Monday, May 30, 2011

கட்டில் இரகசியம்



ர்மேயும் பருவத் தவறுகள்
உணர்ச்சிகள் வற்றிய ஆண்மைகள்
வருடலுக்கு ஏங்கும் பெண்மைகள்




விழிப்பில் பெண் விழிகள்
ஆழ்ந்த உறக்கத்தில் ஆண்விழி
நரகவேதனை உடுத்தும் நாழிகைகள்




ட்டிலில் உணவாக தாம்பத்தியம்
எங்கோ உண்டகளைப்பில் ஆண்மை
உண்ண ஆளற்று பெண்மை




னிமையின் கோரமான சித்திரவாதை
ஏக்கங்களை மூடும் இருள்கருமை
கண்ணீரை சுமக்கும் தலையணை




ட்டிலுக்கு உதவாத ஆண்மைகள்
நகரும் ரணமான வாழ்க்கை
மரபை உடைக்காத பெண்மைகள்




ண்மை துலைத்த ஆண்மைகள்
மலடுபட்டம் சுமக்கும் பெண்மைகள்
வார்த்தைகளால் குத்தும் உறவுகள்




ர் போற்றும் ஆண்மைகள்
பெண்மை துயர்துடைக்க நட்டலில்லை
துயரத்தில் கட்டில் இரகசியம்




ங்கள் இச்சைக்காக புலம்பவில்லை
நீ தட்டியெழுப்பிய உணர்ச்சிகள்
அழுகிறது நித்திரை தொலைத்து




லர் நிலவு கவிதை
கானல் உவமைகளில் பெண்மை
சுயம் தற்காக்கும் ஆண்மைகள்




வறுகளை தொடரும் உறவுகள்
ஊருக்காக போலி வாழ்க்கை
மன்னிக்க முடியாத மனிதபாவம்




பிறக்கும் இரு பாலினத்தின்
வாழ்வின் அர்த்தம் உணர்த்துகிறது
மணவாழ்க்கையின் தாம்பத்தியம்




னப்பொருத்தம் பார்க்கும் உறவுகள்
அறிந்துகொள்ள மறந்து விடுகிறார்கள்
ஆண்மை பெண்மை சான்றிதழை

5 comments:

  1. பாலியலுணர்வைத் துாண்டும்
    இன்றைய ஊடகங்களால் தான்
    ஆண்மை பெண்மை சான்றிதழை
    கேட்கவேண்டிய நிலை!

    ReplyDelete
  2. பெண்மை பற்றிய வருத்தப்பட வேண்டிய வரிகள், உண்மையில் பல பெண்களுக்கு இன்பங்கள் எட்டா கனியாகவே உள்ளது. கணவனின் லேசான, கனிவான வார்த்தை கூட "அத்தி பூப்பது போல் தான்"

    அருமையான பதிவு

    ReplyDelete
  3. பேசக்கூடாது என்று சமுதாயம் போட்டுக்கொண்ட வரையரைக்ளிலேயே சீரழிகிறது
    சமுதாயம். காலத்துக்கு ஏற்ற தலைப்பு. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
    செய்தாலி.

    ReplyDelete
  4. அத்தனையும் உண்மை வரிகள்..சில பெண்களிடையே சொல்ல முடியாமல் போன ஊமை வரிகள் இது..பெண்ணின் மனதை படித்து, காதல் வடிவில் வடித்த கவிஞருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  5. ஒவ்வொரு வரியும் உச்சந்தலையில் ஆணியாய் தான் இறங்குகிறது. அவரவர் குறைகளை அவர்களாகவே சரி செய்து கொள்ளாதா வரையில் பாவப்பட்ட பெண்மையை நினைத்து பரிதாபப் படுவதை தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...