Saturday, April 23, 2011

அப்பா நட்ட மரம்




நிழலைக் கொண்டு போர்த்தி
வீட்டு முற்றத்தில் ஒய்யாரமாய்
காலங்கள் கடந்து நிற்கிறது
அப்பா நட்ட மரம்

ளர்ந்த பிள்ளைகளின்
சொத்து பாகப் பிரிவு
மண்ணும் பொன்னும் பங்கிட்டபின்
மீதச் சொத்தாக மரம்

ல்லைக் கோட்டில் நிக்குது
நாளைக்கு வீடு வைக்கையில
இடைஞ்சல் வெட்டி போடுங்க
இடைநிலை காரர்களில் ஒருவர்

ங்க அப்பாவின் ஆத்மா
இந்த மரத்தில உறங்குது
அத வெட்டாதிங்க வெட்டாதிங்க
கண்ணீர்மல்க பெருத்த குரலுடன்
ஓடி வந்தாள் அம்மா

டன் சுமை தாங்காமல்
மரத்தில தூக்குபோட்ட அப்பாவை
சற்றென நினைவு படுத்தியது
அம்மாவின் அந்த அழுகைசத்தம்

தொட்டில் கட்டி தாலாட்டியதும்
ஊஞ்சல் கட்டி விளையாடிததையும்
கதை கதையாக புலம்பினாள்
பெற்ற பிள்ளைகளிடம்

நான் செத்தபிறகு வெட்டுங்க
மரத்தையல்ல கிளைகளைமட்டும்
என் சிதையை எரிக்க
மன்றாடினாள் அந்த தாய்

ந்த மரத்தில் உறங்குகிறது
அப்பாவின் ஆத்மா என்ற
அம்மாவின் ஆழமான நம்பிக்கை
கனிந்தது பிள்ளை நெஞ்சம்

ப்பாவின் ஆத்மாவையும்
அம்மாவின் கடந்த நினைவுகளையும்
சுமந்து நிற்கும் உயிருள்ளமரத்தை
கரங்களால் தொட்டு தடவ
கண்ணீர்கசிந்தது பிள்ளை விழிகளில்

யிரற்ற பொன்னும் பொருளையும்
பங்கிட்டு மனிதர்கள் பிரிக்கையில்
உயிருள்ள உறவை ஒருபோதும்
பிரிக்க இயலாது உணர்த்துகிறது
உயர்ந்து நிற்கும் மரம்


7 comments:

  1. கதை, வாழ்க்க, தத்துவம், பாசம்..
    அனைத்தும் சொல்கிறது
    தங்கள் கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நெகிழ வைத்த வரிகள்...
    உறவுகளின் உன்னதத்தை மனதில் உறைக்கவைத்த வரிகள்....
    அப்பா என்றொரு பந்தம் மரத்தில் ஆன்மாவாய் நிலைத்து
    அம்மாவை ஆசுவாசப்படுத்தி பிள்ளைகளை உருவாக்கி
    அம்மாவின் உழைப்பு பிள்ளைகளை உயர்த்தி
    அப்பாவின் நினைவுகள் அம்மாவுக்கு பொக்கிஷம்
    அம்மாவின் கோரிக்கையோ பிள்ளைகளுக்கு அவசியம்

    ஆஹா அருமையான வரிகளில் அந்த குடும்பத்தில் ஒருவராய் நாமும் இருந்து காட்சிகளை உடன் இருந்து பார்த்தது போல் அத்தனை தத்ரூபமான வரிகள் செய்தாலி....

    எளிய நடையில் மிகப்பெரிய விஷயத்தை கருவாகக்கொண்டு படைக்கப்பட்ட வரிகள் இந்த கவிதை.... இறந்தப்பின் படையல் வெச்சு ஊருக்கே விருந்து வைப்பதில் என்ன லாபம்? இருக்கும்போதே உயிருக்கும் அவர் வார்த்தைக்கும் மதிப்பு தந்தால் போதுமே...

    அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..

    ReplyDelete
  3. சொத்து பாகப் பிரிவு
    மீதச் சொத்தாக மரம் - வாவ் ... கவிதையின் உயிர் நாடி! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கவிதையின் வடிவில் ஒரு காவியம்...
    வாழ்த்துக்கள்...தோழா

    ReplyDelete
  5. வாவ்... வித்தியாசமான கவிதைகளில் கலக்குறீங்க...!!

    ReplyDelete
  6. ரொம்ப அருமையான வரிகள் ரொம்ப வித்தியாசமான சிந்தனை வரிகள் நண்பரே பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. கவிதையின் வரிகளும் வலிகளும் நெஞ்சை நெகிழ் வைத்தது. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...