Monday, April 4, 2011

உணர்வும் உணர்ச்சியும்தோல்வி ஏமாற்றம் இயலாமை
பக்குவமற்ற மனங்களின் அவசரம்
வரமாய் கிடைத்த வாழ்கையை
அலட்சியமாக புறம்தள்ளி
அடுத்த ஜென்ம நம்பிக்கையில்
மரணத்தை முத்தமிடும் மனிதர்கள்


டல் மரணத்தில் சிதைகிறது
மனிதனின் உணர்வும் உணர்ச்சிகளும்
உடலைவிட்டு பிரியும் ஆத்மாக்கள்
தம் அடையாளத்தை துலைத்து
தனியே பிரிந்து செல்கையில்
ஜென்ம நம்பிக்கை கானலாகிறது


னித உடலில் உறங்குகின்ற
அன்பு, வெறுப்பு, கோபம்
புன்னகை, அழுகை, அமைதி
என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
இறைவரமான மனித அடையாளங்கள்


யிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
மனிதனுடனான இறைவனின் நம்பிக்கை


ணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு  
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன்
5 comments:

 1. உண்மையில் இந்த கவிதை எனக்காக எழுதியது போலவே இருக்கு நண்பா.....

  தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கவிதை ஒரு வரப்பிரசாதம்

  வாழ வேண்டிய நேரத்தில் சாக நினைப்பவர்களை என்னவென்று சொல்வது அவர்கள் திருந்தி மனம் மாற இந்த கவிதை மிகவும் உதவும் நண்பா.....

  ReplyDelete
 2. மனித உடலில் உறங்குகின்ற
  அன்பு, வெறுப்பு, கோபம்
  புன்னகை, அழுகை, அமைதி
  என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
  விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
  இறைவரமான மனித அடையாளங்கள்


  ...........ஆம் அறிவியல் பூர்வமான உண்மை. செய்தாலிக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 3. இறைவன் திருப்தியடைகிறான்
  ஆனால் மனிதன் என்றும்
  திருப்தியடைய மாட்டான்
  உங்கள் கவிதை மிகவும் அருமை

  ReplyDelete
 4. சிறந்த வரிகள் வாழ்த்துக்கள் உண்மைகளைக் கொண்டு கவி எழுதும் உமக்கு பாரட்டுக்கள் சிந்திக்க வைக்கும் கவிதைக்கு நன்றி

  ReplyDelete
 5. ஆழ்ந்த சிந்தனை...... நல்ல கருத்து...... எல்லோரும் பயனுற வேண்டிய வரிகள்.... இறைவனுக்கு நெருக்கமானவர்களாக எப்போது ஆகமுடியும் சின்ன விஷயத்துக்கு கூட அப்செட்டாகி மூலையில் ஒடுங்காமல் ஐயோ ஃபெயில் ஆகிட்டேனா அம்மாப்பா என்ன சொல்வாங்க என்ற பயத்தில் தற்கொலையை நாடாமல் காதல் தோல்வியா எனக்கு உலகமே வெறுத்து போச்ச்சு இனி இருந்தென்ன லாபம் என்று தூக்கு மாட்டிக்காம சிந்திங்களேன் ஒரே ஒரு நிமிடம் அந்த உணர்வை ஒத்திப்போடுங்களேன் என்ற ஆதங்க வரிகளாய் மின்னுகிறது செய்தாலி உங்கள் கவிதை... நல்லதொரு கருத்து சொன்ன கவிதை இது.....

  மனுஷனா பொறந்தா நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் தான் எல்லாத்தையும் தாண்டி நீச்சலடிச்சிக்கிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான் கவலை பயம் ஏமாற்றம் வருத்தம் இதுக்கெல்லாம் வாழ்க்கையை தொலைக்க நினைச்சால் அப்புறம் புல் பூண்டு கூட மிஞ்சாதே என்று வேதனையோடு வரித்த வரிகள் சொல்லும் உண்மை மிக அருமை செய்தாலி....

  மிருகங்கள் பறவைகள் கூட தான் கஷ்டப்படுகிறது மனுஷனோட கண்ல பட்டால் அடிச்சு விருந்து வெச்சிடுவாங்க.. தெரிந்தே தன் வாழ்க்கையை அழகாய் நகர்த்துகிறது..... ஆனாலும் மனுஷனால் மட்டும் ஏன் முடியாது?? தற்கொலை என்பதே ஷண நேர எண்ணம் தான்.... இறந்தப்பின் உடல் மட்டும் தான் எரிகிறது... ஆனால் மன உணர்வுகளோ உடலில்லாத ஆத்மாவாய் அலைந்து திரிந்து தன் காலம்முடியும்வரை குளிரையும் சூட்டையும் தாங்க முடியாது மரண வேதனையை விட இது கொடுமை......

  உணர்வுகளால் உணர்ச்சிகளால் உடலை வேண்டுமானால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் ஆனால் மனசு?? என்று நம்மையே சிந்திக்க வைத்த வரிகள் அமைத்த செய்தாலிக்கு கரகோஷ பாராட்டுக்கள்பா... உங்களைப்போலவே ஒவ்வொருத்தரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் தற்கொலை என்ற எண்ணமே வராமல் தடுக்கமுடியும் என்று சத்தியம் உரைக்கும் கவிதையை பகிர்ந்த உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா....

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...