Sunday, June 12, 2011

அந்த கிராமத்து மனிதர்கள்


கரத்திலிருந்து சுமந்துவந்த பேரூந்து
இறுதியில் இறக்கி சென்றது
அடையாளம் தெரியாத சிற்றூரில்


ரின் பெயரெழுதிய திசைகாட்டி
அதனருகே பிரியும் ஒத்தையடிபாதை
தார்சாலை விலக்கப்ட்ட கிராமம்


ச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள்


ளைந்து நெளிந்து நீளும்பாதை
பழைய பாடல்களை கக்கியபடி
பாதையோரத்தில் சிறு தேநீர்விடுதி


வானம்பார்க்கும் முறுக்கு மீசை
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்


ந்த வீட்டுக்கு போகவேண்டும்
அடையாள முகவரி வினவல்
அறிமுகம் தெரியாத மனிதர்கள்


ன் எதற்கு எங்கிருந்து
பெயரென்ன யாரைப் பார்க்கணும்
அவர்களிடம் முளைத்த வினாக்கள்


விழிகளால் களவாடபட்டுது முகம்
பதிலுரைத்த இதழின் சொற்களை
பதிவு செய்தார்கள் அகத்தில்


புதிதாய் நுழையும் மனிதர்கள்
கிராமத்தின் தொடர் எல்லையில்
விசாரிக்கப் படுகிறது அடையாளங்கள்


விபரங்களை சேகரித்த அவர்கள்
கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு


சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்


வருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக


த்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது


கானல் இரவல் புன்னகை
சாயமும் முகமூடியும் முகத்தில்
நகரங்களில் நாகரீக மனிதர்கள்


முகத்தில் பயக்கும் கோபம்
அகத்தில் கனியும் நண்மைகள்
மாறாத கிராமத்து மண்வாசனை


னதில் எண்ணங்களின் ஓட்டம்
இயற்கையை ரசித்தபடி நடைபயணம்
ஊரை அடைந்து வந்தபாதை


வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்

6 comments:

 1. கிராமத்தில் இப்படியான மனிதர்கள் இன்னும் வாழ்வதும் உண்மைதான்.
  நகரத்திலும் இருக்கிறார்கள். கண்டுபிடிக்க கடினம்

  ReplyDelete
 2. பச்சை மண்ணின் வாசத்தை
  அந்தக் கிராமத்து மனிதர்களென‌
  மன இச்சைக் கொள்ளக் கவிதையென‌
  சிந்தைத் திறந்து செப்பிய சீராளரே
  மந்தை விட்டு விலகிய ஆடுகளுக்கு
  மீண்டும் இது போல் கவிதையென‌
  அறிவைத் தெளித்து ஒன்றாய் சேர்ப்பீரே!

  ReplyDelete
 3. ஊர் மணம் வீச
  ஊரவர் பண்பாடு மின்ன
  இறக்காமலிருக்கும்
  பச்சையழகை நினைக்க வைத்துள்ளீரே

  ReplyDelete
 4. அருமையான கவிதை செய்யது.ஆனா கிராம புறங்களிலும் இப்ப இந்த நிலைமை மாறிட்டு வருது என்பது வேதனைக்குரிய விஷயம்.

  ReplyDelete
 5. கிராமத்தினை கண்முன்னே வரிகளில் காட்சிப்படுத்திய அழகான வரிகள்
  கிராமம் என்றாலே இயற்கையின் மணம் தவளும் கவிதையும் அவ்வாறே

  வாழ்த்துகள்

  ReplyDelete
 6. கவிதை வழியாக காட்சியாக மனித நேயத்தை பார்க்க முடிகிறது
  கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட அவர்களின் வீடுகளும் வயல் வெளிகளும் உழவு மாடும் உறவுகளும் அங்கு வீசும் காற்றும் கதிரும் ஏன் அவர்களின் கண்ணீரும், இரவுகளின் நிலவும் கூட உயிர்ப் பொருட்களே.
  உன்னதமான கவிதை செய்தலி.
  நன்றி செய்யது அலி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...