Sunday, April 24, 2011

வெட்டி விவாதம்



பெண் திரைக் கூத்தாடியின்
குறைக்கப்பட்ட உடுப்பின் அளவையும்
அங்கத்தின் அழகை சொல்லியும்
கொச்சை உரைப் பகிர்தல்

ல துறைகளில் ஒளிரும்
பகட்டாக வாழும் மனிதர்களின்
அந்தரங்கம் தேடி அலசி
வீணடிக்கும் நாழிகைகள்

பிற நாட்டு நிகழ்வுகள்
சிங்காரியாய் வாயில் நாட்டியமாட
ஆதரவற்று நெட்டோட்டம் ஓடுகிறான்
உன் தாய் பிள்ளை

ன் வீட்டுப் பிரச்சனைகள்
அந்தரத்தில் ஆடிக்கொண்டும்
வீதிப் பிரச்சனை முச்சந்தியிலும்
ஊர் பிரச்சனை கேட்பாரற்றும்

குடும்பத்தின் நிறை குறைகளை
உறவுகளுடன் உரையாடதவர்கள்
வாய் கிழிய பேசுகிறார்கள்
ஊர் பிரச்னையை

ரசியல் சினிமா சமூகம்
கார சார விவாதங்கள்
சுயங்களை கொன்று புதைத்து
வெட்டி கௌரவம் தேடுபவர்கள்

பேச்சு விவாதம் என்னும்
கூர்மையுள்ள ஆயுதத்தை
வீனற்றவைகளில் கையாளுகையில்
அதன் கூர்மை மழுங்குகிறது

வீடு வீதி ஊர்
சீர்கேட்டின் ஆணிவேர் தேடி
உங்கள் ஆயுதம் கொண்டு
வீறுடன் வேரோடு களையெடு

ன் புறத்தில் இருக்கும்
அழுக்கை தேடி அகன்று
உன் சுற்றமும் சுத்தமாகும்
உன் பேச்சு விவாதத்தின்
அர்த்தம் ஒளிரும்

5 comments:

  1. நச்சென்று ஒரு கவிதை..!

    நமக்கு சரியெனப்பட்டதை உலகமே எதிர்த்தாலும் கூறுவது மிக உயர்ந்த மனப்பான்மை செய்தாலி. நம் உளச்சான்றுக்கு வஞ்சமிழைக்காமல் இருத்தலே சிறப்பு. நன்றி செய்தாலி.

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க ஆனா என்ன பன்றது வெட்டி கதை பேசியே வீணா போன தமிழர் வம்ஸமாயிற்றே நாம வேற வேலை செயசொன்னா எப்படி - தேவர் மகன் சிவாஜி சட்யிலுல சொல்லணும்னா " நாங்கலாம் இப்படிதாம்பு எங்களுக்கு கையில வேல் கம்ப தூகிக்கிட்டு வெற்றிவேல் வீரவேலுனு ஓடதான் தெரியும்" - இத நீங்களும் தவறாக எடுதுகொள்ளவேண்டாம்

    ReplyDelete
  3. அரட்டை அடிப்பதை பற்றி எழுதினால் தவறாக நினைப்பார்கள் என்று சிறு
    தயக்கம் இருந்தது உங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  4. தவறா நினைக்க இதுல வேலையே இல்ல நண்பா ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை..... சூப்பர் நண்பா

    ReplyDelete
  5. வெட்டியாய் நேரத்தை போக்கும் மனிதர்களுக்கு இந்த வரிகள் மருந்தாய் அமையும்!
    சிறந்த வரிகள் உருவாக்கியமைக்கு.. கவிஞ்சரே.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...