Saturday, April 30, 2011

களவும் கண்டெடுப்பும்


ந்த இடம் போகவேண்டும்
பயணத்திற்காக ஏறிய பஸ்ஸில்
களவு போனது பணப்பை

பார்க்க நல்லவனா இருக்க
களவு நாடகம் நடத்துற
ஆள்கூட்டத்தில் நகைத்தார் நடத்துனர்

விசிலின் பெரும் ஓசையில்
வேகம் தனித்த பேரூந்து
இறக்கி சென்றது இடைவெளியில்

ணத்தை களவு செய்தவர்
மான்னியனாய் பஸ்ஸில்
களவு கொடுத்தவன் நடுவீதியில்

புகைப்படம் ,குறிப்பு ,பணம்
அடையாளங்கள் சுமந்த முகவரிகள்
பணப்பையில் தஞ்சம் இருந்தவர்கள்

ரக்கமின்றி சுட்டு எரித்தான்
மரத்தின் கீழ் நிற்பவனையும்
நடு உச்சி கதிரவன்

திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம்

சோர்ந்து தளர்ந்த பாதங்கள்
வீதிக்கல் விரலிடம் சண்டையிட
வெளியே எட்டிப்பார்த்து உதிரத்துளி

சொட்டும் உதிரத் துளிகள்
வலியோ உயிர் போகிறது
துடைக்க காகிதம்தேடும் கண்கள்

தீக்காயத்தில் தேள் கொட்டல்
என்ன கொடுமை இறைவா
அகத்தில் எழுந்த வினா

காகிதம் தேடிய ஓட்டம்
தன்னிசையாக கண்ணில் பட்டது
புதரில் ஒளிந்திருந்த பணம்

ண்ணத்தில் இரண்டான காகிதம்
ஆயிரத்தின் மதிப்பை சொன்னது
அவசரமாய் கவர்ந்தது கரம்

யாரோ ஒருவரிடம் இருந்து
தவறி விழுந்த பணம்
ஆளற்ற வீதியில் எனக்காக

2 comments:

  1. //வெறுமையான வீதிப் பயணம்//

    வலிகளைத்தாங்கி ஒலிக்கும் வாக்கிய ஆக்கம்.

    இருப்பதை இழக்க நேர்ந்தாலும், கிடைப்பதை எதுவும் தடுக்க இயலாது என்பதை வலியுறுத்தி நினைவூட்டுகிறது கவிதை.

    பாராட்டுகள் சேக்காளி.

    ReplyDelete
  2. பணம் பறிக்கொடுத்தவறின் வலி கவிதைக்கு ஊயிருட்டுகிறது....

    அருமையான முடிவு..
    ஒன்றை இழழ்தால் ஒன்று கிடைக்கும்...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...