Tuesday, July 26, 2011

முத்தான மூன்று முடிச்சுக்கள்


கலை அண்ணன் மற்றும் தோழி மஞ்சு அவர்களின் அழைப்பிற்கு இணைக
என் இதோ எண்ணங்களின் உணர்வுகளின் முடிச்சுக்கள் 


பிடித்த உறவுகள் 
1 .அம்மா 
2 .என்னவள் 
3 .  நன்மை மனிதர்கள் 


பிடித்த உணர்வுகள் 
1 . தாய்  பாசம் 
2  . மனையாளியின் காதல் 
3 .தனிமை   

பிடிக்காத உணர்வுகள் 
1 . கோபம் 
2 . துரோகம் 
3 .  புறம் 

முணுமுணுக்கும் பாடல்கள் 
1 . கடவுள் தந்த அழகிய வாழ்க்கை 
2 . விளக்கு ஓன்று  அணைந்துவிட்டால் 
3 . பாரதியின் பாடல்கள் 

பிடித்த திரைப்படங்கள் 
1 . ஊருக்கு நீதிசொல்லும் திரைச்சித்திரங்கள் 
2 .  நிதர்சன வாழ்க்கைச்   சித்திரங்கள் 
3 . மேண்மை சிந்தனையுள்ள சித்திரங்கள் 

அன்புத் தேவைகள் 
1 .  என்னவளின்  அரவணைப்பு 
2 . தலையணையாய் என்னவளின் மடி  
3 . உறவுகளின் சிறு புன்னகை 

வலிமையை அழிப்பவை
1 .அகத்தினில் சுயத்தினை அடிமைப்படுத்தல் 
2 . துன்பத்தில் சோகத்தை வாழவிடுதல்
3 .விழித்தும் முறிபடாத சோம்பல் 

குட்டித் தத்துவம் 
1 .உன்னைவிரும்பு உனக்கு நீ நேர்மையாக இரு 
2 .அவரவர்  கர்மங்களில் இருக்கிறது நன்மை தீமைகள் 
3 .இறைவன் ,குடும்பம் ,உறவுகள் சமூகம் கடமைகளை செய் 


பயமுறுத்தும் பயங்கள்
1 .இழைத்த பிழைகளின் மறு உருவம் 
2 . காலம் கடந்தபின்னும் முன் உயரும் வாக்குறுதிகள் 
3 .அநீதி இழைக்கப்பட்டவனின் சாபக் குரல் 

அடைய விரும்பும் நிலையான விருப்பம் 
1 .மரணத்திற்கு முன் கடமைகளை முடித்திருக்க வேண்டும் 
2 .எல்லா வல்ல இறைவனின் நேர்வழியில் இருக்கவேண்டும் 
3 .தீமைகள் கீழிறங்கி நண்மைகள் உயர்ந்து சொர்க்கவாசியாக வேண்டும் 

கற்க விரும்புவது 
1 . .என் வாழ்க்கை சார்ந்த மனிதர்களின் மனங்களை 
2 . புவி வாழ்கையின் உன்னதை இரகசியத்தை 
 3 .இம்மை மறுமை  வாழ்க்கைக்கு  தேவையான உலக நன்மை  தீமைகளை 

வெற்றி பெற வேண்டியவை 
1 . நீதிக்கு போராடும் உண்மைகள்
2 .நன்மை மனிதர்களின் நற்கர்ம முயற்ச்சிகள் 
3 .உறவுக்காகவும் ஊருக்காகவும் எதிராளியுடனான  போராட்டம்  

சோர்வு நீக்க தேவையானவை 
1 . ஓடுதல் மற்றும்  நீண்ட நடைபயணம் 
 2 . அளவில் குறையாத இரவு உறக்கம் 
3 .நகைச்சுவை உணர்வு மற்றும் நல்ல எண்ணங்கள் 

எப்போதும் தயாராக இருக்க வேண்டியது 

1 .உதவும் நல்ல மனப்பான்மை 
2 .பேதமின்றி மனிதர்களிடத்தில் புன்னகை விதைத்தல் 
3 .அவசரங்களின் மன,குண நிறங்கள் பார்க்காமல் மனம் 

முன்னேற்றத்திற்கு தேவை 
1 .சுய நம்பிக்கை 
2 . சுய தன்னடக்கம் 
3 .இடைவிடாத நல்ல முயற்சி 


எப்போதும் அவசியாமானது 
1. இறைவனின் அன்பு 
2.நம்பிக்கை எண்ணங்க்ள
3.சுய மற்றும் நன்மை உறவுகளின் பிராத்தனை 

பிடித்த தத்துவம் 

1.பேசும்முன் கேளுங்கள்
.எழுதும்முன் யோசியுங்கள்
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2.ஆயிரம் முறை சிந்தியுங்கள். 
ஒருமுறை முடிவெடுங்கள் 
3.யார் சொல்வது சரி என்பதல்,
 எது சரி என்பதே முக்கியம்


 தெரிந்தும் தெரியாது குழம்புவது 
1.உயிரின் இறையியல் தத்துவம் 
2.இந்த உலகிற்கான மனிதயியல் தத்துவம் 
3.சுய சரி மற்றும் பிழைகள்  

எரிச்சல் படுத்துபவர்கள் 
1. உண்ணுதலில் இடையூறு செய்வது 
2. ஆழ்ந்த உறக்கத்தில் இடையூறு செய்வது 
3.செயம் பணியும் இடையூறு செய்வது 

மனங்கவர்ந்த பாடகர்கள் 
1. கே .ஜே ..யேசுதாஸ் 
2.எஸ் .ஜானகி அம்மாள் 
3.பி .சுசிலா அம்மாள் 

இனிமையானவைகள் 
1.ஜீவனுள்ள  கவிதைகளை வாசித்து இரசிப்பது 
2.மனகவர்ந்த விஷயங்களை கிறுக்குவது 
3.நல்ல மெல்லிசைகளை கேட்பது 

சாதித்தவர்களின் பிரச்சனைகள் 

1.நான் இதுவரை சாதிக்க வில்லை 
2.சாதித்தவர்கள் யாரும் எனக்கு பழக்கமில்லை 
3.ஆதலால் அவர்களின் பிரச்சனைகள் தெரியவில்லை 

பிடித்த பழமொழிகள் 
1.உழைப்பே உயர்வு தரும்
2.பொன்னகை விடச் சிறந்தது புன்னகை  
3.விதைப்பதியே அறுவடை செய்வாய் 

பதிவிட அழைக்கும் மூவர் 

அப்துல்லா  சார் http://abdullasir.blogspot.com/

Wednesday, July 20, 2011

கருவறை இரகசியம்இயற்கை வழித் தடங்களில்
அவர்கள் இருவரின் கூடல்
சேனைகளை இழந்த ராஜனு
அணுவைப் பிளந்து ஊருடுவல்
ஈரணு ஓரனுவான பிணைப்பில்
உயிரை நுழைக்கும் இறைவன்
தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்
இறைவனின் கட்டளைக்கு இணைங்கி
இறையடிமையின் கருவறை விஜயம்
மொழியின்றி மஷியற்ற எழுத்துக்களால்
எழுதப்படும் வாழ்வியல் குறிப்பு
உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு
சுற்றி சூழ்த்திருக்கும் நச்சுநீர்
உடல் உயிருக்கும்மான கவசம்
நீள்கொடியில் சுரக்கும் உதிரம்
தளிரும் ஜீவனுக்கு உணவுப்படி
திறக்கப்படாமல் மூடப்பட்டு
விழியும் இதழும் சுவாசனாளமும்
இருள் கருவறை உலகினில்
தலைகீழ் வாழ்க்கை தருணங்கள்
கால நாழிகையின் முதிர்ச்சி
கருவறை புறம்தள்ளும் உடல்
உயிர் கொடி வெட்டப்படுதல்
பிரியும் இரண்டு  உறவுகள்நாளம் நுகரும் காற்று
கூசும் ஒளியினில் பார்வை
அண்டங்களின் வேட்கை உணர்தல்
நோவினில் புறப்படும் முதலழுகை
ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்

Tuesday, July 19, 2011

இவர்கள் பொய்யர்கள்அண்டம் ஆளும் கடவுள்
பெயர்களில் தொடரும் தற்கங்கள்
இறையியல் அறிவு அற்றவர்கள்


தரணியில் மிகச் சிறந்தவள்
எழுகிறது ஏதோவொரு பெயர்
ஈன்ற தாயின் உன்னதமரியாதவர்கள்

அவள்தான் கற்பில் தூயவள்
துளியும் வெட்கமின்றி தலைவன்
தலைவியின் கற்பில் நம்பிக்கையற்றவர்கள்

அவர்களின் வழியில் நாங்கள்
சுய குருநாதர் சுட்டிக்காட்டல்
கற்றுத்தந்த மாதபிதாக்களை மறந்தவர்கள்

தலைவன் நண்பன் பகைவன்
பிற அடையாளங்கள் தேடல்
தன்சுயம் அறிய முயலாதவர்கள்

தன்னை அறியாத அவர்களை
அகத்தில் உயர்த்தும் மனிதர்கள்
புறந்தள்ளப்படும் சுயமறிந்த உறவுகள்

வாழ்க்கை சார்ந்த வினாக்கள்
விடைகளில் தடுமாறும் மனிதர்கள்
புகழ்ச்சிக்குள் சுயத்தை ஒளிப்பவர்கள்

Thursday, July 14, 2011

உயிர் எரியும் வீதிகள்


கதிரவன் சாயும் மாலை
நித்த தேவைகளை தேடி
வீதியில் நிரம்பும் மனிதர்கள்


நகர இரைச்சலுக்கு இடையே
காதை நிரப்பிக் கிழித்தது
எங்கிருந்தோ வந்த ஓசை


ஓசையின் சலனத்தில் திடுக்கிட்டு
சோம்பல் முறித்து விருட்டெழுந்து
சுதாரித்துக் கொண்டது தூங்காநகரம்


மடை திறந்த வெள்ளமாய்
சிதறி ஓடும் மனிதக்கூட்டம்
பிறகே துரத்தும் நெருப்பு


உடலில் ஒழுகும் குருதி
பச்சையாய் எரியும் மனிதர்கள்
உயிர்களின் அலறல் சத்தங்கள் `


உடைபட்ட பெரும் ஓசை
சிதறிய மனித உடல்கள்
பிரிந்து சென்றது உயிர்கள்


சிலதொரு நொடிப்ப பொழுதில்
உயிரும் பொருளும் சிதைந்து
நெருப்பில் சுருண்டது அவ்வீதி


நான்கு திசை மனிதர்கள்
பேதங்களை உடைத்து எறிந்து
நீட்டினார்கள் உதவிக் கரம்


சிதறிய உடல் உறுப்புக்களும்
உறைந்த பச்சைக் குருதியும்
நாழிகையின் முடிவினில் மீதமாய்


கூடியது ஊடகக் கூட்டங்கள்
பரவியது உறங்கும் செய்தி
கண்ணீர் வடித்தனர் உறவுகள்


சதியின் வேரை கண்டறிவோம்
ஆறுதல் வார்த்தைகளை விதைத்தபடி
காவல்கார உன்னத மேதாவி


இதுவொரு பெரும் கொடுமை
அண்டை தேசத் தலைவர்கள்
நாட்டின் அரசியல் கதர்சட்டகளும்


சில அரக்கர்களின் சுயநலம்
காரண காரியமின்றி உதிர்கிறது
பாவ மனிதர்களின் உயிர்கள்


இறைவன் வரமாட்டன் என்று
நாசம் விளைவித்த நயவஞ்சர்கள்
எங்கோ சிரித்துக் கொண்டு


எந்த ஒரு மதவேதத்திலும்
மனிதர்களை கொள்ளுங்கள் என்று
போதனைகளில் சொல்லப்படவில்லை


மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர்

Monday, July 11, 2011

கண்ணீர் வளையத்தில் அவள்
அவள்மேனியில் விழுந்த நிழல்
உறக்கம் கலைத்தவள் திகைத்தாள்
 ஈன்றவனின்  வக்கிர உருவம்அகில அண்டங்கள் செயலிழந்து
தரணியில் கருமை படிந்ததருணம்
உயிருள்ள சடலமாக அவள்


உயிருள்ள செத்த சடலத்தை
தவணை முறையில் புசித்தவன்
ஊருக்கும் விருந்து வைத்தான்அவர்களின் உறவினில் அசுத்தம்
யாரோ ஒருவர் வெளிக்கொணர
ஊரெங்கும் வீசியது உறவின்துர்நாற்றம்சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு
ஊரெங்கும் பரவியது செய்திநோய்ஊர்வாய் மெல்ல நவவுணவு
ஜீரனமின்றி குமட்டும் உள்ளங்கள
வக்கிர மிருகங்களுக்கு நற்சேதிநிழல்களின் உருவ அடையாளங்கள்
காவல்காரர்களின் நீண்ட தேடல்
காட்சிப் பொருளாக வீதியில்அவள்ஊரின் வெட்ட வெளிச்சங்களில்
நித்தம் அவிழும் அந்தரங்கம்
சவத்தை கொதறும் மிருகங்கள்


கதர்சட்டைகளுக்கு அரசியல் ஆயுதம்
ஊடகங்களுக்கு வியாரப் பொருள்
ஊருக்கு மானக்கேடான கருபுள்ளிகாசுக்கு விலைபோகும் தண்டனைகள்
ஈனர்களில் தொடரும் தவறுகள்
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கண்ணீர்நன்மை செய்கிறோம் என்றெண்ணி
நாளைய தவறுக்கு வித்திடும்
நவ சமூகத்தின் கலாச்சாரம்தீயவைகளை பல்லாக்கில் ஏற்றாமல்
தவறுகளுக்கு தண்டனை நிறைவேற்றுங்கள்
பயப்படட்டும் நாளைய சமூகம்


Thursday, July 7, 2011

கனவில் ஒரு தேவதை


புல்லாங்குழல் ஓசையின் நடுவே
தித்திக்கும் அவளின் சிரிப்பொலி

ஆழ்மனதில் உறங்கியிருந்த ஆன்மா
உறக்கம் கலைத்து விழிதிறந்து

ஆழ்ந்த நித்திரையின் வாசல்திறந்து
நினைவு வீதியல் ஒத்தையாக

பாதையிலிருந்து விலகுகிறது இருள்
பினால்வரும் நிலவினில் அவள்முகம்

தனிமை இருப்புக்களில் சலனங்கள்
புன்னகையால் போர் தொடுக்கிறாள்

மௌனத்தின் ஓசையற்ற வார்த்தைகளால்
காதருகே சொல்லிச் சிணுங்குகிறாள்


அகம்குளிர்ந்து கூசும் அவளின்வார்த்தைகள்
எதையெதையோ பேசும் பித்தானாக

எங்கங்கோ அழைத்து செல்கிறாள்
விண்ணில் சிறகின்றி பறக்கிறேன்

உலகின் அழகுகளால்அலங்கரித்த்
அவள் குடியிருக்கும் அழகுதேசம்

காதல் தேசத்தை ஆளும்
தேவதைகளின் அரசி அவள்

அவள் இதையச் சிறையில்
இன்றுமுதல் காதல் கைதி

அவள் இதழின் முத்தங்கள்
காதலுக்கான நித்த தண்டனை

முதல் முத்தம் பதிக்க
என் இதழருகே அவளிதழ்

உம்ம உம்மா உம்மா
டேய் டேய் யாருக்குடா முத்தம்
அருகே படுத்திருந்த நண்பனின் அலறல்

கண்விழித்து பார்க்கிறேன் கடிகாரத்தை
காலை எட்டுமணியை தாண்டியமுள்
இச்சே இச்சே எல்லாம் கனவா

Tuesday, July 5, 2011

அவன் உறங்காத இரவு
மெல்ல வீசும் தென்றல்
சிதறி விழும் பனித்துளி
இரவுக்கு குளிரூட்டும் மார்கழி


கூடி விளையாடும் விட்டில்பூச்சி
வெளரிய ஒளியுமாய் மின்விளக்கு
வெளிச்சவுமாய் உச்சியில் முழுநிலவு


மரங்களில் முனங்களுடன் பறவைகள்
அழும்   வாகனங்கள் உறக்கத்தில்
சபதங்கள் தொலைத்த வீதி


உயர்ந்து நிற்கும் குடியிருப்பு
உறக்கமின்றி வெட்டம் அணைக்காமல்
மூன்றாம் அடுக்கில் ஓர்அறை


பஞ்சு மெத்தை தலைகாணி
இதமாய் குளிர்ரோட்டும் படுக்கறை
எட்டி நிற்கிறது உறக்கம்


பொட்டி தெறிக்கும் சப்தம்
எதைபற்றியோ தற்க்கித்த படி
வீட்டின் தலைவனும் தலைவியும்


இடைவெளியின்றி ஓயாத சப்தம்
வாசல் திறத்து கீழிறங்கி
வீதிக்கு வந்தான் தலைவன்


வெம்பி குமறும் மனம்
உறக்கம் தொலைத்த விழிகள்
மெல்ல நடந்தான் வீதியல்


எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்


உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை


மனதை உறுத்தும் அழகியகாட்சி
சற்று சம்பித்து நிற்றவன்
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்


நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
பணமிருந்தும் எட்டாக்கனியாய் உறக்கம்


விடிய இன்னும் நேரமிருக்கு
ஏகாந்த பெருமூச்சு விட்டபடி
மௌனமாய் மீண்டும் நடந்தான்


திரும்பிப் பார்த்தான் குடியிருப்பை
இன்னும் கண் மூடவில்லை
அவன்  வீட்டு விளக்கு

Sunday, July 3, 2011

மலரை விற்ற செடிஅகம் புறம்தள்ளும் உண்மைகள்
நாவை கொமட்டும் கைப்பு
இன்றைய நாளிதழ் செய்திகள்


சுவாசிக்க வழிமறுக்கும் நாளம்
ஆவியாக கொதிக்கும் குருதிகள்
ஊடகத்தின் ஒளிக் கோப்புக்கள்


தளிராத மொட்டு மலரவள்
வாசம் தொலைத்து நிற்கிறாள்
மேய்ந்தது தந்தை வேலி


காமக் கயவர்களின் கட்டிலில்
இரவல் மலராக தளிர்மலர்
மலரை கூவிவிற்ற தந்தைசெடி


சமூகத்தின் உன்னத மேதாவிகள்
பிஞ்சுமலரில் வாசம் நுகர்ந்தவர்கள்
கொடிபோல் நீளும் பட்டியல்


விலக்கபட்ட மனித உறவுகளில்
கோரமாய் அவிழ்க்கப்படும் ஆடை
எழுதப்படாத நவ நாகரீகம்


மாதபோக்கு நின்ற பின்னும்
காளையர் சுகம் தேடுபவர்கள்
குடுமப்த்தில் தொலையும் பத்தினிகள்


பேரப்பிள்ளை வயது மலரிடம்
காமம் தேடும் கிழடுகள்
மேண்மை உடைக்கும் மனிதர்கள்


வியாதியை படரும் நவீனங்கள்
தளிரிலேயே விளையும் பயிர்கள்
நாளைய  விஷ உயிர்கொள்ளிகள்


அவனுக்கு தெரியாமல் அவள்
அவளுக்கு தெரியாமல் இவன்
இளையவர்களின்  இரகசிய உறவுகள்

உறவு உணவு உடை
விஸ்வரூபத்தில் நவ நாகரீகம்
நோய்வாய்ப்பட்டு மண்ணின் பண்பாடு

மதிகெட்ட மனிதர்களின்
அந்நிய கலாச்சாரத்தின் அலாதி
அழிவின் விளிபில் மனிதம்

Saturday, July 2, 2011

உழைப்பின் நிர்வாணம்


தொடரும் வாழ்க்கை பயணம்
அவரவர் பிழைப்பைத் தேடி
வீதியில் நிரம்பும் மனிதர்கள்


நித்தம் துரத்தும் கடமைகள்
நாழிகையை விழுங்கும் காலம்
அவசரத்தில் துவளும் மனிதர்கள்


சுழலும் பகல் இரவுகளில்
நித்த தேடலுக்கான நெட்டோட்டம்
பல வேஷமிட்டு மனிதர்கள்


மதியின் ஆற்றலை எழுப்புபவன்
உடலின் வியர்வையை ஒழுக்குபவன்
இடையே உதிரத்தை சிதறவிடுபவன்


பாட்டன் சொத்தை வளர்ப்பவர்கள்
மாத ஊதியத்திற்கு கடமைசெய்பவர்கள்
தினக் கூலிக்கு உழைப்பவர்கள்


இருப்பவன் தேடுபவன் இல்லாதவன்
எத்தனை நிறங்களில் மனிதர்கள்
இறைவனின் பேத அடையாளங்கள்


வெறுமையாய் வந்தவன் வெறுமையாய்
தேடுதலின் நிர்வாண உண்மைகள் 
ஊருக்கு அப்பட்டமான வெளிச்சம்சொந்தமற்ற அற்ப இரவல்கள்
உழைப்பைக் கொண்டு தேடுபவைகள்
முடிவின்றி தொடரும் மனிதத்தேடல்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...