Sunday, May 8, 2011

மழை துளிகள்



வேட்கையின் வெட்டங்களை
சிறுக சிறுக உள்வாங்கியபடி
சற்று அயர்ந்த கதிரவன்

வானம் கறுத்து இருள்சூழ
முட்டி மோதிக் கொண்டது
பார்வை இழந்த மேகங்கள்

யாத மேகச் சண்டை
கோர ஆயுதமாய் உயிர்த்தெழுந்து
இடியும் மின்னலும்

தென்றலின் சமரசத்தில்
கனிந்து இளகிய மேகங்கள்
மண்ணை முத்தமிட்டது மழைத்துளி

ழை மழை வருது
அவசரமாய் களவாடப்பட்டது
கொடியில் காயும் உடுதுணிகள்

பெரும் துளிகள் உடைந்து
சிறு துளிகளாய் கொட்டியது
பூமித் தாயின் மேனியில்

னல்பட்டு கீறிய மார்புக்கு
மருந்து கிட்டிய சந்தோசத்தில்
வறண்ட நிலங்கள்

ழுகாத இடம் தேடி
ஓடி ஒளிந்து கொண்டது
நாயும் பூனையும் கோழிகளும்

த்தமிட்டு ஊரை கூட்டியது
வெட்ட வெளியில் கட்டியிருந்த
ஆடும் மாடுகளும்

ட்டுத் துணியின்றி
 நிர்வானமாய் குளித்தது
வீதியில் நின்ற வாகனங்கள்

ங்கள் தேகங்களை நனைக்காதே
கறுப்புக்கொடி உயர்த்திய மனிதர்கள்
வீதியில் முளைத்தது குடைகள்

ன்னைக்கு வேலை கெட்டுப்போச்சு
மழைக்கு ஒதுங்கி நிற்கும்
எங்கோ புறப்பட்டு சென்றவர்கள்

னையும் சிறுவர்கள்
பயமுறுத்தும் பெரியவர்கள்
சிரித்துக் கொண்டு மழை

ந்த ஊரில் நல்லமழை
அடுத்த ஊரில் வந்துசொன்னது
அங்கு நனைந்த பேரூந்து

ழையில் குளித்தும்
தலை துவற்றாத மரங்கள்
கிளைகளில் தேங்கிய நீர்

தொப்பலாய் நனைந்து
மேனி நனைந்த வெட்கத்தில்
தலைதாழ்த்தி நிற்கும் செடிகள்

னிதக் கழிவையும்
அசுத்தங்களையும் துடைத்தபடி
ஓடைகளில் ஓடியது மழைநீர்

சிறை மீண்ட மேகங்கள்
மழைத்துளிகளாய் கொட்டிவிட
தெளிந்தது வானம்


3 comments:

  1. உண்மையிலே அசத்தலான கவிதை..
    மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
  2. //கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
    உண்மையிலே அசத்தலான கவிதை..
    மிகவும் ரசித்தேன்..//

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதை வீதி

    ReplyDelete
  3. சாதரணமான மழை...
    கொஞ்சம் செருக்குடன் பெய்கிறது..
    உங்களின் அழகான வர்ணனை..
    அதுவும் படித்ததோ..?
    நானும் அந்த மழையில் நனைந்தே ரசித்தேன்..அருமை..அருமை,,

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...