Tuesday, July 26, 2011

முத்தான மூன்று முடிச்சுக்கள்


கலை அண்ணன் மற்றும் தோழி மஞ்சு அவர்களின் அழைப்பிற்கு இணைக
என் இதோ எண்ணங்களின் உணர்வுகளின் முடிச்சுக்கள் 


பிடித்த உறவுகள் 
1 .அம்மா 
2 .என்னவள் 
3 .  நன்மை மனிதர்கள் 


பிடித்த உணர்வுகள் 
1 . தாய்  பாசம் 
2  . மனையாளியின் காதல் 
3 .தனிமை   

பிடிக்காத உணர்வுகள் 
1 . கோபம் 
2 . துரோகம் 
3 .  புறம் 

முணுமுணுக்கும் பாடல்கள் 
1 . கடவுள் தந்த அழகிய வாழ்க்கை 
2 . விளக்கு ஓன்று  அணைந்துவிட்டால் 
3 . பாரதியின் பாடல்கள் 

பிடித்த திரைப்படங்கள் 
1 . ஊருக்கு நீதிசொல்லும் திரைச்சித்திரங்கள் 
2 .  நிதர்சன வாழ்க்கைச்   சித்திரங்கள் 
3 . மேண்மை சிந்தனையுள்ள சித்திரங்கள் 

அன்புத் தேவைகள் 
1 .  என்னவளின்  அரவணைப்பு 
2 . தலையணையாய் என்னவளின் மடி  
3 . உறவுகளின் சிறு புன்னகை 

வலிமையை அழிப்பவை
1 .அகத்தினில் சுயத்தினை அடிமைப்படுத்தல் 
2 . துன்பத்தில் சோகத்தை வாழவிடுதல்
3 .விழித்தும் முறிபடாத சோம்பல் 

குட்டித் தத்துவம் 
1 .உன்னைவிரும்பு உனக்கு நீ நேர்மையாக இரு 
2 .அவரவர்  கர்மங்களில் இருக்கிறது நன்மை தீமைகள் 
3 .இறைவன் ,குடும்பம் ,உறவுகள் சமூகம் கடமைகளை செய் 


பயமுறுத்தும் பயங்கள்
1 .இழைத்த பிழைகளின் மறு உருவம் 
2 . காலம் கடந்தபின்னும் முன் உயரும் வாக்குறுதிகள் 
3 .அநீதி இழைக்கப்பட்டவனின் சாபக் குரல் 

அடைய விரும்பும் நிலையான விருப்பம் 
1 .மரணத்திற்கு முன் கடமைகளை முடித்திருக்க வேண்டும் 
2 .எல்லா வல்ல இறைவனின் நேர்வழியில் இருக்கவேண்டும் 
3 .தீமைகள் கீழிறங்கி நண்மைகள் உயர்ந்து சொர்க்கவாசியாக வேண்டும் 

கற்க விரும்புவது 
1 . .என் வாழ்க்கை சார்ந்த மனிதர்களின் மனங்களை 
2 . புவி வாழ்கையின் உன்னதை இரகசியத்தை 
 3 .இம்மை மறுமை  வாழ்க்கைக்கு  தேவையான உலக நன்மை  தீமைகளை 

வெற்றி பெற வேண்டியவை 
1 . நீதிக்கு போராடும் உண்மைகள்
2 .நன்மை மனிதர்களின் நற்கர்ம முயற்ச்சிகள் 
3 .உறவுக்காகவும் ஊருக்காகவும் எதிராளியுடனான  போராட்டம்  

சோர்வு நீக்க தேவையானவை 
1 . ஓடுதல் மற்றும்  நீண்ட நடைபயணம் 
 2 . அளவில் குறையாத இரவு உறக்கம் 
3 .நகைச்சுவை உணர்வு மற்றும் நல்ல எண்ணங்கள் 

எப்போதும் தயாராக இருக்க வேண்டியது 

1 .உதவும் நல்ல மனப்பான்மை 
2 .பேதமின்றி மனிதர்களிடத்தில் புன்னகை விதைத்தல் 
3 .அவசரங்களின் மன,குண நிறங்கள் பார்க்காமல் மனம் 

முன்னேற்றத்திற்கு தேவை 
1 .சுய நம்பிக்கை 
2 . சுய தன்னடக்கம் 
3 .இடைவிடாத நல்ல முயற்சி 


எப்போதும் அவசியாமானது 
1. இறைவனின் அன்பு 
2.நம்பிக்கை எண்ணங்க்ள
3.சுய மற்றும் நன்மை உறவுகளின் பிராத்தனை 

பிடித்த தத்துவம் 

1.பேசும்முன் கேளுங்கள்
.எழுதும்முன் யோசியுங்கள்
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2.ஆயிரம் முறை சிந்தியுங்கள். 
ஒருமுறை முடிவெடுங்கள் 
3.யார் சொல்வது சரி என்பதல்,
 எது சரி என்பதே முக்கியம்


 தெரிந்தும் தெரியாது குழம்புவது 
1.உயிரின் இறையியல் தத்துவம் 
2.இந்த உலகிற்கான மனிதயியல் தத்துவம் 
3.சுய சரி மற்றும் பிழைகள்  

எரிச்சல் படுத்துபவர்கள் 
1. உண்ணுதலில் இடையூறு செய்வது 
2. ஆழ்ந்த உறக்கத்தில் இடையூறு செய்வது 
3.செயம் பணியும் இடையூறு செய்வது 

மனங்கவர்ந்த பாடகர்கள் 
1. கே .ஜே ..யேசுதாஸ் 
2.எஸ் .ஜானகி அம்மாள் 
3.பி .சுசிலா அம்மாள் 

இனிமையானவைகள் 
1.ஜீவனுள்ள  கவிதைகளை வாசித்து இரசிப்பது 
2.மனகவர்ந்த விஷயங்களை கிறுக்குவது 
3.நல்ல மெல்லிசைகளை கேட்பது 

சாதித்தவர்களின் பிரச்சனைகள் 

1.நான் இதுவரை சாதிக்க வில்லை 
2.சாதித்தவர்கள் யாரும் எனக்கு பழக்கமில்லை 
3.ஆதலால் அவர்களின் பிரச்சனைகள் தெரியவில்லை 

பிடித்த பழமொழிகள் 
1.உழைப்பே உயர்வு தரும்
2.பொன்னகை விடச் சிறந்தது புன்னகை  
3.விதைப்பதியே அறுவடை செய்வாய் 

பதிவிட அழைக்கும் மூவர் 

அப்துல்லா  சார் http://abdullasir.blogspot.com/

13 comments:

 1. //அடைய விரும்பும் நிலையான விருப்பம்...


  1 .மரணத்திற்கு முன் கடமைகளை முடித்திருக்க வேண்டும் //

  அனைத்தும் கருத்துக்களும் முத்துக்கள் தான்.

  ஆனாலும், மேற்குறிப்பிட்டிருக்கும் கருத்து என்னை வெகுவாகக் கவர்ந்தது.

  ( நண்பர்கள் குழு சேர்க்கும் “விட்ஜெட்” இணைக்கலாமே தோழா.
  புதிய பதிவுகளைக் கண்டறிய இலகுவாய் இருக்கும் அதான்.)

  ReplyDelete
 2. மிக்க நன்றி தோழரே
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்

  ReplyDelete
 3. ////
  முணுமுணுக்கும் பாடல்கள்
  1 . கடவுள் தந்த அழகிய வாழ்க்கை ///////

  இது எனக்கும் பிடித்தபாடல்...
  அந்த பாடல் பற்றி இன்னும் விவரம் அறிய....

  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

  ReplyDelete
 4. ////
  அன்புத் தேவைகள்
  1 . என்னவளின் அரவணைப்பு
  2 . தலையணையாய் என்னவளின் மடி
  3 . உறவுகளின் சிறு புன்னகை //////


  கவித்துவமாய் இருக்கிறது தங்கள் தேவைகள்...


  அனைத்தும் ரசணையுடன் உள்ளது...

  ReplyDelete
 5. அனைத்தும் வித்தியாசமான அணுகுமுறைகள்..

  ReplyDelete
 6. அன்பு நண்பரே!வணக்கம்
  என் வலைப் பக்கம் வந்து
  கருத்துரை தந்தீரகள் நன்றி
  முத்தான மூன்று முடுச்சுகள்
  சத்தானவை
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. // # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
  ////
  அன்புத் தேவைகள்
  1 . என்னவளின் அரவணைப்பு
  2 . தலையணையாய் என்னவளின் மடி
  3 . உறவுகளின் சிறு புன்னகை //////


  கவித்துவமாய் இருக்கிறது தங்கள் தேவைகள்...


  அனைத்தும் ரசணையுடன் உள்ளது..//


  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 8. //!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
  அனைத்தும் வித்தியாசமான அணுகுமுறைகள்.//

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
  மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 9. //புலவர் சா இராமாநுசம் கூறியது...
  அன்பு நண்பரே!வணக்கம்
  என் வலைப் பக்கம் வந்து
  கருத்துரை தந்தீரகள் நன்றி
  முத்தான மூன்று முடுச்சுகள்
  சத்தானவை//

  உங்களின் அன்பான வருகைக்கு
  மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 10. வணக்கம் சகோதரரே தங்கள் முத்தான
  மூன்று முடிச்சுக்கள் அத்தனையும் நிஜத்தில் முத்துக்களே!....தொடர்ந்தும் எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு....

  ReplyDelete
 11. @அம்பாளடியாள்

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 12. உங்களின் முத்தான மூன்று முடிச்சுகள் அத்தனையும் கவர்ந்துவிட்டன உங்களின்

  விருப்பங்களில் வென்றிட இறைவன் துணைபுரிவானாக

  என்னை உங்களின் பட்டியலில் இணைத்தமைக்கு நன்றி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...