Wednesday, May 4, 2011

அவள் இதழும் உமிழ்நீரும்





யாரோ சொன்ன நர்மத்திற்கு
இதழ் திறந்து அவள்சிரிக்க
கீழே சிதறிவிழுந்தது உமிழ்நீர்

வெற்றுத் தரையில்
தேன் சிந்திக் கிடக்குது
அணிவகுப்பில் எறும்புப் படைகள்

லரில் தேன் அருந்த
ரிங்காரம் இட்டபடி வண்டுகள்
மூடாத இதழுமாய் அவள்

ம்மிதழ்கள் நிறைய தேன்கள்
வண்டுகளோ உன்னைச் சுற்றியபடி
துக்கத்தில் முற்றத்து மலர்கள்

ருஞ்சுவை அமிர்தம்
மீண்டும் சுவைக்க கிட்டுமோ
தரையில் தவம்கிடக்கும் எறும்புகள்

ரு முறையேனும்
அவ்மலரில் தேனருந்த வேண்டும்
அவள் இதழ் சுற்றும் வண்டுகள்

ன்னிதழ் திறந்து சிரிக்காதே
மௌன மொழியில் வினவியது
முற்றத்தில்  பூத்திருந்த மலர்கள்

4 comments:

  1. உதட்டோரத்தில் இவ்வளவு அழகான கவிதையா..


    சூப்பர்..

    ReplyDelete
  2. //# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
    உதட்டோரத்தில் இவ்வளவு அழகான கவிதையா..

    சூப்பர்..//


    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
    கவிதை வீதி

    ReplyDelete
  3. அடடா.. அடடா.. எத்தனை கவித்துவம்..! இதழைப்பற்றி இப்படியும் ஒரு தேனான கவிதையா?

    நடக்கட்டும். உங்கள் கவிதையிலும் தேன் சிந்துகிறது.. கவனம்..வலைப்பூவையும் எறும்புகள் சுவைத்துவிடப்போகிறது...!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...