Sunday, April 17, 2011

அந்த பெண் அழுகிறாள்து ஒரு மாலைப்பொழுது
எதோ அவசரம் என்னுள்ளிருக்க
வேகமாக நடந்தது கொண்டிருந்தேன்
அந்த சாலை வீதியில்


ங்கும் இங்குமாக நடமாடும்
மனிதர்களை கொண்டு நிரம்பிவழிந்தது
அந்த பெருநகரச் சாலை


ன் கால்களின் வேகத்தை
சற்றென இழுத்து கட்டியது
காதை வந்து நிரப்பிய
ஒரு அழுகை சத்தம்


சாலையின் ஓரத்தில் நின்று
கண்ணீர் மல்க அழுதபடி
முப்பதை கடந்த பெண்மணி


ந்த பெண்மணியின் அழுகையை
காணாத அதிசய காட்சியாக
வேடிக்கை பார்த்தபடி மும்மரமாக
நடந்து கொண்டிருந்தார்கள் சிலர்


வரசம் என்னையும் அழைக்க
அழுகையின் காரணம் கேட்காமல்
தயங்கியபடி நானும்


வ்வொரு அடிவைத்து நடக்க
தூரம் மறைத்துக் கொண்டது
அந்த பெண்மணியின் உருவத்தை


தற்கோ அவள் அழுகிறாள்
உதவியற்றும் தனியே
காரணம் கேட்டு இருக்கலாம்
விடாது வீடுவரை துரத்தியது
என் அகத்தில் எழுந்த
அந்த வினாக்கள்


ரத்த பந்தங்களிலும்
உற்ற உறவுகளிலும் மட்டும்
சிந்துகின்ற புன்னகை அழுகையின்
காரணங்களை மனிதர்கள் கேட்கையில்
முகவரியும் உறவுமற்ற மனிதர்களின்
புன்னகையும் கண்ணீரும் புரம்தள்ளப்படுகிறது

9 comments:

 1. எந்திர வாழ்க்கையின் அவலம் அது...

  காரணம் கேட்டு அது பிரச்சனையில் முடிந்துவிடுமோ என்ற பயத்தில் கூட இருக்கலாம்...

  //இரத்த பந்தங்களிலும்
  உற்ற உறவுகளிலும் மட்டும்
  சிந்துகின்ற புன்னகை அழுகையின்
  காரணங்களை மனிதர்கள் கேட்கையில்
  முகவரியும் உறவுமற்ற மனிதர்களின்
  புன்னகையும் கண்ணீரும் புறம்தள்ளப்படுகிறது//
  உண்மை நண்பா...
  உளவியலை அலசும் கவிதை அருமை...

  ReplyDelete
 2. நல்ல கவிதைதான் ஆனா இந்த காலத்துல பெண்கள் தனியா அழுதுகிட்டு இருந்தா எல்லோரும் கேப்பாங்க தல ஒரு ஆம்பளை அழுதாதான் யாரும் கேக்கமாட்டாங்க

  ReplyDelete
 3. நம் வாழ்க்கையுடைய அவசர யுகத்தில் நாம் கவனிக்க நேரமின்றிக் கடந்து போகும் கணங்கள் நிறையவே நேர்கின்றன.. நமது கைகளை நம்முடைய சூழ்நிலைக்கயிறுகள் கட்டிவைத்திருப்பதை நாம் உணர்ந்தும் வக்கற்றுப் போய்விடுகிறோம்.

  அன்றொரு நாள் எனது மகளின் தேர்வுக்காக பைக்கில் அழைத்துச்சென்ற போது வழியில் சிறு விபத்து. ஒரு நடைபாதைக்காரனின் முட்டாள் தனமான குறுக்கீட்டைத் தவிர்க்க பைக்குடன் விழுந்தார் ஒருவர். கூட்டம் கூடி அவரைக் காக்கிறது என்பதை அறிந்து தேர்வுககான நேரம் கடந்துவிடுமோ என்னும் கவலையில் நான் கடந்தே சென்றுவிட்டேன்..

  அன்று முழுவதும் என்னை அரித்துக்கொண்டிருந்த கேள்வி என்ன என்றால்... சிறிது நேரம் ஒதுக்கி உதவிவிட்டுச் சென்றிருக்கலாமோ..?

  இன்று இந்த கவிதை கண்டதும் அந்த நினைவுகள் மீண்டும் வந்து குடைந்துகொண்டிருக்கின்றன..

  நன்றி செய்தாலி..!

  ReplyDelete
 4. நம்முடைய வேலைகளுக்கு நாம் அடிமையாக இருப்பதால் உதவி கூட செய்ய முடியவில்லை என்பதை உணர்த்திய அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 5. இந்த நிலை நம்மில் பலருக்கும் ஏற்படுவதுண்டு.இன்றைய அவசர உலகில் யாருக்கும் யாரை பற்றியும் கவலை பட நேரம் இல்லை. ஆனால் நமக்கு ஒரு துன்பம் வரும்போது மட்டும் நம்மை பற்றி யாருமே கவலை படுவதில்லை என்று வருந்துகிறொமெ எந்த விதத்தில் நியாயம்?

  ReplyDelete
 6. உங்கள் அனுபவ வரிகள் மிகவும் அருமையாக உள்ளது தோழா பாராட்டுக்கள்

  ReplyDelete
 7. இன்று அந்த அழுகை சத்தம் உங்கள் காதுகளில் தொனிக்கிறது என்றால் உங்கள் நல்மனதிற்கு இது ஒரு சான்று நண்பரே...

  உண்மை வரிகளுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 8. உங்களின் கவிதைகள் ஒவ்வொன்றும் நான் ஒன்றுக்கு இரண்டு தடவை படிப்பது வளக்கம் இந்த கவிதை என்னை மீண்டும் ஒரு முறை படிவென்று தீண்டியது அந்த பெண்ணின் கண்ணீர்க்கு அர்த்தம் தேடி.
  புன்னகைக்கும் பெண்ணிடம் காரணம் கேட்க்க பலபேர், அழுதவள் கண் துடைக்க யாரு இங்கே????என்றாகி விட்டது இன்பத்திலும் துன்பத்திலும் பகிர்ந்துக்க நம் அனைவருக்கும் பெரும் மனம் வேண்டும் உங்களின் வரிகள் கற்பனை என்றாலும் அர்த்தம் உள்ள அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழரே..

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...