Wednesday, June 8, 2011

மண(ன)விலக்கு






ருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்


சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்


ள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்


ரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை


நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்


ட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேவிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்


றவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்


னித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்


நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு

5 comments:

  1. வாழ்க்கையெனும் பாடம் மறந்த‌
    வழிக் காட்டும் உறவுகள்
    கண்டும் காணாமல் கயமைப் பேசி!

    இருமணம் சேரும் முன்னே
    பொருளெனும் பெருமைப் பேசி
    கட்டிலில் அடக்க நினைத்து!

    அடங்காத வர்க்கம் ஓரங்கட்டி
    பொட்டில் அறையும் காரமென‌
    விவாகரத்து வழிக் காட்டி!

    தட்டது மாற்றியக் கனா மறையும் முன்பே
    விட்டது உறவென உவகைக் கொண்டோர்
    பெற்றுத் தந்த புதுச் சுதந்திரம்!

    உண்மைகளை உலகுக்குச் சொல்லி
    அதிலே அற்புதம் படைத்த நண்பா
    சையதலி நீர் எழுதிய கவிதைகள்
    தவறது செய்வோர் படித்து திருந்துவாரா?

    என்றும்: சுஷ்ருவா

    ReplyDelete
  2. எப்ப தான்
    இந்த நிலை மாறும்...

    ReplyDelete
  3. இன்று மக்கள் விவாகரத்தை ஒரு பொழுது போக்காக நினைத்து பன்னிக் கொண்டு வருகிறார்கள் இரு உறவகளின் உறவை பல உறவுகள் சேர்ந்து பிரித்து விடுவைதை ஏதோ ஒரு சினிமா பார்ப்பது போல் பார்க்கிறது இன்று உலகம் .


    அருமையான கருவை முன்வைத்து அழங்கரித்த உங்களின் கவி வரிகள் அற்புதம் நன்றி தோழரே

    ReplyDelete
  4. உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய வரிகள்..இன்று நடைமுறையில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று..ஒவ்வொரு வரியும் அருமை..வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  5. அத்தனை வரிகளும் அபாரம் மணவாழ்கை பிரிவுக்கு காரணம் கூறுவதாய் வரிகள்
    உள்ளத்தில் புரிதலின் மரணம்
    உறவில் ஒப்பந்த திருத்தல்
    உடைகிறது மண வாக்குறுதிகள்


    இந்த வரிகள் தான் மிக பிரதானமானது

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...