Sunday, April 24, 2011

அந்த நகரத்து பூங்கா




ன்று விடுமுறை நாள்
ஏழு மணிக்கே திறக்கப்பட்டது
நகரத்தின் இடையிலுள்ள பூங்கா

யரமான பச்சை மரங்கள்
கைகோர்த்து நிற்கும் வேலி
நடுவில் புன்னகைக்கும் மலர்களை
தாங்கி நிற்கும் மலர்ச்செடிகள்

ங்குதான் வர சொன்னார்
யாரையோ எதிர்பார்த்து வந்தவர்
தன் காத்திருப்பை பதிவுசெய்தார்

சீறிவந்த மோட்டார் சைக்களில்
இறங்கிய சில இளங்காளைகள்
ஓரிடத்தை ஆக்கிரமித்து அமர்ந்தார்கள்

போகும் நடை பயணத்தில்
சிறு களைப்பார நிழலின்
தஞ்சம் தேடி ஒருசிலர்

சில நாழிகைகளின் மரணத்தில்
எங்கிருந்தோ வந்த மனிதர்களைக்கொண்டு
நிரம்பி வழிந்தது பூங்கா

காதலர்கள், தம்பதிகள் ,குழந்தைகள்
நண்பர்கள், முதியோர்கள் என்று
அடையாளப்படுத்தியது அவர்களின் இருப்பை

சிலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள் ஓடி விளையாடியும்
பலர் பேசியும் சிரித்துக்கொண்டும்
ஒரு சிலரோ மௌனமாக

ந்தவர்கள் தின்று போடும்
மிச்ச உணவையும் காத்து
கிளைகளில் பறவைகளும்
சில பூனையும் நாய்களும்

த்தனை நிறங்களில் மனிதர்கள்
கண்ணீர் ,புன்னகை, மௌனம்
மனதிலிருந்து இறக்கி வைக்கிறார்கள்
அந்த தனிமை தருணத்தில்

காதல்,திருமணம்,எதிர்காலம்
என்ற முக்கிய விடையங்களுக்கு
ஆக்கபூர்வ தீர்மானங்கள் தீட்டுகிறார்கள்
அங்கு வந்தவர்களில் சிலர்

ந்திப்புக்களும் காத்திருப்பும்
பரிமாறும் பேச்சுக்களும்
தத்தம் அடையாளம் கண்டபின்
சிலர் எழுந்து சென்றனர்

திரவன் சாயும் மாலை
கூடு தேடும் பறவைகளைப்போல்
நான்கு திசைகளில் பிரிந்தனர்
பூங்காவில் கூடிய மனிதர்கள்

நேரமாச்சு நேரமாச்சு கிளம்புங்க
மீதம் இருந்தவர்களை விரட்டியபடி
பூங்காவின் காவல்காரன்

ரவு போர்வையாக மூட
அகம் முழுவதும் நிசப்பதம்
நாளை அவர்கள் வருவார்கள்
என்ற ஆழமான நம்பிக்கையில்
உறங்குகிறது பூங்கா

4 comments:

  1. அருமை வரிகள் ஒவ்வொன்றும் காவியம். படிக்கும் போது என் மெய் சிலிர்த்தது என்னை அறியாத ஒரு புன்னகை படித்து முடியும் போது என் வழியோரம் ஒரு சிறு துளி அதுவும் என் கண்ணீர் துளி எதர்ற்க்காக இந்த கண்ணீர் என்று எனக்கு தெரிய வில்லை மீண்டும் ஒரு முறை படித்தேன் அமைதி அடைந்தேன் வரிகளில் உள்ள உண்மைதான் காரணம் என்று அறிந்தேன் வாழ்த்துக்கள் தோழரே கவிக்காக சிறப்பாய் வளைந்து கொடுக்கிறது வார்த்தைகள்.

    ReplyDelete
  2. வரிகளால் பூங்காவுக்கு உயிர் கொடுத்திருக்கீங்க...! அருமை !!

    ReplyDelete
  3. ///நாகு கூறியது...
    அழகான கவிதை///

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...