Tuesday, May 24, 2011

ஓய்வு


திகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்





ள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்





ழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்





ரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை





தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்





மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்





லுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை





ந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை





நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்

2 comments:

  1. //நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
    உயிர்த்தெழுந்தது நினைவுகள்
    வீட்டு நாற்காலித் தனிமையில்//

    எல்லாவற்றையும் கடந்தபிறகு வருகிறதே ஒரு தனிமை....
    அது -
    எத்தனை அர்த்தங்களை உள்ளடக்கியது.
    எத்தனை பாடங்களை கற்பிக்கிறது.!
    எத்தனை தழும்புகளை ரணப்படுத்துகிறது.
    எத்தனை கண்ணீரை அர்த்தப்படுத்துகிறது.

    சேக்காளி... வாழ்வின் அத்தனை அத்தியாயத்தையும் நீங்கள் வரிவரியாய் உணர்ந்து எழுதி வருகிறீர்கள் என்பதை உங்கள் கவிதைகள் உணர்த்துகின்றன. அந்த வகையில், இந்தக் கவிதை அந்திமக்கால உணர்வுகளை அள்ளித் தெளித்திருக்கிறது.

    குற்றங்களுக்காகக் குறுகவும்,
    பாராட்டிற்காக நெகிழவும்,
    நன்றிக்காக மகிழவும் எல்லோருக்கும் வேண்டும் ஒரு தனிமை...

    ReplyDelete
  2. அருமையான செதுக்கப்பட்ட வரிகள் ஒவ்வொன்றும்....

    வேலையில் இருந்து ஓய்வு பெறும் தினத்தை ஒரு சிலர் துக்கதினமாகவும் ஒரு சிலர் அப்பாடா இனி வீட்டில் ஓய்வெடுக்கலாம் நிம்மதியாக தூங்கி இஷ்டப்பட்டதை சாப்பிட்டு அரக்க பரக்க எழாமல் ஓடாமல் நிதாமாக யோகா , வாக்கிங் , தியானம் இப்படி நாட்களை கடத்தலாம் என்று ஒரு சிலரும் இருப்போருண்டு...

    ஓய்வு வேலையில் இருந்து மட்டுமே.... நினைவுகளுக்கு ஓய்வில்லை என்பதை
    உங்கள் அருமையான வரிகள் நிரூபிக்கின்றன செய்தாலி....

    உட்கார்ந்து வேலை செய்த நாற்காலி.... இதுநாட்கள் வரை கடந்த நிகழ்வுகள், உடன் பணிபுரிந்தோருடனான கொண்ட நட்பு இப்படி எல்லாமும் அலைக்கழிக்கும்.... ஓய்வை விரும்பாதோருக்கு இந்த கட்டாய ஓய்வு நினைவுகளை தட்டிவிடும். கவிதை வரிகளை எழுத வைத்துவிடும்....

    அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...