Tuesday, April 26, 2011

ஒரு பயணம் முடிந்தது


ன் இதமான வேட்கையால்
மூடு பனிகளை விரட்டியபடி
மெல்ல உயர்ந்தெழும் கதிரவன்

கரத்திற்கு வெளியே
விலக்கப்பட்ட நிலையில்
இயந்திர பறவைகளின் கூடாரம்

ங்கிருந்தோ வந்த ஒருபறவை
மரங்கள்சூழ்ந்த மலை அடிவாரத்தில்
வழிமாறி தரை இறக்கம்

க்கம்பார்த்து காத்திருந்த அக்னி
துளியும் இரக்கமின்றி மேய்ந்தது
அந்த மனிதர்களின் உடலை

ருவில் தளிரும்  சிசுவையும் 
நாளை இறக்கும் கிழவனையும்
சுட்டெரித்து கக்கியது அக்னி

ங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை

நாழிகை போராட்டம் முடிவில்
உயிர்களை தொலைத்து
மிச்சமாய் எரிந்துகருத்த உடல்கள்

தவிக்கரமாய் வந்த
உயிருள்ள மனித கூட்டங்கள்
எடுத்துச் சென்றன சவங்களை

தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்

பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்

ங்கையை கரம் பிடித்து 
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்

காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்

பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக


றவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
 எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்

3 comments:

  1. வலிகளை மீண்டும் நினைவுகூர்ந்து செல்கிறது தங்களின் கவிதை படைப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி தோழா

    ReplyDelete
  2. // !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ கூறியது...
    வலிகளை மீண்டும் நினைவுகூர்ந்து செல்கிறது தங்களின் கவிதை படைப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி தோழா//

    வாங்க கவிஞரே வாங்க
    உங்கள் வருகைக்கும் கருத்துக்க்ம் மிக்க நன்றி

    ReplyDelete
  3. உணர்வுகளை பிழிந்து ஒரு கவிதை ..

    இனி யாரும் அந்த உறவுகளுக்கு ஆறுதல் கூற இயலா ...

    சிறப்பான கவிதை வழங்கிய உங்களுக்கு எனது ஆயிரம் நன்றிகள் .

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...