Tuesday, April 5, 2011

பெண் மனசு ஆழம்



டமைக்குள் ஒளிந்திருக்கும்
அங்கங்களின் இரகசியத்தை
சிந்தையில் உயிர்தெளுப்பும் கயவன்


ச்சை உணர்ச்சிக் கழிவுகளை
அவசராமாய் கக்கி களையும்
மாமிச உண்ணிகள்


ச்சை புணர்தலில்
மதி மயங்கும்  ஆண்மைகள் 
பெண்ணின் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்களை தட்டி எழுப்புவதில்லை


ம் விழியிலும் அகத்திலும்
காம இருளை உடுத்திய
கண்ணுள்ள குருடர்கள் காண்பதில்லை
பெண்ணின் ஆழ்மனதை


பெண் மனப் புத்தகத்தை
திறக்காமலும் வாசிக்கப்படாமலும்
சில ஆண்மைகள் சொல்லித்திரிகிறார்கள்
பெண்மனசு ஆழம் என்று


ப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள்


றும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்


6 comments:

  1. நண்பரே இது உண்மையில் சூப்பர் கவிதை.... பெண் மனசு ஆழம்னு சொல்றாங்க ஆனால் பல பேர் பெண்களின் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாம இருக்காங்க.....

    நீங்க சொன்ன விதம் அருமை நண்பா

    ReplyDelete
  2. /அப்பன், சகோதரன், கணவன்
    ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
    தம் மனதின் எண்ணங்களை
    இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
    சில பாவம் பெண்மைகள் //

    நிதர்சனம்.

    பெண் மனசு ஆழம் - இறங்கிப் பார்க்காத வரை.... என்று உணர்த்துகிறது நிறைவு வரிகள்

    ReplyDelete
  3. உங்கள் கவிதை சொல்வது உண்மை, சத்தியம்..அருமையான வரிகள் , ஆழமான கருத்து . மிக்க நன்றி இதை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு

    ReplyDelete
  4. நண்பா ,....
    நான் படித்த வரிகளில் இது மிக முக்கியமானது...
    நல்ல ரசனையில் நல்லதோர் கவி வழங்கிய கவி
    சக்ரவர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

    ReplyDelete
  5. As a girl i wish to say a lot of thanks to your poetry.....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...