Monday, May 2, 2011

அவன் தீவிரவாதிங்கள் தாய் பெற்றதல்ல
எம்மண்ணில் பிறந்தர்வர்கள் அல்ல
எங்கிருந்தோ வந்தவர்கள்
எம்மை ஆளுகிறார்கள்

பிறந்த எம் தாய்மண்ணில்
அழவும் சிரிக்கவும் தடைகள்
பிழைப்பு தேடி வந்தவர்களிடம்
சிறை கைதிகளாக நாங்கள்

கோர ஆயுதம் காட்டி
எங்கள் வளமும் செல்வமும்
சூறையாடப்பட்டு நாடு கடத்தல்

தாய் வயதுப் பென்மைகளின்
உடுதுணிகள் கழற்றப்பட்டு
நடு வீதியில் மானபங்கம்

ருவம் தளிராத சகோதரிகளின்
உடலில் இறக்கமிற்றி
களவாடப்படும் கற்பு

ன் கேள்வி எழுப்பிய
தந்தைகளின் தலை அறுத்து
முண்டமாக வீதியில்

யவர்களின் கோரத்தாண்டவம்
சிறைகளில் கொத்தடிமைகளாக
உதிரம் ஒழுக்கும் எம்சகோதர்கள்

பிணம் தின்னும் அரக்கர்களால்
எங்கள் ஊர் வீதிகளில்
நித்தம் அரங்கேறும் கோரங்கள்

பொறுமை இழந்து வீறுடன்
சிறை உடைத்து எரிந்து
அடிமை அகற்ற புறப்படல்

ண்ணின் மைந்தர்களுக்கு
அன்று அதிகாரம் கையாண்டவன்
இட்ட பெயர் புரச்சியாளன்

காலம் உருண்டோடியது
உலகை ஆளும் தேசங்களில்
அதிகாரம் கையாளும் சாத்தான்கள்

லிமை குன்றிய பாவங்களிடம்
சுதந்திரம், உரிமைகள், பறிக்கப்பட்டு
உயிர் ,குருதி ஒழுக்கி
இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம்

ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி

திகார கொடுமைகளை அகற்ற
கொண்ட கொள்கையில் உறுதியாய்
உரச்சு நிற்கும் அவன்
தீவிரவாதிதான்

கொலை,கொள்ளை கற்பழிப்பு
ஊரை ஏமாற்றி உலவும்
மான்னிய முகமூடிக்குள் அரக்கர்கள்
இது கலியுலகம்

ண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ????

2 comments:

 1. தீவீரவாதிகள் உருவாவதற்கான காரணிகளை வரிசைப்படுத்துகிறது ஆரம்ப வரிகள்.

  //இன்றும் தொடர்கிறது
  அதிகார சாத்தான்களின் கோரம் //

  பிரயோகமும், பிரயோகிக்கப்பட்ட இடமும் பொருத்தம்.

  //ஞாயம் கேட்டு
  தலை உயர்த்துபவர்களுக்கு
  இன்றைய நாகரீக பெயர்
  அவன் தீவிரவாதி //

  யதார்த்த நிகழ்வு. அன்று நேதாஜியை தீவிரவாதி என்று ஆங்கிலேயன் முத்திரை குத்தினான். அவனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிய நாம் இன்று நக்சல்களையும், மாவோயிஸ்டுகளையும் தீவிரவாதி என்கிறோம்.

  சிந்திக்கத் தூண்டும் வரிகள் நிரம்பிய நல்ல கவிதை சேக்காளி

  ReplyDelete
 2. உங்களை தலை வணகுகிறேன் என்று சொல்ல ஆசை
  ஆனால் அது எனக்கு ஹராம் (விலக்கப்பட்டது)

  தலைவணக்கம் என் இறைவனுக்கு மட்டுமே

  என் மனம் கனிந்து சொல்கிறேன் சேக்காளி
  என் வரிகளின் அர்த்தம் புரிந்து
  கருத்திடும் நல்ல வாசித்தல் இரசனையுள்ள நண்பர்களில்
  நீங்கள் எப்போதும் முதலிடம்

  எந்த பேதமும் இல்லாத கருத்து
  இந்த கிறுக்கல் ஏன் எழுதினேன் என்றும் உங்களுக்கு வாசிக்கையில் புரிந்திருக்கும்

  நன்றி நன்றி நன்றி சேக்காளி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...