Saturday, June 25, 2011

இன்ப பாத்திரம்


பாலினங்களின் உறவுப் பசி
ஒருவர்கொருவர் இரசித்து புசிக்க
உடல் பாத்திரத்தில் இன்பம்

நவ உறவுக் களவுகள்
வாலிபங்களில் இன்பக் களவாடல்
கடிவாளமின்றி வீதியில் பருவம்

ஊருக்கு முந்திவிரிக்கும் தாசி
பொதுக் கழிவறையில் இன்பம்
காசுகொடுத்து அழுக்கை உண்பவர்கள்

களவு உணவை ருசிப்பவர்கள்
களவு களவை களவாடுகிறது
உறவுகளில் களவுபோகும் உறவு

உரிமை உள்ள பாத்திரம்
தெவிட்டாத அமிர்த உணவு
இரசித்து புசிக்கத் தெரியாதவர்கள்

இச்சைகளின் உணர்ச்சிக் கக்கல்
நொடிப்பொழுது ஆயுள் மட்டும்
மரணித்தும் துடரும் உணர்வுகள்

அற்ப ஆயுளுள்ள உணர்ச்சிகள்
மதியற்ற மனிதர்களின் அவசரம்
காயப்பட்டு அழுகிறது உணர்வுகள்

1 comment:

  1. உரிமை உள்ள பாத்திரம்
    தெவிட்டாத அமிர்த உணவு -\\
    உண்மை, நல்ல வரிகள்
    உரிமையுள்ள பாத்திரம் உண்ண மறுக்காமல் சாப்பிட முடியும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...