Saturday, June 25, 2011

இன்ப பாத்திரம்


பாலினங்களின் உறவுப் பசி
ஒருவர்கொருவர் இரசித்து புசிக்க
உடல் பாத்திரத்தில் இன்பம்

நவ உறவுக் களவுகள்
வாலிபங்களில் இன்பக் களவாடல்
கடிவாளமின்றி வீதியில் பருவம்

ஊருக்கு முந்திவிரிக்கும் தாசி
பொதுக் கழிவறையில் இன்பம்
காசுகொடுத்து அழுக்கை உண்பவர்கள்

களவு உணவை ருசிப்பவர்கள்
களவு களவை களவாடுகிறது
உறவுகளில் களவுபோகும் உறவு

உரிமை உள்ள பாத்திரம்
தெவிட்டாத அமிர்த உணவு
இரசித்து புசிக்கத் தெரியாதவர்கள்

இச்சைகளின் உணர்ச்சிக் கக்கல்
நொடிப்பொழுது ஆயுள் மட்டும்
மரணித்தும் துடரும் உணர்வுகள்

அற்ப ஆயுளுள்ள உணர்ச்சிகள்
மதியற்ற மனிதர்களின் அவசரம்
காயப்பட்டு அழுகிறது உணர்வுகள்

Monday, June 20, 2011

அந்த வீட்டில் பேய்

ஆளற்ற நடு பகலிலும்
இருள் மூடும் இரவுகளிலும்
பாதகாணிகளை பயமுறுத்தும் வீதி

ஊரை இணைக்கும் தார்சாலை
முச்சந்தியில் பிரியும் வீதி
இடைப்பதையில் அந்த வீடு

நடைபழகிய ஊர் வீதியில்
நடக்க மறுக்கும் மனிதர்கள்
ஊரைகுலுக்கிய அந்த நிகழ்வு

அந்த வீட்டில் பேய்
ஏறிட்டு பார்க்க மனமில்லாமல்
தலைதாழ்த்தி நடக்கும் கோழையர்கள்

உறவுச் சண்டையில் மனமுடைந்து
கயிற்றில் தூங்கி உயிர்விட்டவன்
ஆவியாய் திரிகிறான் ஊர்வதந்தி

யாரோ இயற்றிய கட்டுக்கதை
ஊரைக் கொல்லும் நோய்க்கிருமி
நித்தம் செத்துப்பிழைக்கும் ஊர்வாசிகள்


Saturday, June 18, 2011

அலையில் ஒதுங்கிய உடல்
மறைவதற்கு
சில  நாழிகைமட்டும்
வேட்கை  வெட்டங்களை  உள்வாங்கி
கீழ்வானத்தில் பவ்வியம்மாக
கதிரவன்  


கரையை 
முத்தமிட்டு விளையாடுகிறது
கடல் தாயில்  மடியிலிருந்து
தவழ்ந்துவந்த அலைக் 
குழந்தைகள்


கரையின் 
ஓரத்தில்   துவாரமிட்டு
அதில் ஒளிந்து விளையாடும்
சின்னச்சிறு குட்டி 
நண்டுகள் 


பொங்கியெழும் 
பெரும் அலைகள்
முட்டிமோதி உறவாடும்  காற்று
சிதறிவிழும் குளிர்ந்தத 
நீர்த்துளிகள்


அன்றைய 
கதைகள் பேசியபடி
ஒற்றுமையுடன் வீடு திரும்பும்
இரைதேடிச் சென்ற 
பறவைகள்


பரந்த 
கரைமணல் விரிப்பில்
அங்காங்கே நின்றும் அமர்ந்தனர்
எங்கிருந்து வந்த 
மனிதர்கள்


தேடிவந்த 
மனித பாதங்களின் 
அழுக்கை  பாரபச்சமிற்றி கழுவியது
அலையில் வந்த
 நீர்த்துளிகள்


 கரையருகே 
தளும்பும் அலைநீரில்  
 மனிதர்கள்  குளித்து விளையாட  
 வேடிக்கை பார்த்தபடி 
சிலர்


மனித 
கூடங்களுக்கு இடையே
ஆவிபறக்கும் சுண்டலும் தேநீரும்
கூவிக்கூவி விற்ற்கும் 
சிறுவர்கள்


மூக்கை 
நன்றாக பொத்தியபடி
அங்கு தூரத்தில் ஓரிடத்தில்
எதையோ மொய்த்தபடி 
மனிதர்கள்


சுயம் 
மரணம் தேடியோ
பேரலையில் தவரலாக  சிக்கியோ
கடல் மட்டும் சாட்சி

உயிரை 
மட்டும் உட்கொண்டு
அலைகள் கரையில் ஒதுக்கியது
 நீரில் ஊறிய மனிதசடலத்தை


மீன்கள் 
பிச்சு சீண்டி
அடையாளம் தொலைத்த முகம்
உறவுகளை தேடும் அனாதைசடலம்


முந்தாநாள் கரையோரத்தில் பார்த்தேன்
மென்குரலில் சொன்னான் சகநண்பனிடம்
சுண்டல்  விற்கும் சிறுவன்


எங்கோ ஒரு குடும்பத்தில் 
இவன் வரவையும் எதிர்பார்த்து 
உறவுகளும் அவன் தாயும் 


Sunday, June 12, 2011

அந்த கிராமத்து மனிதர்கள்


கரத்திலிருந்து சுமந்துவந்த பேரூந்து
இறுதியில் இறக்கி சென்றது
அடையாளம் தெரியாத சிற்றூரில்


ரின் பெயரெழுதிய திசைகாட்டி
அதனருகே பிரியும் ஒத்தையடிபாதை
தார்சாலை விலக்கப்ட்ட கிராமம்


ச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள்


ளைந்து நெளிந்து நீளும்பாதை
பழைய பாடல்களை கக்கியபடி
பாதையோரத்தில் சிறு தேநீர்விடுதி


வானம்பார்க்கும் முறுக்கு மீசை
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்


ந்த வீட்டுக்கு போகவேண்டும்
அடையாள முகவரி வினவல்
அறிமுகம் தெரியாத மனிதர்கள்


ன் எதற்கு எங்கிருந்து
பெயரென்ன யாரைப் பார்க்கணும்
அவர்களிடம் முளைத்த வினாக்கள்


விழிகளால் களவாடபட்டுது முகம்
பதிலுரைத்த இதழின் சொற்களை
பதிவு செய்தார்கள் அகத்தில்


புதிதாய் நுழையும் மனிதர்கள்
கிராமத்தின் தொடர் எல்லையில்
விசாரிக்கப் படுகிறது அடையாளங்கள்


விபரங்களை சேகரித்த அவர்கள்
கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு


சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்


வருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக


த்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது


கானல் இரவல் புன்னகை
சாயமும் முகமூடியும் முகத்தில்
நகரங்களில் நாகரீக மனிதர்கள்


முகத்தில் பயக்கும் கோபம்
அகத்தில் கனியும் நண்மைகள்
மாறாத கிராமத்து மண்வாசனை


னதில் எண்ணங்களின் ஓட்டம்
இயற்கையை ரசித்தபடி நடைபயணம்
ஊரை அடைந்து வந்தபாதை


வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்

Wednesday, June 8, 2011

மண(ன)விலக்கு


ருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்


சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்


ள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்


ரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை


நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்


ட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேவிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்


றவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்


னித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்


நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு

Monday, June 6, 2011

பேரூந்தில் அழும் பயணிநான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து
வ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள
ங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து
ங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்
பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து
ன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்
பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்
டைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்
விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்
ருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்
தற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை
துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்
வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்
னுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்

Wednesday, June 1, 2011

வீதியில் அவள்
நித்தம் மது குடித்து
சுயம் இழந்த தகப்பன்


சீக்கு பிடித்து மூலையில்
நேற்றுவரை உழைத்த தாய்


டுக்க நல்ல துணியில்லை
பள்ளி உறவைமுறித்து தம்பிகள்


நித்த பசிக்கு திண்டாட்டம்
வறுமை வேலிக்குள் வீடு


லைபிள்ளை பருவம் எய்தவள்
காலம் உடுத்திய அடையாளம்


குடும்ப வறுமையை துடைக்க
சமூக வீதியில் அவள்


நாலுவீட்டில் அடுப்பாங்கரை வேலை
நிரம்பியது உறவுகளின் வயிறு


வீதி பணி இடங்கள்
பருவம் கொத்தும் காமக்கழுகுகள்


மேலாடை பொத்தல் கிழிசல்கள்
மோப்பம் பிடிக்கும் செந்நாய்கள்


ருட்டறையில் ஆடை அவிழ்க்க
வறுமைக்கு விலைபேசும் செல்வந்தர்கள்


காம சங்கிலி அவிழ்த்து
சமூகத்தில் உலவும் உடல்திண்ணிகள்


றுமையில் இளமை கொடியது
 வீழ்ந்தால் படுகுழியாகும் தோல்வி


கோபத்தை ஆயுதாமாக ஏந்தி
வாழ்க்கைவீதியில் நெருப்பாய் அவள்


தோற்காமல் வீறுடன் இவள்
எங்கோ தோற்கும் பெண்மைகள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...