2011

குடையும் செருப்பும்

நானோ வாசலின் அகத்து
ஒய்யாரமாய் சாய்ந்து நிற்கிறேன்


நீயோ புறத்து விலக்கப்பட்டு 
தனியே ஒதுங்கி கிடக்கிறாய்


லையில் மகுடமாக நான்
மிதிபடும் அடிமையாக நீ


ந்து விழுகின்ற
கதிரொளியும் நீர்த்துளிகளும்
என்பளிங்கு மேனியில் தங்குவதில்லை


சுத்தங்களின் துர்நாற்றமும்
மிதிபாடுகளில் இறந்த உயிர்களின்
இரத்தகறைகள்  படிந்த பாதத்துடன் நீ

யார் உயர்ந்தவர்கள் என்று
தற்கித்து கொண்டிருந்தது
குடை செருப்பிடம்


ருவ காலங்களில் மட்டும்
உன் உதவியை நாடுகிறார்கள்
மெல்ல வாய்திறந்தது செருப்பு


பிஞ்சுக்கால் பதியும் பருவத்திலிருந்து
மயானப் பருவம் வரை
பாதங்களில் என்னை சுமக்கிறார்கள்


வ்வியமாக இருந்த செருப்பு
மென்குரலில் பேருண்மையை சொல்ல
வாயடைத்து நின்றது குடை


Wednesday, April 13, 2011

ஒற்றைக்கால் செருப்பு


கூட்ட நெரிசலில்
துணையை துலைத்து
வீதியில் அனாதையாய்

கவிதைக்குள் கவிதை
ரு கவிதை
கவிதை எழுதும் அதிசயம்
என்னவளின் புன்னகை

Tuesday, April 12, 2011

மரு(ஜென்ம) த்துவம்ண்ணீர் துளிகள் கொண்டு
என் பாதம் நனைத்தவர்கள்


பொன்னும் பணமும் கொண்டு
என் உடலை போர்த்தியவர்கள்


ன்னை கண்கண்ட தெய்வமாய்
அவர்களின் ஒரே யாசிப்பு


ரணத்தின் விளிம்பில் ஊசலாடும்
ஜீவனை மீட்டு கரைசேர்க்க


திரைகடல் ஓடி கற்றகல்வியால்
யாசித்து வந்த அவர்களுக்கு
புனர்ஜென்மம் உடுத்தி அனுப்பினேன்


ன்று அந்திமாலை பொழுது
என்பதை கடந்த என்னுடல்
மரணத்தின் விளிம்பில் ஊசலாடிகிறது


டியப்போகும் என்னுடல் ஏந்தி
கண்ணீரும் பொன்னும் இரைத்து
ஜீவன் யாசிக்கும் சந்ததிகள்


ஜீவன் யாசித்து வந்தவர்களுக்கெல்லாம்
உயிர் போர்த்தி அனுப்பினேன்


சுருக்குவிழுந்து தளர்ந்த உடலுக்கு
மௌனமாக உயிர் யாசிக்கிறேன்

விளிம்பில் தவிக்கும் உயிரை
கரைசேர்க்கும் இவர்களிடத்தில்

Saturday, April 9, 2011

உறவும் பருவமும்
தையோ தேடிகொண்டு இருக்க
கையில் வந்து அகப்பட்டது
அந்த பழைய புகைப்படம்


முகத்தில் கபடமற்ற புன்னகையுமாய்
அம்மா மடியில் பவ்வியமாக
அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்


ரு பெரும் மூச்சிட்டு
அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க
அகத்தில் தளிறிட்டது ஆனந்தம்


யாருப்பா அந்த
குட்டி பாபாவும் அம்மாவும்
தன் செல்லமகளின் குரல்


ரவச இன்பதிளக்கத்தில்
மென்குரலில் மகளிடம் சொன்னான்
நானும் என் அம்மாவும்


ய் குட்டி அப்பா
என்று அதில் முத்தமிட்ட
தன் குட்டி தேவதையை
வாரி அணைத்துகொண்டான்


ன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்


சொல்லிய வார்த்தைகளின் முடிவில்
விழியில் இருந்து கசிந்தது
கண்ணீர் துளிகள்


ம் பருவமும் உறவுகளும்
கால நாழிகைக்குள் உதிர்ந்து
நினைவுக்குள் அகப்படுகிறது


ருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்

Wednesday, April 6, 2011

அவன்ன் உணர்வுகளை
உயிர்த்து எழுப்பும்
அதிகாலை கதிரவன் அவன்

சிதையும் உரிமைகளை
உயிர் தளிர்க்கும்
நீர்த்துளி அவன்

ன் எண்ணங்களின்
பிம்பங்கள் காட்டும்
கண்ணாடி அவன்

தமான புன்னகையால்
ஆழ்மனதை குளிரவிடும்
பனித்துளி அவன்

குருதி நாளங்களில் ஊடுருவி
என் உயிரில் கலந்திருக்கும்
ஜீவன் அவன்

னதை வாசித்தும்
அழகை ரசித்தும்
பெண்மையில் லயிக்கும்
ஆண்மகன் அவன்


Tuesday, April 5, 2011

பெண் மனசு ஆழம்டமைக்குள் ஒளிந்திருக்கும்
அங்கங்களின் இரகசியத்தை
சிந்தையில் உயிர்தெளுப்பும் கயவன்


ச்சை உணர்ச்சிக் கழிவுகளை
அவசராமாய் கக்கி களையும்
மாமிச உண்ணிகள்


ச்சை புணர்தலில்
மதி மயங்கும்  ஆண்மைகள் 
பெண்ணின் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்களை தட்டி எழுப்புவதில்லை


ம் விழியிலும் அகத்திலும்
காம இருளை உடுத்திய
கண்ணுள்ள குருடர்கள் காண்பதில்லை
பெண்ணின் ஆழ்மனதை


பெண் மனப் புத்தகத்தை
திறக்காமலும் வாசிக்கப்படாமலும்
சில ஆண்மைகள் சொல்லித்திரிகிறார்கள்
பெண்மனசு ஆழம் என்று


ப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள்


றும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்


Monday, April 4, 2011

மதியும் மனமும்

தி உணர்ச்சியால் மனிதர்களின்
இச்சை உறவை இணைக்கையில்
மனம் அகன்று நிற்கிறது


னதின் எண்ணங்களை உணர்ந்து
மதி உறவுகளை இணைக்கையில்
கூடும் அவ்வுறவு புனிதமாகிறது


ரே நூல் இழையில்
மதியையும் மனதையும் கோர்க்குகையில்
மனித உறவுகளின் மனங்களில்
விழுவதில்லை விரிசல்கள்


உணர்வும் உணர்ச்சியும்தோல்வி ஏமாற்றம் இயலாமை
பக்குவமற்ற மனங்களின் அவசரம்
வரமாய் கிடைத்த வாழ்கையை
அலட்சியமாக புறம்தள்ளி
அடுத்த ஜென்ம நம்பிக்கையில்
மரணத்தை முத்தமிடும் மனிதர்கள்


டல் மரணத்தில் சிதைகிறது
மனிதனின் உணர்வும் உணர்ச்சிகளும்
உடலைவிட்டு பிரியும் ஆத்மாக்கள்
தம் அடையாளத்தை துலைத்து
தனியே பிரிந்து செல்கையில்
ஜென்ம நம்பிக்கை கானலாகிறது


னித உடலில் உறங்குகின்ற
அன்பு, வெறுப்பு, கோபம்
புன்னகை, அழுகை, அமைதி
என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
இறைவரமான மனித அடையாளங்கள்


யிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
மனிதனுடனான இறைவனின் நம்பிக்கை


ணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு  
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன்
Sunday, April 3, 2011

கனவில் வந்தவன்
ர் உறங்கும் நடுநிசி
இடைவெளிகளில் ஊடுருவும் காற்றாய்
என் இரவுக்குள் நுழைந்தவன்
இமைக்கும் நொடிப் பொழுதில்
களவாடினான் என் பெண்மையை


ற்றென்று விழித்தெழுந்து
இருளை ஒளியால் விலக்கி
அவன்முக அடையாளத்தை தேட
மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டான்

கனவில்வந்து பெண்மை திருடியவன்


ருவம் சமைத்த பெண்மையை
அனுமதி இன்றி திருடியவனின்
அடையாள முகவரியை தேடி
மீண்டும் உறங்கச் செல்கிறேன்
கனவில் அவன் வருவான்
என்ற நம்பிக்கையில். . .

தாய்க்கு மகுடம்ரங்கின் அகத்திலும் புறத்திலும்
விஸ்வரூபத்தில் உயிர்தெழுந்தது
மனிதத்தின் உணர்ச்சி வெள்ளம்


பெரியவன், சிறியவன்
இருப்பவன், இல்லாதவன்
ஜாதி ,மதம் ,இனம் ,நிறம்
மனிதர்களின் அகத்திலிருந்து
வெளியே தூக்கி எறியப்பட்டது


பூலோக விழிகள் பார்க்க
ஆடுகள யுத்தத்தில் வென்று
உலக அரங்க மேடையில்
தம்வீரத்தால் தாய் அவளின்
மானம்காத்த பிள்ளைகள்


தாய் மண்ணே வணக்கம்
என்ற பெரும் முழக்கத்துடன்
வெற்றியின் வியர்வைத் துளிகளை
தாய் காலடியில் சமர்ப்பித்து
தாய் அவளுக்கு மகுடம்சூடுகையில்
 அவள் ஈற்றேடுத்த பிள்ளைகளின்
கண்களில் தாரைதாரையாக நிரம்பிவழிந்தது
ஆனந்த கண்ணீர் துளிகள்

-ஜெய்ஹிந்த்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...