Monday, April 4, 2011

மதியும் மனமும்





தி உணர்ச்சியால் மனிதர்களின்
இச்சை உறவை இணைக்கையில்
மனம் அகன்று நிற்கிறது


னதின் எண்ணங்களை உணர்ந்து
மதி உறவுகளை இணைக்கையில்
கூடும் அவ்வுறவு புனிதமாகிறது


ரே நூல் இழையில்
மதியையும் மனதையும் கோர்க்குகையில்
மனித உறவுகளின் மனங்களில்
விழுவதில்லை விரிசல்கள்


2 comments:

  1. மனித மனங்களில் புரிதல் இருந்தால் அவ்வுறவு தூய்மையுடன் விட்டுக்கொடுக்கும் அழகான தாம்பத்யமாக மிளிரும் என்பதில் ஐயமில்லை....

    புரிதலின்மையால் மனங்கள் வெற்றிடம் ஆகும்போது அங்கே உறவுகள் நிலைக்க சாத்தியமில்லாது போகிறது....

    ஆழ்ந்த சிந்தனையின் அபூர்வ முத்துக்களான வரிகள் இணைத்த கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..

    ReplyDelete
  2. மனதின் எண்ணங்களை உணர்ந்து
    மதி உறவுகளை இணைக்கையில்
    கூடும் அவ்வுறவு புனிதமாகிறது

    .............மறப்போம் மன்னிப்போம் என்ற மந்திரமே மதியும் மனமும் ஒன்றாக இணைவதில் வெளிப்படுகிறது. நல்ல சிந்தனைக்கு வித்தானது தங்களின் க(விதை)

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...