Wednesday, April 20, 2011

அந்த புண்ணியவதி





நிசப்தங்களை கொண்டு
சிறையிட்டு இருந்தது
வீதியில் அந்த வீடு

வீட்டின் மேற்கூரையில்
கரைந்து கொண்டு இருந்தது
குஞ்சுக்கு இறைதேடிவந்த காகம்

ன்றுக்கு இரண்டு முறை
பூட்டிய வாசலின்கீழ் படுத்துவிட்டு
மெளனமாக சென்றது
வீதியில் உலவும் நாய்

வாசல் திறக்கும் எதிர்பார்ப்பில்
அமைதியாக காத்திருந்தான்
ஊரின் வாடிக்கைப் பிச்சைக்காரன்

ந்த அம்மாவுக்கு
உடல் நிலை மோசமாய்
நேற்று இரவு மருத்துவமனையில்
கொண்டு போயிட்டாங்களாம்

வீதியில் நடந்துபோன யாரோ
பேசிக்கொண்டு போனார்
பூட்டிய வீட்டின் காரணத்தை

காக்காவுக்கு படச்சிட்டுதான்
தினமும் சாப்பிடுவாங்க
அதுதான் காக்க கரையிது

வாசலையே சுத்துக்கிட்டு வரும்
இந்த நாயிக்கும் மதியம்
சோறு அவங்கதான் வைப்பாங்க

ன்னைக்கு வா சோறுதாரேன்
அந்த மகராசி சொன்னாங்களாம்
அந்த அம்மாவுக்கு என்னாச்சின்னு தெரியாம
காத்துகிட்டு கெடக்கான்
அந்த பிச்சைக்காரன்

ந்த புண்ணியவதி இல்லாம
வீடே வெறிச்சோடி கிடக்குது
பக்கத்து வீட்டில் கூடிநின்றவர்கள்
ஒருவர்கொருவர் பேசிக்கொண்டனர்

நிதமும் உணவுப் படியளக்கும்
அந்த புண்ணியவதியின் நிலையறியாது
மேற்கூரையில் காகமும்
வீதியில் நாயும் ,பிச்சைக்காரனும்

6 comments:

  1. நெக்ழ்சி கவிதை மிக மிக அருமை அதைவிட அந்த படம் அருமயோ அருமை அதுசரி அந்த புண்ணியவதி பிழதார்களா இல்லயா

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பா

    சினிமா மற்றும் கதைகளில் மட்டும் சுபம் போட்டு முடித்து விடலாம்
    நிஜ வாழ்க்கையில் சாத்தியமல்ல என்ன நண்பா அப்படித்தானே

    அந்த புண்ணியவதி வருவாள் என்ற நம்பிக்கையில் அவர்கள்

    ReplyDelete
  3. தாக்கமுள்ள கவிதை எளிய நடையில்.....

    வித்தியாச படைப்புகளின் வரிசையில் இந்த கவிதையும் சேரும் செய்தாலி....

    எதிர்ப்பார்ப்புகள் பொய்க்காது என்ற நம்பிக்கையுடன் காகம், நாய், பிச்சைக்காரனுடன் நாமும்.....

    நம்பிக்கையுடன் கரையும் காகமும் காத்திருக்கும் நாயும் பிச்சைக்காரனும் அந்த தாய் திரும்பி நலமுடன் வந்து அன்னமிட்டு காக்கட்டும் இவர்களை....

    அருமையான சிந்தனைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

    ReplyDelete
  4. ஒரு புண்ணியவதியின் கவிதை போட்டு மனம் குளிரவைத்த செய்தாலிக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  5. திரைக் கதை யொன்று கண்முன்னே உலவிய உணர்வு பிறந்தது வரிகளை படித்தபோது அருமை தோழா வாழ்த்துகள்

    ReplyDelete
  6. இந்த கவிதையா எப்படி பாராட்டுறதுன்னு தெரியல நண்பா இதை படிக்கும் பொது எனக்கு அழுகையே வந்துருச்சு ரொம்ப பிரமாதமா இருக்கு

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...