Thursday, April 21, 2011

இரண்டாம் குழந்தைப் பருவம்திர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை

கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்

புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்

வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ

புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

டந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்

ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்

8 comments:

 1. உதிர்ந்து விழுந்த பருவம்
  வலிமை இழந்த உடல்
  தரையில் இழைந்து நகரும்
  எழுபது வயது குழந்தை


  good lines. nice poem

  ReplyDelete
 2. புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
  பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
  கருணையற்ற இறைவன்

  அனுபவித்து படித்தேன் ஒரு நிமிடம் நான் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் நண்பா மிகவும் அழகாக வரைந்துள்ளீர்கள் அன்பு நன்றிகள் உங்களுக்கும் உங்கள் திறமைக்கும்

  ReplyDelete
 3. புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
  பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
  கருணையற்ற இறைவன்


  கடந்து வந்த பருவங்களை
  நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
  மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
  அதில் அகப்படுபவர்களின்
  மீத வாழ்க்கை நரகம்

  இவ்வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
  அன்பு நன்றிகள்.

  ReplyDelete
 4. உண்மையில் உணர்வு ரீதியான வரிகள் அருமையிலும் அருமை

  ReplyDelete
 5. கண்கலங்க வைக்கிறது செய்தாலி வரிகள்....
  முதுமையில் இப்படி எல்லாம் அவஸ்தைப்பட போகிறோம் என்பதை அறியாத பிள்ளைகள் தன் பெற்றோரை எப்படி எல்லாம் அருமையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணராத பிள்ளைகள் பிற்காலத்தில் தான் இப்படி தன் பிள்ளைகளால் அல்லல்பட நேரும்போது கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் நம் பெற்றோரை நாம் கொடுமை செய்தோம் அன்று... இன்று நம் நிலை நடுத்தெருவில் ஆனதே என்று மனம் குமுங்கும் நாளும் வரும் என்பதை அறியாதவரை இல்லங்கள் பெருகும்...

  முதியோர் இல்லமாவது உண்டு இன்றைய காலத்தில்.. இனி வரும் காலங்களில் பெற்றோரின் நிலை எப்படியோ நினைக்கவே பயமாக இருக்கிறது.....

  வரிகள் படிக்கும்போதே சட்டென்று கண்கலங்காமல் இருக்காது யாருக்குமே.. அத்தனை அற்புதமான வரிகள் செய்தாலி.....முதுமைப்பருவம் இறைவன் கொடுத்த வரமாக நினைக்க வைக்காமல் சாபமாகிவிட்ட கொடுமை என்ன செய்வது....

  அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி...

  ReplyDelete
 6. "உதிர்ந்து விழுந்த பருவம்"
  கவிதையின் ஆரம்ப வரியும்....

  "சிறுவர்களும் முகம் சுளிக்கும்
  பிழையாகும் செயல்கள்"

  இடையில் உறைத்து உரைத்த உரத்த கருத்தும்
  "ஆதரவற்று மூலையில் முடங்கும்
  உயிருள்ள பழைய பொக்கிஷம்"
  "போ கிழம் "என்று முதியோர்களைக்கூறும் இந்நாட்களில் அவர்களைப் "பொக்கிஷ"மென்று கூறி முதியோர்களின் பெருமையை உணர்த்தியதும்
  "எங்கோ சில மனிதர்களில்
  மரணம் வரை நீளுகிறது"
  இரண்டாம் குழைந்தை பருவம்"

  என குழந்தையாய் மாறிய முதிர்வயதோரை அருமையாகப் பிரதிபலிக்கிறது தங்கள் கவிதை.

  இக்கவிதைக்கு இடைச்செருகப்பட்ட புகைப்படமும் அற்புதம்

  ReplyDelete
 7. வாவ்...! அருமை அருமை...!

  புதுமைகள் பூத்து குலுங்கும்
  நவநாகரீக மனித வாழ்வில்
  ஆதரவற்று மூலையில் முடங்கும்
  உயிருள்ள பழைய பொக்கிஷம்

  புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
  பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
  கருணையற்ற இறைவன்
  என்னே அருமையான வரிகள்...!

  ReplyDelete
 8. சேக்காளி... இந்தக் கவிதைக்கு ஆழமான பின்னூட்டமிட எண்ணுகிறேன்.. ஆனால் பதிவைவிட அது நீளமாகுமோ என அஞ்சுகிறேன்... ஏனென்றால் வரிவரியாக அல்ல... வார்த்தை வார்த்தையாக குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியது இந்த படைப்பு.

  கவிதையின் நோக்கமும், கவியாக்கமும்
  உங்கள் காலரை தூக்கி விடுகின்றன...

  சீரிய சிந்தனைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...