Sunday, April 3, 2011

கனவில் வந்தவன்




ர் உறங்கும் நடுநிசி
இடைவெளிகளில் ஊடுருவும் காற்றாய்
என் இரவுக்குள் நுழைந்தவன்
இமைக்கும் நொடிப் பொழுதில்
களவாடினான் என் பெண்மையை


ற்றென்று விழித்தெழுந்து
இருளை ஒளியால் விலக்கி
அவன்முக அடையாளத்தை தேட
மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டான்

கனவில்வந்து பெண்மை திருடியவன்


ருவம் சமைத்த பெண்மையை
அனுமதி இன்றி திருடியவனின்
அடையாள முகவரியை தேடி
மீண்டும் உறங்கச் செல்கிறேன்
கனவில் அவன் வருவான்
என்ற நம்பிக்கையில். . .

5 comments:

  1. முதிர்கன்னிகளின் ஏக்கவரிகளாக கூட சொல்லலாம் இதை....

    கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....

    வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....

    அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....

    இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....

    கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......

    பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...

    அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...

    மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...

    அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

    ReplyDelete
  2. கனவுகள் கூட பயங்கரமானது தான் நண்பா..... சில சமயம் நம் ஏக்கத்தின் பிரதிபலிப்பாய் இருக்கிறது...

    கவிதை மிக அருமை நண்பா

    ReplyDelete
  3. மஞ்சுபாஷிணிஅக்காவின்...வாழ்த்து..செய்தாலின் கற்பனையை மிஞ்சுகிறது.

    ReplyDelete
  4. அடேங்கப்பா... மஞ்சுவின் அழகான விரிவான விமரிசனத்துக்குப் பிறகு பாராட்ட என்ன மிச்சம் இருக்கு.. அருமை செய்தாலி..

    கனவில் திருடியவனை மீண்டும் கனவில் தேடுகிறாளா..? அல்லது நிஜத்தில் திருடியவனை கனவில் தேடுகிறாளா என்று உணர முடியாத அளவுக்கு அருமையான மறைபொருளுடன் கவிதை அழகுமிளிர்கிறது... வாழ்த்துகள் செய்தாலி..

    ReplyDelete
  5. அருமையான கவிவரிகள்.
    மஞ்சுக்காவின் விமர்சம் சூப்பர்..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...