Monday, May 30, 2011

கட்டில் இரகசியம்ர்மேயும் பருவத் தவறுகள்
உணர்ச்சிகள் வற்றிய ஆண்மைகள்
வருடலுக்கு ஏங்கும் பெண்மைகள்
விழிப்பில் பெண் விழிகள்
ஆழ்ந்த உறக்கத்தில் ஆண்விழி
நரகவேதனை உடுத்தும் நாழிகைகள்
ட்டிலில் உணவாக தாம்பத்தியம்
எங்கோ உண்டகளைப்பில் ஆண்மை
உண்ண ஆளற்று பெண்மை
னிமையின் கோரமான சித்திரவாதை
ஏக்கங்களை மூடும் இருள்கருமை
கண்ணீரை சுமக்கும் தலையணை
ட்டிலுக்கு உதவாத ஆண்மைகள்
நகரும் ரணமான வாழ்க்கை
மரபை உடைக்காத பெண்மைகள்
ண்மை துலைத்த ஆண்மைகள்
மலடுபட்டம் சுமக்கும் பெண்மைகள்
வார்த்தைகளால் குத்தும் உறவுகள்
ர் போற்றும் ஆண்மைகள்
பெண்மை துயர்துடைக்க நட்டலில்லை
துயரத்தில் கட்டில் இரகசியம்
ங்கள் இச்சைக்காக புலம்பவில்லை
நீ தட்டியெழுப்பிய உணர்ச்சிகள்
அழுகிறது நித்திரை தொலைத்து
லர் நிலவு கவிதை
கானல் உவமைகளில் பெண்மை
சுயம் தற்காக்கும் ஆண்மைகள்
வறுகளை தொடரும் உறவுகள்
ஊருக்காக போலி வாழ்க்கை
மன்னிக்க முடியாத மனிதபாவம்
பிறக்கும் இரு பாலினத்தின்
வாழ்வின் அர்த்தம் உணர்த்துகிறது
மணவாழ்க்கையின் தாம்பத்தியம்
னப்பொருத்தம் பார்க்கும் உறவுகள்
அறிந்துகொள்ள மறந்து விடுகிறார்கள்
ஆண்மை பெண்மை சான்றிதழை

Sunday, May 29, 2011

மனிதனும் தவறுகளும்மிர்த கோபம் சந்தோசம்
தனிமைகளில் விலங்கு அவிழ்க்க
தவறுக்கு அடிமையாகும் மனிதர்கள்
ச்சைகளை தட்டியெழுப்பும் மதி
வக்கிரங்களை தூசிதட்டும் மனம்
உறக்கம் கலைக்கும் தவறுகள்
ந்த விழிகளும் கவனிக்கவில்லை
சிறைக்குள் பூட்டப்படும் மனசாட்சி
கண்ணைகட்டிய தவறுகளின் வெறியாட்டம்
ற்பு வாக்குறுதி நம்பிக்கை
பிழையில் நிறுத்தும் மனிதர்கள்
உடைந்து நொறுங்கும் புனிதங்கள்
பிழைகள் இழைந்த மனிதர்கள்
சுயத்திற்கு கபடசாயம் பூசல்
திரைக்குள் ஒழியும் தவறுகள்
ண் பொன் பயம்
குருடாகும் மனித விழிகள்
மான்னிய வேடமிட்டு தவறுகள்
வறு இழைப்பவனுக்கும் காயம்
இருமுனைக் கூர்மை ஆயுதம்
உணராமல் தொடரும் தவறுகள்
றைவன் அவன் பார்க்கிறான்
உணரும் மனிதர்கள் அகத்தில்
அச்சத்துடன் நிற்கும் தவறுகள்
சுய தவறுகளை உணர்ந்தும்
மனிதர்கள் முன் மறைத்து
தொடரும் மனித தவறுகள்
நாளைய நீதி தீர்ப்பு
மௌனம் காக்கும் இறவன்
பாவம் தவறுசெய்யும் மனிதர்கள்

Thursday, May 26, 2011

அவளின் அழகிய கோபம்
தொட்டால் சிணுங்கும் பெண்செடி
அதை தொட்டுவிளையாடும்
உன் சிறுகுழந்தை நான்டல் நீரலையில் தாமரையாட
இலையிதழ் மடியினில் தத்தளிக்கும்
நீர்த்துளி குழந்தை நான்ன் மௌனக் குழந்தைகள்
என்னுடன் வீண் சண்டையிட
முகமூடியிட்டு திகிறது புன்னகைநீ ஆக்கிய உணவு
உண்ண முடியாமல் நான்
பாத்திரம் நிறைய கோபம்த்தனை அழகான காட்சி
உன் முகத்தில் ஒளிரும்
கோபம் என்னும் வானவில்ன் புன்னகையை புறம்தள்ளி
என்னை ஈர்க்கும் காந்தம்
சிறு சிறு சிணுங்கல்கள்புன்னகை கோபம் மௌனம்
என் ஆண்மையை ஆளும்
கூர்மையான உன் ஆயுதங்கள்

Wednesday, May 25, 2011

ஒரு மரம் பேசுகிறது
ர் வீதியை அலங்கரித்து
வழி பிரிக்கும் முச்சந்தியில்
ஒய்யாரமாய் நிற்கும் பொதுமரம்
பிரச்சனை கூடும் பஞ்சாயத்து
மனிதர்களின் சொல்லடி பட்டு
மௌனமாக நிற்கும் மரம்
ன் நிழல் மடியில்
இளைப்பாறும் வழிபோக்கர்கள்
கிளைகாளால் விசுறும் மரம்
தொங்கி விளையாடும் சிறுவர்கள்
வளைந்து கொடுக்கும் கிளைகள்
அன்பிற்கு தாழ்ந்துகொடுக்கும் மரம்
வெட்டி நியாயம் அடுக்கியபடி
ஊர்க்கதை பேசும் பெருசுகள்
வேடிக்கை பார்க்கும் மரம்
தாய்ப் பறவைகள் இரைதேடி
கிளையில் உறங்கும் பறவை குஞ்சுகள்  
கற்றே மெல்லமாய் வீசு
ன்குழந்தைகளை நசுக்காதீர்கள்
மௌனமாக வினவும் மரம்
காலடியில் உதிர்ந்த சருகுகள்
ளிரும் கிளைகளை களையுங்கள்
என் தலையை வெட்டி
பாவம் சுமக்காதீர்கள்
ரத்தில் பேய் இருக்கு
யாரோ சொன்ன பொய்
முறைத்துக் கொண்டு ஊர்மக்கள்
னிதர்களின் இல்லாப் பழிசுமந்து
வார்த்தைகள் இன்றி அழுகிறது
பேச இயலாத மரம்
ளர்த்து விட்ட ஊர்மக்கள்
உறவாட மறுக்கையில்
ரணமாகிறது மரத்தின் தனிமை

Tuesday, May 24, 2011

ஓய்வு


திகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்

ள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்

ழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்

ரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை

தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்

மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்

லுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை

ந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை

நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்

Sunday, May 22, 2011

விருப்பு / வெறுப்பு

அவனை(ளை) தனக்கு பிடிக்கும்
சில அடையாளங்களை சொல்லி
விரும்பிகளை உயர்த்தும் மனிதர்கள்


ஏனோ வெறுக்கிறேன் அவனை(ளை)
இல்லாத கரணங்கள் தேடி
வெறுப்பால் தாழ்த்தும் மனிதர்கள்


தன் விரும்பிகளில் பிழைகள்
ஊருக்கு அம்பலமாக வெளிச்சமானாலும்
ஞாயக் கொடிபிடிக்கும் மனிதர்கள்


வெறுப்பவனை ஊர் போற்ற
நன்மையின் உன்னதம் தெரிந்தும்
உள்ளம்தயங்கி நிற்கும் மனிதர்கள்


உள்ளம்விரும்பி உடனிருப்பதால்
அவர்கள் பிழைகள் சரியென்பது
தம்மை தாமே ஏமாற்றுபவர்கள்


தன்னில் எட்டி நிற்பவர்களிடத்தில்
மன இடைபழகுதல் வேலியிட்டு
எதிரி முத்திரை அகத்திரையிடுதல்


மனித நல் இடைபழகுதல்
மனசை மனசு வாசிக்கையில்
வெளிச்சமாகிறது கள்ளங் கபடம்


விருப்பு வெறுப்பு முகமூடிக்குள்
தங்களை ஒழித்துக் கொள்கிறது
பாசாங்கு செய்யும் மனங்கள்


ஒரு சில உடன்பாடுகளில்
தத்தம் வாழ்கையை நகர்த்துகிறது
இரத்த பந்த உறவுகள்


மனித விருப்பு வெறுப்பு
உள்ளத்தை பக்குவபடுத்தும்
உண்ணதமான பொக்கிஷம்


அகத் தராசை சமபடுத்தி
உள்ளத்தை ஆளும் மனிதர்கள்
உயர்ந்து நிற்கிறார்கள் இறைசன்னதியில்

Thursday, May 19, 2011

அக்கரை தனிமைகூட்டுக்கு திரும்பும் பறவைகள்
கொஞ்சி உறவாடி மகிழும்
அந்தி மாலைப்பொழுது


மாலை இரவு பொழுதுகள்
ஆயுதமின்றி போர் தொடுக்கிறது
தனிமையோ சித்தரவாதை செய்கிறது

அனலில் துவளும் புழு
நித்தம் நிறைவேறும் தண்டனை
நீ இல்லாத தனிமைகள்

நித்த நாழிகை இடைவெளியில்
கைபேசியில் அவள் குரலொலி
இன்பத்தில் நனையும் ஜீவன்


சோம்பலை உடைத்து எறிந்து
அமைதிதேடி ஒற்றைப் பயணம்
மனித கூட்டத்தின் நடுவே


என்பின்னே உன்னழகு அன்னநடை
உன் நடையழகை நினைவூட்டுகிறது
நடக்கையில் பின்னேவரும் நிலவு


வீதியில் கைகோர்த்து ஜோடிகள்
தங்கள் ஏகாந்தம் உணர்ந்து
ஏக்கத்துடன் பரிதவிக்கும் வெற்றுக்கரங்கள்கொஞ்சி பேசி சிரித்து
அன்பை பரிமாறும் உறவுகள்
அகத்தில் தளிரிடும் பொறாமை


வாடிய முகத்தில் விதும்பலுடன்
விழியில் கசியும் நீர்த்துளிகள்
துடைத்து சென்றது எதிர்காற்று


தாய் கூட்டில் பெண்புறா
அனல் பறக்கும் மணல்வீதியில்
அன்பை தேடி ஆண்புறா


இன்ப துன்பங்களை சுமந்துகொண்டு
நிறத்தில் குணத்தில் பாவத்தில்
நீண்டவீதியில் நிறைய மனிதைகள்


உறவுகள் இணைந்து இருக்கையில்
அன்னியனாய் அகன்று நிற்கிறது
கோர ஆயுதமான தனிமை


உறவுகள் இருந்தும் தனிமை
உணவிலையில் அமிர்தம் இருந்தும்
நஞ்சை உண்ணும் ரணமான வாழ்க்கை


அகத்தில் உன் நினைவுகளுமாய்
உயிருள்ள வெறும் மாமிசம்
மண்ணிற்கு சுமையாக வீதியில்


திரவியம் வாழ்கையில் அவசியம்
காலம்கடந்து பருவம் உதிர்ந்தபின்
பயனளிப்பதில்லை திரட்டிய திரவியம்

Wednesday, May 18, 2011

உடல் நலம்

ள்ளங்கால் உச்சந்தலை இடையே
பச்சை மாமிசத்தில் புகையின்றி
கொழுந்துவிட்டு எரிகிறது நெருப்பு


றுப்பு இயந்திரக் கோளாறு
அகப் பழுதுகளை சரிசெய்
உயிர் நாளங்களின் போர்க்கொடி


ழுதால் வலிமை இழந்து
நேற்றுவரை ஓடியாடிய மனிதஉடல்
நோய் விலங்கிட்டு மூலைச்சிறையில்


ருந்து மாத்தரைகளில் தஞ்சம்
நோய் மஞ்சத்தில் தளர்ந்தஉடல்
வெளியேறும் சுய அகந்தைகள்


ய்வின்றி சுழலும் உறுப்புக்கள்
அகத்தில் தேங்கும் அசுத்தங்கள்
நஞ்சுகளை கக்கும் நோய்


றங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்
ரணமான நாழிகைகள்


ருத்துவரின் நம்பிக்கை மருந்துகள்
உறவுகளின் ஆறுதல் பிரார்த்தனைகள்
அகத்தில் சுரக்கும் மருஜென்மத்துளி


பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்


நோய்களில் இருந்து மீண்டு
உடலின் உன்னதம் உணர்ந்தவர்கள்
ஆரோக்கியத்தின் ஆணிவேரை தேடுதல்


நோய்களில் உறுப்புக்கள் சுத்தமாகிறது
மரணத்தை உணரும் மனிதர்கள்
நோய்களில் பக்குவம் அடைகிறான்

Saturday, May 14, 2011

தமிழனின் கனவுகாலை ஏழுமணிக்கு
அவசரமாய் அலுவலகம் புறப்படும்
அரசு ஊழியர்கள்

த்து மணிவரை அனாதையாக
காத்துகிடக்கும் அரசு நாற்காலிகள்
நிரம்பியது ஒன்பது மணிக்கு

மாசம் பொறந்தால் சம்பளம்
கிம்பளம் இல்லாத வாழ்க்கை
ரணம் புலம்பும் ஊழியர்கள்

துவெனும் இதுவேணும்
போர்க்கொடி உயர்த்தினால்
நிரந்தரமாய் இருக்கலாம் வீட்டில்

வெட்டியாய் இருப்பவன் பசியில்
உழைப்பவன் வீட்டில் நிரம்பிவழியும்
லக்ஷ்மி கிராக்ஷம்

ரமான பொருளும்
நியாயமான விலையும்
வாங்குபவனின் அகத்தில் மகிழ்ச்சி

கொலை கொள்ளை வஞ்சனை
கயவர்களின் ஆணிவேர் தேடி
களையெடுத்தல்

கரவீதிகளில் இனி முளைக்காது
சுய புகழ்ச்சிக்காக கட்டியெழுப்பும்
நாடக மேடைகள்

நீதி மன்றங்களில்
தேங்கி நிற்கும் குற்றங்கள்
விலங்கிடப்பட்டு சிறையில்

பேத மின்றி நிறைவேறும்
மன்றத்தில் உயர்ந்து எழுந்த
நியாயமான கோரிக்கைகள்

பாது காப்பு கவசத்தில்
பாமர பொதுமக்கள்
வேலிக்கு வெளியே அநீதிகள்

தொலைந்தது சர்வதிகாரம்
உடைந்தது அடிமை சங்கிலி
அகமகிழும் குடிமக்கள்

றிவும் திறமை உள்ளவர்களுக்கு
கட்டாய வேலை வாய்ப்புக்கள்
சோம்பல் முறிக்கும் இளைஞர்கள்

விடிந்து விட்டது எழிந்திரு
அம்மாவின் அழைப்பு குரல்
கலைந்தது அதிகாலைக் கனவு

டகத்தில் நிரம்பி வழிந்தது
அதிகாரத்தில் புதிய தலைமையின்
அறிவுப்புச் செய்திகள்

றங்கி எழுந்த தமிழனுக்கு
பிறந்தது புதிய நம்பிக்கை
காலைக் கனவு நனவாகும்

மனிதன் என்னும் உணவுரத்தமு சதையும் 
கருவறையில் இறவன் சமைத்த
 மனித உணவு  

னந்தம்,  கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
 அருஞ்சுவை  ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
 மாசற்ற  நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த  
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

ண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

ருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

றுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

ஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண 
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத  மனித உணவு

னித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது 
இறைவன் உள்ளம் 

Wednesday, May 11, 2011

பிழையான பெண் கவிதைழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை

லை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை

னிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை

விதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்

தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து   எறிகிறார்கள்

றைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை

Tuesday, May 10, 2011

பசியும் உணவும்


ம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

லும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

தியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

ன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

ணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

ள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

ண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு

Monday, May 9, 2011

அன்பும் உறவும்றவுச் சண்டைகள்
வீதியில் அரங்கேற்றம்
வேடிக்கை பார்க்கும் ஊர்

சொல் கூர்மை ஆயுதம்
அகத்தை கீறும் கோரம்
மெளனமாக அழும் அன்பு

சுய காழ்ப்பு நோய்
விஷமாய் படரும் விவாதம்
புரிதல் மரண மஞ்சத்தில்

பிறர் குறைகளை தேடி
தரம்   தாழ்ந்த சொற்கள்
இழிவுபடும் சுய தரம்

னிதன் பலகீனத்தின் தளிர்
ஊருக்கு அம்பலமான வெளிச்சம்
இந்திரிய துளிகள்

னிதனுக்கு மனிதனே ஆயுதம்
கையாளுவதில் பிழை இழைத்தால்
காயங்களே மிஞ்சும்

நாளத்தில் குருதி நிற்கையில்
மரணத்தை முத்தமிடுகிறது
மனித குணமும் செயலும்

புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்

ன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

றவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???

Sunday, May 8, 2011

மழை துளிகள்வேட்கையின் வெட்டங்களை
சிறுக சிறுக உள்வாங்கியபடி
சற்று அயர்ந்த கதிரவன்

வானம் கறுத்து இருள்சூழ
முட்டி மோதிக் கொண்டது
பார்வை இழந்த மேகங்கள்

யாத மேகச் சண்டை
கோர ஆயுதமாய் உயிர்த்தெழுந்து
இடியும் மின்னலும்

தென்றலின் சமரசத்தில்
கனிந்து இளகிய மேகங்கள்
மண்ணை முத்தமிட்டது மழைத்துளி

ழை மழை வருது
அவசரமாய் களவாடப்பட்டது
கொடியில் காயும் உடுதுணிகள்

பெரும் துளிகள் உடைந்து
சிறு துளிகளாய் கொட்டியது
பூமித் தாயின் மேனியில்

னல்பட்டு கீறிய மார்புக்கு
மருந்து கிட்டிய சந்தோசத்தில்
வறண்ட நிலங்கள்

ழுகாத இடம் தேடி
ஓடி ஒளிந்து கொண்டது
நாயும் பூனையும் கோழிகளும்

த்தமிட்டு ஊரை கூட்டியது
வெட்ட வெளியில் கட்டியிருந்த
ஆடும் மாடுகளும்

ட்டுத் துணியின்றி
 நிர்வானமாய் குளித்தது
வீதியில் நின்ற வாகனங்கள்

ங்கள் தேகங்களை நனைக்காதே
கறுப்புக்கொடி உயர்த்திய மனிதர்கள்
வீதியில் முளைத்தது குடைகள்

ன்னைக்கு வேலை கெட்டுப்போச்சு
மழைக்கு ஒதுங்கி நிற்கும்
எங்கோ புறப்பட்டு சென்றவர்கள்

னையும் சிறுவர்கள்
பயமுறுத்தும் பெரியவர்கள்
சிரித்துக் கொண்டு மழை

ந்த ஊரில் நல்லமழை
அடுத்த ஊரில் வந்துசொன்னது
அங்கு நனைந்த பேரூந்து

ழையில் குளித்தும்
தலை துவற்றாத மரங்கள்
கிளைகளில் தேங்கிய நீர்

தொப்பலாய் நனைந்து
மேனி நனைந்த வெட்கத்தில்
தலைதாழ்த்தி நிற்கும் செடிகள்

னிதக் கழிவையும்
அசுத்தங்களையும் துடைத்தபடி
ஓடைகளில் ஓடியது மழைநீர்

சிறை மீண்ட மேகங்கள்
மழைத்துளிகளாய் கொட்டிவிட
தெளிந்தது வானம்


Thursday, May 5, 2011

ஒற்றை மகள்
னிதர்களை சுமந்து கொண்டு
ஒய்யாரமாய் நிற்கும்
அடுக்கு மாடி காட்டடம்

ட்டடத்தின் இரண்டாம் நிலை
7 ஜி அரைக் கூடம்
கண்ணீருடன் அந்த தம்பதிகள்

மேலும் கீழுமாய் தூக்குயந்திரம்
வேடிக்கை பார்த்தபடி சென்றனர்
பயணித்த சில மனிதர்கள்

மாலை ஐந்து இருக்கும்
நெருப்பை அள்ளி கொட்டியது
அந்த தொலைப்பேசி அழைப்பு

ன்னை மன்னித்து விடுங்கள்
காதலனுடன் பதிவுத் திருமணம்
ஒற்றை மகளின் குரல்

விழிகளில் கண்ணீர் ஒழுக
தளர்ந்து விழுந்த அவர்களை
சலனம் செய்தது ஓர் நிகழ்வு

ன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள்

ன்பும் பண்பாடும் வழியும்
பச்சை மனிதர்கள் வாழும்
ஒரு குக்கிராமம்

யோ இப்படி ஏமாத்திட்டாளே
ஒரு அழுகை சத்தம்
அந்த ஊர்வீதியை நிரப்பியது

வெற்று வீதியில்
சற்றென முளைத்தது
சில உறவுக் கூட்டங்கள்

மீச முறுக்கி நடந்மனுஷன
தலை குனிய வச்சுட்டாளே
மாறிலடித்துப் புலம்பினாள் பெத்தவள்

த்தப் புள்ளையின்னு
பொத்திப் பொத்தி வளர்த்தது
உறவு அறுத்து போயிடுச்சு

ந்த உறவுகளிடம்
புலம்புக் கொண்டிருந்தார்
மகளை பறிகொடுத்த தகப்பன்

ருக்கு புதுசா வந்த
அந்த அதிகாரியோடு ஓடிட்டாளம்
கூடி நின்றவர்களில் ஒருவர்

வள் நல்லா இருக்கமாட்டாள்
சபித்துக் கொண்டிருந்தாள்
பெத்த ஒத்தப் பிள்ளையை

ரி விடுங்க என்னசெய்ய

யாரோ ஒருவரின் குரல்
நினைவுகளை கலைத்தது

றவருத்ப் போனது ஒத்தமகள்
பெத்த மனசுகளின் வலிகள்
இன்று உணர்கிறார்கள் இவர்கள்

ரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி

விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து

Wednesday, May 4, 2011

அவள் இதழும் உமிழ்நீரும்

யாரோ சொன்ன நர்மத்திற்கு
இதழ் திறந்து அவள்சிரிக்க
கீழே சிதறிவிழுந்தது உமிழ்நீர்

வெற்றுத் தரையில்
தேன் சிந்திக் கிடக்குது
அணிவகுப்பில் எறும்புப் படைகள்

லரில் தேன் அருந்த
ரிங்காரம் இட்டபடி வண்டுகள்
மூடாத இதழுமாய் அவள்

ம்மிதழ்கள் நிறைய தேன்கள்
வண்டுகளோ உன்னைச் சுற்றியபடி
துக்கத்தில் முற்றத்து மலர்கள்

ருஞ்சுவை அமிர்தம்
மீண்டும் சுவைக்க கிட்டுமோ
தரையில் தவம்கிடக்கும் எறும்புகள்

ரு முறையேனும்
அவ்மலரில் தேனருந்த வேண்டும்
அவள் இதழ் சுற்றும் வண்டுகள்

ன்னிதழ் திறந்து சிரிக்காதே
மௌன மொழியில் வினவியது
முற்றத்தில்  பூத்திருந்த மலர்கள்

Tuesday, May 3, 2011

இரண்டு பக்கம்

பிறந்து விழும் குழந்தை
வாழ்வதற்கு இரண்டு வழி
தீர்மானிக்கிறது சமூகம்
நல்லவன் கேட்டவன்

மனிதனுக்கு காழ்ப்பு மனிதன்
சுயநலமாய் தீர்ப்பு எழுதுகிறான்
இறைவனை புறக்கணித்து
பழிக்கு பழி தீர்த்தல்

நல்லவர்கள் நாங்கள்
ஊருக்கு வெளியே மார்தட்டல்
அகத்தில் நிரம்பி வழியும்
சீழ் துருநாற்றம்

உலகின் பெரும் மகான்
உன் சுயத்தை எழுது
தட்டுத் தடுமாறும் மனம்
உண்மை கோரங்கள் நிறைந்தது

தீர்ப்பு எழுதும் சபை
கண்ணும் காதும் கட்டிய
நீதி தேவதை


தீரை விசாரிக்காமல்
கூடிப் பேசி அலசினார்கள்
கேட்டவனும் பார்த்தவனும்

நாணயம் இரு பக்கம்
ஒரு பக்கம் சிதைந்தாலும்
நாணயத்திற்கு இல்லை நாணயம்

Monday, May 2, 2011

பாவம் செய்தல் ஏவுதல்


முயற்ச்சிக்கு இடையூறாக அவர்கள்
இந்த ஊரை அழித்துவிடு
ஆயுதம் கொடுத்து அனுப்பினான்
அதிகாரம் கொண்ட கயவன்

செல்லும் இடமெல்லாம் ஆதிக்கம்
இனங்குபவர்களுக்கு பொன்னும் பெண்ணும்
மறுப்பவர்கள் தலைகள் மண்ணில்
உலக நாசத்தின் உயிர்கொல்லி

நாசத்திற்கு துணை போனாதால்
மோசம்போனது அவன் இனம்
ஆயுதத்தை திருப்பி நீட்டினான்
பகைவனோ சுதாரித்துக் கொண்டான்

பாவம் செய்தவனோ
தண்டனைக்குள் அகப்படுகிறான்
பாவத்தை ஏவியவனோ
அதிகார அரியணையில் இருக்கிறான்

திகாரம் கொண்ட கயவனோ
அதரணியில் ஆங்காங்கே
பொன்னும் பெண்ணையும் விதைத்து
உயிர்த்தெளுப்பினான் நஞ்சு மனிதர்களை

விஸ்வரூபம் எடுத்த அதிகாரமுள்ளவன்
தரணியெங்கும் கொன்று குவித்தான்
பாவப்பட்ட மனித உயிர்களை
கொடி நாட்டினான் பச்சைகுருதியில்

ல்ல உறவுகளிடத்தில் கோள்மூட்டி
நஞ்சை புகுத்தி அன்பை விரட்டி
மறைமுகமாய் நாசங்கள் செய்தும்
அமைதியை சீர்கெடுக்கும் இவன்
இன்று உலகின் சிறந்தவன்

ரணியெங்கும் களவாடி
அதிகாரம் நிலை நிறுத்தும்
கொள்ளைக்காரனின் சொல் வேதமாம்
சீர்கெட்ட சாக்கடை நல்வழியாம்

தாய் நாட்டுக் கலாச்சரங்களை
எட்டு உதைத்து புறம்தள்ளி
மேல்நாட்ட்வர்களை கொண்டாடும்
கேடுகட்ட என் தாய்மக்கள்

ஐயகோ ஐயகோ ......
அன்றே பாடினான் என் பாரதி
நெஞ்சு பொறுக்குதில்லையே... நெஞ்சு பொறுக்குதில்லையே...
நிலைகெட்ட மனிதர்களை நினைக்கையில்

பாவம் செய்பவனைவிட
பாவத்தை ஏவுபவனே பெரும்பாவி
உலகின் எல்லா வேதங்களும் சொல்கிறது
விழித்தெழுங்கள் சிந்தியுங்கள்

அவன் தீவிரவாதிங்கள் தாய் பெற்றதல்ல
எம்மண்ணில் பிறந்தர்வர்கள் அல்ல
எங்கிருந்தோ வந்தவர்கள்
எம்மை ஆளுகிறார்கள்

பிறந்த எம் தாய்மண்ணில்
அழவும் சிரிக்கவும் தடைகள்
பிழைப்பு தேடி வந்தவர்களிடம்
சிறை கைதிகளாக நாங்கள்

கோர ஆயுதம் காட்டி
எங்கள் வளமும் செல்வமும்
சூறையாடப்பட்டு நாடு கடத்தல்

தாய் வயதுப் பென்மைகளின்
உடுதுணிகள் கழற்றப்பட்டு
நடு வீதியில் மானபங்கம்

ருவம் தளிராத சகோதரிகளின்
உடலில் இறக்கமிற்றி
களவாடப்படும் கற்பு

ன் கேள்வி எழுப்பிய
தந்தைகளின் தலை அறுத்து
முண்டமாக வீதியில்

யவர்களின் கோரத்தாண்டவம்
சிறைகளில் கொத்தடிமைகளாக
உதிரம் ஒழுக்கும் எம்சகோதர்கள்

பிணம் தின்னும் அரக்கர்களால்
எங்கள் ஊர் வீதிகளில்
நித்தம் அரங்கேறும் கோரங்கள்

பொறுமை இழந்து வீறுடன்
சிறை உடைத்து எரிந்து
அடிமை அகற்ற புறப்படல்

ண்ணின் மைந்தர்களுக்கு
அன்று அதிகாரம் கையாண்டவன்
இட்ட பெயர் புரச்சியாளன்

காலம் உருண்டோடியது
உலகை ஆளும் தேசங்களில்
அதிகாரம் கையாளும் சாத்தான்கள்

லிமை குன்றிய பாவங்களிடம்
சுதந்திரம், உரிமைகள், பறிக்கப்பட்டு
உயிர் ,குருதி ஒழுக்கி
இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம்

ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி

திகார கொடுமைகளை அகற்ற
கொண்ட கொள்கையில் உறுதியாய்
உரச்சு நிற்கும் அவன்
தீவிரவாதிதான்

கொலை,கொள்ளை கற்பழிப்பு
ஊரை ஏமாற்றி உலவும்
மான்னிய முகமூடிக்குள் அரக்கர்கள்
இது கலியுலகம்

ண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ????

Sunday, May 1, 2011

புன்னகைர்மம் அகத்தை வருடகையில்
சோம்பல் முறித்து எழுகிறது
இயற்கை புன்னகை

வர்கள் சிரிக்கிறார்கள்
நாமும் சிரிப்போம்
இரவல் புன்னகை

ர்மம் உள்ள மனதில்
சிறைபட்ட ஆயுள் கைதியாக
பகைமை

னிதன் புன்னகை செய்கையில்
குருதி நாழத்தில் வேகம்
நிற்காமல் செல்லும் ஆயுள்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...