Saturday, April 9, 2011

உறவும் பருவமும்




தையோ தேடிகொண்டு இருக்க
கையில் வந்து அகப்பட்டது
அந்த பழைய புகைப்படம்


முகத்தில் கபடமற்ற புன்னகையுமாய்
அம்மா மடியில் பவ்வியமாக
அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்


ரு பெரும் மூச்சிட்டு
அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க
அகத்தில் தளிறிட்டது ஆனந்தம்


யாருப்பா அந்த
குட்டி பாபாவும் அம்மாவும்
தன் செல்லமகளின் குரல்


ரவச இன்பதிளக்கத்தில்
மென்குரலில் மகளிடம் சொன்னான்
நானும் என் அம்மாவும்


ய் குட்டி அப்பா
என்று அதில் முத்தமிட்ட
தன் குட்டி தேவதையை
வாரி அணைத்துகொண்டான்


ன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்


சொல்லிய வார்த்தைகளின் முடிவில்
விழியில் இருந்து கசிந்தது
கண்ணீர் துளிகள்


ம் பருவமும் உறவுகளும்
கால நாழிகைக்குள் உதிர்ந்து
நினைவுக்குள் அகப்படுகிறது


ருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்

6 comments:

  1. பால்ய நினைவுகள் எப்போதுமே நம்மை இன்பத்திளைப்பில் ஆழ்த்துபவை. கசியும் கண்ணீர்த் துளிகளெல்லாம் கடந்துவிட்ட காலம் குறித்த ஏக்கத்தின் வெளிப்பாடுகள்.

    //ஏய் குட்டி அப்பா
    என்று அதில் முத்தமிட்ட
    தன் குட்டி தேவதையை
    வாரி அணைத்துகொண்டான் //

    இந்த வரிகளில் சிலிர்த்துக்கொண்டேன். அந்த அன்பையும், அழகையும் உணர முடிந்தவர்களின் மனம் நிச்சயம் இந்த வரிகளில் சிக்குண்டுவிடும்.

    உறவும் பருவமும் - எப்போதும் திகட்டாத நினைவலைகள்.

    சேக்காளிக்கு சில

    ReplyDelete
  2. ஒருமுறை உயிர்த்தெழும்
    பருவமும் பந்த உறவும்
    மடிந்தபின் உயிர்த்தெளாத
    வாழ்வின் வரப்பிரசாதம்


    உங்கள் கவிதையை போல..அருமையான கவிதை.

    ReplyDelete
  3. நினைவுகள் பின்னோக்கிப் பயணிப்பதை உணர்கிறேன் குழந்தையாகிவிட்டதுபோல் ஓர் மெய்சிலிர்ப்பு..

    அருமை அருமை.

    ReplyDelete
  4. தன் பால்யமும்
    அம்மாவுடனான நிகழ்வுகளையும்
    சிறுகதையாய் ஆரம்பித்தான்

    .............யதார்த்தமான வரிகள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. இதை நான் கவிதையாய் பார்க்கவில்லை
    ஒரு அனுபவமாக பார்க்கிறேன்
    என் நெஞ்சைதொட்ட கவிதை

    ReplyDelete
  6. தாய்மையைப் போற்றும் அழகிய கவிதை வரிகள்.... மிக்க நன்றி பகிர்வுக்கு ......

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...